பெரிய மூளை
அறிவுலகில் படித்தவர்கள் குடும்பங்களில் இருந்து தான் அறிஞர்கள் தோன்ற கூடும் என்றும் உயர் சாதியில் பிறந்தவர்கள் மத்தியில் இருந்து வருபவர்கள் தான் உயர்வான பதவிகளுக்கு ஏற்புடையவர்கள் என்ற சிந்தனையும் பலருடைய உள்ளங்களில் பதிவாகி இருக்கின்றன. கலெக்டர், நீதிபதிகள், அரசின் உயர் மட்டப் பொறுப்புள்ளவர்கள் போன்றவர்களுக்கு தகுதியானவர்கள் நாங்கள் தான் என்று சிலர் மற்றவர்களை மட்டம் தட்டி வைக்கின்றனர். ஆனால் சூழல்கள் வாய்க்கும் போது எல்லா நிலையில் உள்ளவர்களும் உயர்வான பதவிகளில் அலங்கரிக்க முடியும்.
இப்பொழுது பெரிய கூடுகைகள் நடக்கும் போது இலைப்போட்டு வரிசையாக சாப்பிட உட்காரவைப்பதில்லை. மாறாக ஆளுக்கொரு தட்டை கையில் கொடுத்து உங்களுக்கு எந்த உணவு எவ்வளவு வேண்டுமோ அவற்றை எடுத்துக் கொள்ளுங்கள் என்று விட்டு விடுகின்றனர். நாம் நமக்கு விருப்பமானதை எடுத்து விளாசி விடுகிறோம். மற்றொருவர் அவருக்கு பிடித்ததை மட்டும் எடுத்து பந்தாடி விடுகிறார். நாம் எத்தனை உணவுகள் இருந்தாலும் பிடித்ததை எடுப்பது போல தான் நமது மூளைக்குள் பல காரியங்கள் சென்றாலும் சிலவற்றை மட்டும் தான் எடுத்துக் கொள்ளுகிறது. மற்றதை சீ சீ இந்த பழம் புளிக்கும் என்று விட்டு விட்டு போய் விடுகிறது. பிடித்ததை திரும்ப திரும்ப இடம் கொள்ளாத அளவிற்கு உள்ளே கொட்டி விடுகிறோம்.
இதை போன்று நமது மூளைக்கு சரியான சூழல்கள் அமையும் போது அதிலே உச்சத்தை தொட முயற்சித்துக் கொண்டே இருக்கும்.
பிளேட்டோ ஒரு முறை ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவனை அழைத்து அவனிடம் சின்ன சின்ன கணக்குகளை புதிராகப் போட்டுக் கொண்டே இருந்தார். அவன் உற்சாகமாய் பதிலளிக்க பதிலளிக்க கேள்வியை ஆழப்படுத்திக் கொண்டே சென்றார். அதற்கு அவனும் தீர்வை வேடிக்கையாகவே கூறினான். கடைசியாக அவன் முன் பெரிய கணித கணக்குகளை வைத்தப் போதும் அதை விடை கண்டு பிச்சி உதறினான்.
இந்த நிகழ்வுக்குப் பின் பிளேட்டோ ஒரு தெளிவைப் பெற்றுக் கொண்டார். எல்லாரிடமும் மூளை இருக்கிறது. அதில் பல்வேறு காரியங்களுக்கும் விடை கண்டு பிடிக்கும் ஆற்றல் உள்ளது. அந்த ஆற்றலை வெளிக் கொண்டு வருவதற்கு தான் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.
திருமறையில் சாதாரணமாக ஆடு மேய்த்த யோசேப்பு ஒரு நாட்டிற்கான வறுமையைப் போக்கும் திட்ட வரைவை உருவாக்க முடிந்தது. காட்டுக்குள் அலைந்த அதேப் போல் ஆடுகளை மேய்த்த தாவீதும் ஒரு நாட்டிற்கு பொற்கால ஆட்சியை வழங்க முடிந்தது. இவை எல்லாம் சாத்திய படுமென்றால் நமது சிறு பிள்ளைகளைப் பார்த்து உன்னால் முடியாது என்று நாம் பிள்ளைகளின் திறமைகளை மட்டம் தட்டலாமா? திறமைகள், மூளையை பயன்படுத்தும் சூழல்கள் வரும் போது அது அபாரமாக செயல்பட்டு மிளிர்வதை உலகமே கண்டு வியக்கும். அப்பொழுது உலகத்தில் உள்ள மக்கள் சொல்லுவார்கள் உன் பிள்ளைகள் அறிவு கொஞ்சம் ஜாஸ்தி என!
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Comments
Post a Comment