Relax Please
ஓய்வு நாள் பாடசாலையில் இரண்டு சிறு பிள்ளைகள் சண்டைப் போட்டுக் கொண்டிருந்தது. அப்பொழுது 8 வயது இருக்கும் அந்த சலோமி என்ற சிறுமி மற்ற சிறுமியைப் பார்த்து என்னிடம் பேசாதே, நான் ரொம்பவும் stress ஆகி இருக்கிறேன், என்னை tension ஆக்காதே என்று கத்தினாள்.
இதைக் கேட்டப் போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இவ்வளவு பெரிய வார்த்தைகளெல்லாம் எப்படி பிள்ளைகள் எளிதாக பயன்படுத்துகிறார்களே என்று மனதில் நினைத்து ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தேன்.
மதியம் 11 மணிக்கு திருமறைத் தேர்வு ஆரம்பமாக இருந்தது. பிள்ளைகளின் பெற்றோர் ஆலயத்திற்கு வெளிப்புறத்தில் நின்றார்கள். பிள்ளைகளெல்லாம் உள்ளே ஆலயத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். அப்பொழுது ஒரு தாய் தன்னுடைய பிள்ளையிடம் கடைசி நிமிடம் வரை Bible யை கொடுத்து படிக்கச் சொல்லி கேள்விக் கேட்டுக் கொண்டே இருந்தார்கள். அந்த தாயைப் பார்த்தேன் மிகவும் tension ஆக இருந்தார்கள். தன் மகள் தான் முதல் மதிப்பெண் பெற வேண்டும். பக்கத்து வீட்டு அனனியாவைக் காட்டிலும் முந்தி விட வேண்டும் என்று எச்சரித்து அனுப்பினார்கள். அது வேறு யாருமல்ல சலோமியின் அம்மாதான்.
இன்றும் முழுகுடும்பமும் டென்சனாகவே அலைந்துக் கொண்டிருக்கிறது. வயது வித்தியாசம் இல்லாமல் அவரவர்களுடைய நிலைமைக்கேற்ப மன அழுத்தத்தில் குடும்பங்கள் மூழ்கி கிடக்கிறது.
பிள்ளைகளுக்கு வாழ்க்கையில் என்னவாக வேண்டும் என்று கவலை இருக்கிறதோ, இல்லையோ பெற்றோருக்கு அதிகமாக இருக்கிறது. அதிலும் எதிர்வீட்டுக்காரன், சகோதர, சகோதரிகளின் பிள்ளைகளைக் காட்டிலும் தங்கள் பிள்ளைகள் நம்பர் 1 ஆக திகழ வேண்டும் என்பதிலேயே மன அழுத்தம் அதிகமாகி விடுகிறது.
குடும்பங்கள் சின்னதாகக் காணப்பட்டாலும் அதற்குள்ளும் ஒப்பீடு அதிகமாகி உள்ளது. உறவினர்களின் பிள்ளைகளின் வெற்றியை நம்மால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதுவே மன அழுத்தத்தை உங்களுக்கு உண்டாக்குமென்றால் நம் மனதை நாம் சரிச் செய்துக் கொள்ள தவறி விட்டோம் என்று தான் அர்த்தம்.
உலகில் எல்லாருக்கும் அவரவர் வேலைக்கு ஏற்ப பிரச்சனைகள் அழுத்தங்கள் என்பது உயர் அதிகாரிகளால் கொடுக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கும். அவை நல்ல முயற்சி எடுப்பதற்கு உதவியாக இருந்தால் தவறு இல்லை. ஆனால் அதுவே நம்மை முடமாக்கி விடக் கூடாது. இது போட்டி நிறைந்த உலகம் தான் இதில் வரும் மன அழுத்தங்களை இலகுவாக எடுத்துக் கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும்.
மன அழுத்தங்களில் இருந்து வெளிவர திரு.கோபிநாத் அவர்கள் சில வழிமுறைகளை எளிமையாக குறிப்பிடுகிறார். நாம் நம்முடைய சூழலுக்கு ஏற்ப முயன்றுப் பார்க்கலாம்.
குடும்பங்களில் நடைபெறும் வீடு பிரதிஷ்டை, திருமணம், மரணம், ஆலய பிரதிஷ்டை, பண்டிகைகள் போன்ற காரியங்களில் கண்டிப்பாக பங்கு பெற வேண்டும். இவ்வாறு குடும்பத்தின் மக்களோடு கூடும் போது ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்ளுவோம். அப்பொழுது நமக்கு ஒரு பின்புலம் இருக்கிறது என்பது மனபலத்தை கூட்டும், எதிர்த்துப் போராடலாம் என்ற உணர்வு வரும். உறவினர்கள், “நாங்க இருக்கிறோம் பார்த்துக் கொள்ளலாம்” என்று உரம் ஏற்றி விடுவார்கள்.
வாழ்க்கையில் வரும் சிறு சிறு காரியங்கள் எல்லாவற்றையும் உடனடியாக முடித்து கையை கழுவி விடுங்கள். பாரத்தின் மேல் பாரத்தை ஏற்றினால் மனது தாக்கு பிடிக்காமல் கூனி குருகி விடுவோம்.
ஓய்வு நாளாகிய ஞாயிற்று கிழமைகளில் கடைகளைத் திறப்பதும், business என்று வீட்டில் இருக்காமல் ஓடுவதையும் தவிர்த்து விடுங்கள். குடும்பமாக ஆலயத்திற்கு சென்று மகிழ்ச்சியோடு குடும்பமாக சமையல் செய்து பேசி மகிழ்ந்து சாப்பிடுங்கள். T.V, Cell, Computer போன்றவைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை குறைத்துவிடுங்கள்.
மிஷின் மாதிரி 24x7 என்ற work செய்வதைத் தவிர்த்து விடுங்கள். எப்பொழுதும் பிஸியாகவே காட்டிக் கொள்ள ஆரம்பித்தால் மன பாரத்தை இறக்கி வைக்க வழி இல்லாமல் போய் விடும். எனவே பொறுமையோடு யோசித்து தங்கள் வேலைகளைச் செய்வதற்கு என்று நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள்.
திருமறையில் 10 கட்டளைகளை கர்த்தர் மோசேயின் வழியாக இஸ்ரவேல் ஜனங்களுக்கு வழங்கினார். அதில் ஒரு கட்டளை "ஓய்வு நாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக. ஆறு நாளும் நீ வேலை செய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக ... யாதொரு வேலையும் செய்ய வேண்டாம்". (யாத்திராகமம் 20: 8-11). ஏறக்குறைய 4000 வருடங்களுக்கு முன்பாகவே ஆண்டவர் relax please என்று சொல்லி வைத்துள்ளார். ஆனால் மனிதர்களாகிய நாம் ஞாயிற்றுக்கிழமையும் கடையைத் திறந்து வைத்துக் கொண்டு கல்லாப் பெட்டியை நிரப்பும் ஆசையில் ஆலயத்திற்குச் செல்லாமல், குடும்பத்தை கவனியாமல், வேலை வேலை என்று வாழ்க்கையை நடத்தி விட்டு sugar, stress, tension என்று மருத்துவரிடம் நடையாய் நடந்துக் கொண்டிருக்கிறோம். Bro & Sisters, relax Please!
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Comments
Post a Comment