துணையை தேடி ....
திருவள்ளுவர் அறத்துபாலில் வாழ்க்கை துணையின் பெருமையை அழகுபட கூறுகின்றார்.
பெற்றார்ப் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு
“நல்ல மனைவி ஒருவனுக்கு அமைந்தால் இப்பூமியிலே பரலோகத்தில் வாழ்வதற்கு சமம்” என்று திருவள்ளுவர் கூறுகிறார். இந்த குறளுக்கு இணங்க நல்ல ஒரு பெண்ணை சிலர் கண்டு பிடித்து விடுகின்றனர். ஒரு வேளை பெற்றோர் வழியாகவோ அல்லது சுயமாகவோ. ஆனால் சிலர் தேடுதல் வேட்டையில் வயது 35 தாண்டினாலும் தடுமாறிக் கொண்டுதான் இருப்பர். அவர்களிடம் கேட்டால் ஒரு பெண்ணும் சரியாக அமையவில்லை என்று வருத்தப்பட்டுக் கொள்வார்கள். தலையில் முடி எல்லாம் வெள்ளையாக ஆரம்பிக்கும். அதனை மறைக்க டை அடித்துக் கொண்டு வாலிப வயதில் வலம் வருவர்.
ஆனால் பிரேசிலில் திருமணமாகாத பெண்கள் கண்களை சுற்றிலும் சிவப்பு நிற மையைத் தீட்டியிருப்பார்களாம். அதைப் பார்க்கும் இளைஞர்கள் இவள் திருமணமாகாதவர் என்று தெரிந்துக் கொள்வார்கள். ஓகோ இந்த பொண்ணு நமக்கு ok ஆகுமா என்று தெரிந்துக் கொள்வதற்கு வாலிபருக்கு வசதியாக இருக்குமாம். அப்படி இந்தியாவில் தான் இல்லையே!
ஆனால் சந்தோஷ் பார்க்கிற பெண்களை எல்லாம் மூக்கு நீளமாக இருக்கிறது, பல்வரிசை அசிங்கமாக இருக்கிறது என்று கழித்துக் கொண்டே இருந்தான். இறுதியாக ஒரு பெண்ணைப் பார்க்க பெற்றோர் அழைத்துச் சென்றனர். பெற்றோருக்கு பிடித்தது, மகனிடம் உனக்கு பிடித்திருக்கிறதா என்று மெதுவாக கேட்டனர்.
பிடித்திருக்கிறது, ஆனால் காது தான் முயல் காது போல் இருக்கிறது என்றான் சந்தோஷ். இறுதியாக கையை கழுவி விட்டு கிளம்பினர்.
நல்ல ஒரு பெண் அமைய மாட்டாளா என்று அலைந்த சந்தோஷ், சரோவைப் பார்த்ததும் பிடித்துப் போனது. தலை முடியை அழகாக எடுத்துக் கட்டியிருப்பதிலே மன நிறைவாக இருந்தது. டபுள் ok சொல்ல திருமணம் ஓகோ என்று நிறைவேறியது. கையோடு தேனிலவுக்கும் ஏற்பாடு செய்திருந்தனர்.
அழகான மலைப்பகுதி எழில் கொஞ்சும் இயற்கை. காற்று சற்று பலமாகவே அன்று அடித்துக் கொண்டிருந்தது. இருவரும் ஆங்காங்கே நின்று Selfie எடுத்துக் கொண்டு மகிழ்ச்சியாக இருந்தனர். ஒரு குறிப்பிட்ட மலை முகட்டில் மனைவியை நிற்க வைத்து mobileலில் படம் எடுக்க ஆயத்தமான போது காற்று பரபரவென்று அடித்தது. அதில் அவள் தலை முடி பறக்கும் போது பார்த்தவன் அதிர்ந்துப் போய் நின்றான்….
மனைவிக்கு காது மடலே இல்லை. அவள் அதனை வெளியே தெரியாத அளவிற்கு மறைத்து முடியால் அலங்காரம் பண்ணியிருந்தாள். சந்தோஷ் விழி தட்டாமல் பார்க்க...
சந்தோஷ், சந்தோஷ் என்ன இப்படி சிலையாக நிற்கிறீங்க என்றாள் சரோ.
இல்ல சரோ உனக்கு காது...
அதைப் பற்றி அப்பா உங்களிடம் சொல்லவே இல்லையா? அது பிறக்கும் போதே இல்லையே என்றாள்.
சந்தோஷ் மனது அவனுக்குள் பேசியது “'காது உள்ளவளைப் பார்த்து முயல் காது” என்றேன். இப்பொழுது ஆண்டவர் இப்படி ஒரு பெண்ணை எனக்கு கொடுத்திருக்கிறார்.
திருவசனம் பேசியது “A truly good wife is the most precious treasure a man can find…. There are many good women, but you are the best” (Proverbs 31:10,29).
சந்தோஷ் சுதாகரித்துக் கொண்டு மனதைத் தேற்றிக் கொண்டு அடுத்த Selfieக்கு ஆயத்தமானான்.
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Comments
Post a Comment