குடும்பத்திற்குள் ஆதிக்கம்


இரண்டு விரிவுரையாளர்கள் குடும்பத்திற்குள் திருமணம் மிக ஆடம்பரமாக நடந்தது. இருவருடைய பிள்ளைகளும் மிகவும் துருக்கானவர்களாகவும், தங்கள் வேலைகளில் கில்லாடிகளாகவும் காணப்பட்டனர். குடும்ப பின்னணியத்திலும், படிப்பிலும், பணத்திலும் உயர்தட்டு மக்களாகவே தங்களை திருமண வைபவத்தில் காட்டிக் கொண்டனர்.


ஜிம் வெளி நாட்டு கம்பெனியில் பணிபுரிபவன். அடிக்கடி பல்வேறு நாடுகளுக்கு பறப்பவன். தான் வெளியிடங்களுக்குச் சென்றாலும் தன் மனைவியை சரியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று மனக் கனக்குப் போட்டு கொண்டுதான் கைப் பிடித்தான். ஜிம் பெயருக்கு ஏற்றாற் போல் ஜூலியும் அரசாங்கத்தில் பணிபுரியும் உயர் அதிகாரியாக காணப்பட்டாள். இவள் பலரை தனக்கு கீழ் வைத்து வேலை வாங்குபவள். சுயாதீனமாக வாழ கணவன் அனுமதிக்க வேண்டும், கணவன் வெளிநாடுகளுக்கு சென்றாலும் அவ்வப்போது அங்கு நடக்கும் விஷயங்களை News கொடுக்க வேண்டும் என்று அவளும் ஒரு கணக்கு ஒன்றை வைத்துக் கொண்டு ஜிம் உடன் கை கோர்த்தாள்.


திருமணமான சில மாதங்களுக்குள்ளே குடும்பத்தில் யார் dominant என்ற கேள்வி எழும்ப ஆரம்பித்தது. திருமண நிச்சயதார்த்தம் முடிந்ததும் ஜிம் மிகவும் பணிவானவனாகவும், ஜூலி சொல்வதை தட்டாமல் மிகவும் மிருதுவானவனாகவும் தன்னைக் காட்டிக் கொண்டான். ஆனால் திருமணமான அடுத்த மாதத்திலிருந்து கடினமாய் பேசுபவனாகவும், கட்டளையிடுகிறவனாகவும் மாறிப் போய் விட்டது ஜுலிக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது.


ஜூலியும் ஜிம் உடன் நாம் இருவரும் வெளிப்படையாக  இருக்க வேண்டும் என்று கூறி உங்களுடைய mail id யைச் சொல்லுங்கள், எந்த account ல் எல்லாம் பணம் போட்டிருக்கிறீர்கள். அவைகள் எல்லாவற்றிலும் என்னை joint பண்ணி joint a/c ஆக மாற்றுங்கள் என்ற போது ஜிம்முக்கு தலை சூடேறியது. இது என்ன அளவுக்கு மிஞ்சி நம்மை கட்டுப் பண்ண விரும்புகிறாளே என்று எரிச்சல்படத் தொடங்கினான்.


பதிலுக்கு ஜிம் அவளுடைய mail id, மற்றும் அடிக்கடி chat பண்ணி என்ன செய்துக் கொண்டிருக்கிறாள், வேலை முடிந்ததும் வீட்டிற்குச் செல்லுகிறாளா? இல்லையென்றால் பணிச் செய்யும் மக்களோடு வேறு எங்கும் செல்லுகிறாளா என்று whatsapp callல்  பேசி locationயை தெரிந்துக் கொண்டு வேவு பார்க்க, control பண்ணத் தொடங்கினான். இருவரும் ஒருவர் மீது மற்றவர் ஆதிக்கம் செலுத்த தந்திரமான advance ஆன வழிகளைத் தெரிந்து கொண்டனர்.


பெற்றோர்களும் தங்கள் பங்கிற்கு தங்கள் பிள்ளைகள் தான் குடும்பத்தில் ஆதிக்கம் செலுத்த தூபம் காட்டினார்கள். இரண்டு பேரும் தங்கள் கொடி தான் வீட்டில் பறக்க எண்ணி போர் கோடி தூக்கினர். இறுதியில் அடுத்தவர்கள் குடும்பத்தில் உள்ளவர்களை பிரித்துவிடவும், தொடர்பு வைப்பதை கட்டுப்படுத்தவும் அடுத்த அஸ்திரத்தைத் தொடுத்தனர். உன் பெற்றோர் தான் குடும்பத்தைக் கெடுக்கின்றனர் என்று ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டினர்.


Dominant பண்ண விரும்பிய அந்த குடும்பம் இறுதியில் குடை சாய்ந்து தனித் தனியே வாழ வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகி விட்டது. ஏனென்றால் இவர்கள் யாரிடமும் counselling செல்ல விரும்பாதவர்கள். நாங்கள் படித்தவர்கள். எங்களாலேயே எங்கள் பிள்ளையின் குடும்பத்தை நிலை நிறுத்த முடியாத பட்சத்தில் உலகத்தில் யாரும் சரி செய்ய முடியாது என்ற கவுரத்தால் “கௌரவ குடும்ப பிரிவு” செய்து முடித்தனர்.


திருமறை எவ்வளவு பெரிய பணக்காரர்களாக இருந்தாலும், எவ்வளவு உயர்ந்த பதவி வகித்தாலும் நடைமுறை வாழ்க்கை எப்படி வாழ்ந்தால் குடும்பம் குடை சாயாமல் இருக்கும் என்பதை நமக்கு சுட்டிக் காட்டுகிறது. "நீங்கள் தேவனால் தெரிந்துக் கொள்ளப்பட்ட பரிசுத்தரும், பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும் தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக் கொண்டு: ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர் பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுப் போல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்" (கொலோசெயர் 3:12,13) என்று திருமறை வாழ்க்கை நடைமுறையை எடுத்துக் காட்டுகிறது. யார் பெரியவர் என்பது இன்றைய போட்டியாக குடும்பத்திற்குள் காணப்படலாம். ஆனால் மனத்தாழ்மையாய், சாந்தமாய் வாழவே திருமறை அழைக்கிறது. இறுமாப்பாய் ஒருவரை ஒருவர் தாழ்த்தி முன்னுக்கு வர வேண்டும் என்று கொடி பிடித்தால் வாழ்க்கை நரகமாகி விடும். திருமறை வார்த்தை தான் நமக்கு வாழ்க்கையின் அளவு கோல்.   நாகரீகம் வளரலாம் அதற்காக திருமறை ஒத்து வராது என்று தூக்கி தூர வைத்து விட்டால், குடும்ப வாழ்விலிருந்து நீங்கள் நிரந்தரமாக வெளியே போய் விடுவீர்கள் என்பது நிச்சயம். 


இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற 
Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php


Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி