கொஞ்சம் ஒத்துப்போங்க


“ஒன்னே ஓன்று கண்ணே கண்ணு” என்று பிள்ளைகள் இருப்பதால் சிறு வயதிலேயே பிள்ளைகள் எல்லாவற்றையும் தனக்கென்று வைத்து பழகிவிடுகிறார்கள். பிறருடன் பகிர்ந்து வாழ்வது, ஒத்துப் போவது என்பது மிகப்பெரிய சிக்கலாக அமைந்து விடுகிறது.

Bike, Car என்று சுகமாக பிள்ளைகள் வாழ்ந்து வரும் போது பஸ்ஸில் இடித்துக் கொண்டு இடம் பிடிப்பது, போட்டிப் போட்டுக் கொண்டு செயல்படுவது என்பது மலைப் போன்று நினைக்கின்றனர். இப்படி எல்லாம் வாழ முடியுமா? என்று பிறருடன் ஒத்துப் போக முடியாமல் தவிக்கின்றனர்.

பிறருடன் ஒத்துப்போகும் (Adaptability) பழக்கத்தை பிள்ளைகளுக்குள் உருவாக வாய்ப்புகள் கொடுக்க வேண்டும். அப்பொழுது தான் பெரியவர்களான பின்பு கணவனுடனும் வேலைபார்க்கும் இடத்தில் சில ஊழியர்களுடன் இசைந்து வாழ கற்றுக் கொள்வர்.

சூழ்நிலைகள் மாறும் போது அதற்கு ஏற்றார் போல் வளைந்துக் கொடுத்து, தங்களை மாற்றிக் கொள்வது இளம் வயதுள்ளவர்களுக்கு மட்டுமல்ல, குடும்ப வாழ்வில் ஈடுபடுபவர்களுக்கும் தேவையான ஓன்று. சூழ்நிலைகளுக்கு ஏற்ப தங்களை பக்குவப்படுத்திக் கொள்ளாத பெரிய மிருகங்கள் கூட இன்று பூமியில் இல்லாமல் போய் விட்டது.   மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது. ஒத்துப் போகுதல், சூழலை ஏற்றுக் கொள்ளுதலும் இன்றியமையாதது. குடும்ப வாழ்விலும் சூழ்நிலையுடன் ஒத்துப் போகாதவர்களே மண முறிவுக்காக ஓடுவார்கள்.

திருமண வாழ்வில் ஒருவருடன் ஒத்துப் போகவில்லை என்று உதறுகிறவர்களை உடனே அடுத்த திருமணம் செய்து வைத்து விட்டால் அவர்கள் பிரச்சனைகள் முடிந்து விடும் என்று அவசரப்படக்கூடாது. அப்படி அவசரப்பட்டால் திருமண முறிவு தொடர்ந்து ஏற்பட வாய்ப்புள்ளது.

'கிலின்ஸ் கூட்டி ஊல்ப்' என்பவர் 29 முறை திருமணம் செய்து சாதனை செய்தவர். அவருக்கு 86 வயதான போது 29வது மனைவியைத் தேடிக்கொண்டிருந்தார். அவர் முயற்சி திருவினையானது 'லிண்டா எல்செக்ஸ்' என்ற ரூபவதி கிடைத்தார். அந்த அம்மாவும் நல்ல சாதனையைப் புரிந்து 23 கணவன்மார்களை divorce பண்ணியிருக்கிறார்.

நண்பர் 'கிலிண்ஸ் கூட்டி ஊல்ப்' சாதாரணமானவர் அல்ல. 19வது நாளிலே ஒரு மனைவியோடு 'காய்' என்று சொல்லி அனுப்பிவைத்தவர். இப்படிப்பட்டவரை மணந்தவர் சும்மா சாதாரணமானவர் அல்ல. இவரும் ஒரு கணவரை 36 மணி நேரத்திலே உறவு புளிச்சுப்போச்சு என்று விரட்டிவிட்டு விட்டவர்.

இப்படியெல்லாம் செய்தியை வாசிப்பதற்கு காரணம் குடும்ப வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காத தன்மையும், பிறருடன் ஒத்துப் போகும் தன்மையும் இல்லாததே! 

திருச்சபையில் கண்காணிகளை ஏற்படுத்தும் போது தீமோத்தேயுவுக்கு பவுல் குறிப்பிடும் போது “ஒரே மனைவியுடைய புருஷன்” இருந்தால் அவனை தேர்ந்தெடு என்கிறார். (1  தீமோத்தேயு 3:2). காரணம் மனைவியோடு, கணவனோடு ஒத்துப் போக முடியாதவர்கள் ஒரு கூட்ட மக்களை வழி நடத்துவதற்கு தகுதியில்லாதவர்கள் என்கிறார். குடும்ப வாழ்வில் எதிர்பாராத சூழல்களை சந்திக்கும் போது தன்னை தகுந்தவாறு மாற்றிக் கொள்வதும் சூழ்நிலையுடன் ஒத்துப் போகுதல் அவசியம். அதனை சிறப்பாக செய்பவர்கள் குடும்ப வாழ்வில் வெற்றிக் கொடி நாட்டுகிறார்கள். மற்றவர்கள் ஆகா. ஓகோ. இது என்ன வாழ்க்கை என்று பின்னங்கால் பிடறியடிக்க குடும்ப வாழ்வில் இருந்து ஓடி விடுகிறார்கள். 

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர் புத்தகம் : என் ரூபவதியே வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி