நல்ல காலுக்கும் calipers


திருமணமான ஒரு ஜோடியுடன் ஒரு பட்டாளம் counselling centerக்குள் வந்தது. இந்தப் பிரச்சனைக்கு இன்று ஒரு முடிவு கட்டிவிட்டு தான் செல்ல வேண்டும் என்று திபுதிபுவென்று நுழைந்தனர். சற்று அதிர்ந்து போனேன்.


யாருக்கு முடிவு தெரியவேண்டும் என்று கேட்டேன் வந்த பெரியவர் ஆபிரகாமிடம்!


ஏலேய் அவள் எங்கே போனாள்? என்று தேடியபோது ஒரு இடத்தில் அமைதியாக உட்கார்ந்திருந்தாள், அவளைப் பார்த்து அவளுக்குத் தான் என்று சீபாவை காட்டிவிட்டு, அவள் கணவர் ராபினை தேடினார்! அவனும் ஒரு அப்பாவியாக மற்றொரு புறத்தில் பரிதாபமாக செல்போனுடன் உட்கார்ந்திருந்தான். இவங்க இரண்டு பேருக்கும் ஒரே பிரச்சனை! எப்பொழுதும் என் பேத்தி சீபா மாமியாரோடு சண்டை போட்டுவிட்டு அடிக்கடி வந்து விடுகிறாள். எத்தனை முறை தான் நாங்கள் சேர்த்து, சேர்த்து வைக்க முடியும். அதனால் தான் ஒரு முடிவு எடுத்து விடலாமா என்று யோசனையைக் கேட்க தான் உங்களிடம் வந்தோம்.


சரி, ஐயா இவ்வளவு பெரிய கூட்டமா வந்திருக்கிறீர்களே, இவங்க எல்லாம் யார்? என்று கேட்டேன்.


பெரியவர் ஆபிரகாம் கையை காட்டி இது எல்லாம் எங்க சொந்தபந்தங்கள், அதுவெல்லாம் அவங்க ஆட்கள் என்றார்.


புரிந்துகொண்டேன் சீபாவுக்கும், ராபினுக்கும் இன்னும் தொப்புள் கொடி என்பது அறுக்கப்படவில்லை என்பதை!


திருமண வாழ்க்கை என்ற பந்தத்திற்குள் கணவன், மனைவி மட்டுமே உள்ளே நுழைகின்றனர். ஆனால் திருமண பந்தத்தின் எல்லைக்குள் மாமனார், மாமியார், தாத்தா என்று எல்லாரும் நுழைந்து விட்டனர்.


திருமறையில் “இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.” (ஆதியாகமம் 2:24) என்று கட்டளையிட்டுள்ளது. ஆனால் குடும்பம் என்ற spaceக்குள் எல்லாரும் நுழைந்து முடிவெடுக்க ஆரம்பித்ததினால்  சீபா, ராபின் குடும்பம் என்ற படகு தண்ணீரில் தத்தளிக்க ஆரம்பித்ததை உணரமுடிந்தது. இவர்களை இந்த spaceல் இருந்து அப்புறப்படுத்தினால் தான் படகு மீண்டும் தண்ணீருக்குள் மூழ்காமல் காக்கப்படும் என்பதை தெளிவுபடுத்த வேண்டிய சூழல் எனக்கு ஏற்பட்டது.


குடும்ப வாழ்வில் பெற்றோர், உறவினர்கள் என்பவர்கள் பாதுகாப்பானவர்கள் தான். ஆனால் அவர்களே சில வேளைகளில் பாரமாகிப் போவதும் உண்டு. அது அவர்களுக்கே தெரியாமல் இருப்பதுதான் துரதிஷ்டமானது. முன்பு சிறு பிரச்சனை குடும்ப வாழ்வில் வரும் போது அதை ஏற்றுக் கொள்ளவும், அதைத் தாண்டி தான் வாழ்க்கை வாழவேண்டும் என்றும், பிரச்சனை இல்லாத வாழ்க்கையே இல்லை என்று பெரியவர்கள் கூறுவார்கள். ஆனால் இன்று அப்படிப்பட்ட மன நிலை முற்றிலும் மாறி விட்டது. நீ ஏன் அவனோடு  அல்லது அவளோடு இப்படி கஷ்டப்பட்டு வாழவேண்டும். விருப்பமானால், வாழ முடியுமானால் வாழ முற்படு. இல்லை என்றால் நம்முடைய வீட்டிற்கு வந்து விடு, மற்றொரு திருமணம் செய்து கொள்ளலாம் என்று தவறான வழிகாட்டுதலை கொடுக்க பெற்றோர் முன் வந்து விட்டனர்.


சீபா,ராபின் இருவரையும் தனியாக வைத்து பிரச்சனையின் ஆணிவேரை கண்டுபிடிக்க உதவினேன். பெற்றோரையும் உறவினர்களையும் தனியாக உட்கார வைத்து அதிகமான தலையீடு செய்ய வேண்டாம் என்று உறுதியாக சொல்லி அனுப்பினேன்.


சில மாதங்கள் கழித்து whatsappல் ஒரு photoவும் messageம் வந்திருந்தது. அதில் சீபாவும்,ராபினும் கல்கத்தா airportல் இருந்து இறங்கி செல்வதையும், கீழே புதுவாழ்வு தொடங்க முடிவெடுத்து தூரமாக வந்து விட்டோம், “ஆலோசனைக்கு நன்றி” என்று குறிப்பிட்டிருந்தார்கள்.


பல வேளைகளில் பெற்றோர்களும், உறவினர்களும் பிள்ளைகளுக்கு ஆலோசனை சொல்லுகிறேன் என்று அவர்கள் குடும்ப வாழ்க்கைக்குள் மூக்கை நுழைத்து விடுகின்றனர். இறுதியாக மூக்கை நுழைத்த ஒட்டகம் சும்மா இருக்காமல் கூடாரத்திற்குள்ளேயே வந்து இடத்தை ஆக்கிரமிப்பது போல் நடந்து கொள்ளுகின்றனர். தங்கள் ஆலோசனைகளை பின்பற்றி பிள்ளைகள் வாழ வேண்டும் என்று பெற்றோர் நினைப்பதை தவிர்க்க வேண்டும். 25 வயதுக்கு மேலான பிள்ளைகளால் தீர்மானம் எடுக்க முடியும் என்று நம்புங்கள். என் பிள்ளைக்கு ஒன்றும் தெரியாது! ஒன்றும் தெரியாது!! என்று நீங்களே அவர்களுக்கு வாயாக மாறி எவ்வளவு காலம் உதவி செய்ய முடியும். மீன் குட்டிகளுக்கு மீன் நீந்த கற்றுக் கொடுக்காத போது 25 ஆண்டுகாலமாக உங்களோடு வாழ்ந்து பழகிய உங்கள் பிள்ளைகள் தங்கள் காலில் நிற்பதற்கு விட்டு விடுங்கள். உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல கால் இருக்கிறது. அதற்கு எதற்கு calipers  ஆக  இருக்க விரும்புகிறீர்கள்?

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி