Screen Addiction
ஒரு நாள் வயதான பெரியவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அப்பொழுது தன் பேத்தியையும் நான் தான் பார்த்துக் கொள்ளுகிறேன். வயது 3 தான் ஆகிறது. ஆனால் எனக்கு ஒரு தொந்தரவுமே தரமாட்டாள் என்றார்.
சின்னப்பிள்ளை தொந்தரவுப் பண்ணாமல் எப்படிப் பார்த்துக் கொள்வீங்க? என்று கேட்டேன்.
அது மிகவும் easy தான். என் மகள் அவளுக்கு ஒரு cell வாங்கிக் கொடுத்திருக்கிறாள். அதைப் பார்த்துக் கொண்டே இருப்பாள். சாப்பிட ஏதாவது வேண்டுமென்றால் கேட்பாள். நான் எடுத்து அவள் அருகில் வைத்தால் போதும் அவள் சாப்பிட்டுக்கொண்டே cell யைப் பார்த்துக் கொண்டிருப்பாள் என்றார்.
எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. எதிர்பாராமல் ஒரு நாள் இரவு அவர் வீட்டிற்கு சென்றிருந்தேன். அந்த குழந்தை சோபாவில் சரிந்து உட்கார்ந்துக் கொண்டு cell யை காலில் வைத்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தாள். நான் சென்றதைக் கூட அவள் கணக்கில் வைத்துக் கொள்ளவில்லை. அவ்வளவு ஆர்வமாக cell ல் cartoon பார்ப்பதில் மூழ்கி இருந்தாள். சிறுவயதிலேயே பிள்ளைகள் தொந்தரவு செய்யாமல் இருப்பதற்காக, நமது சுயநலத்திற்காக சிறு பிஞ்சுகளை “திரை அடிமைத்தனத்திற்குள்ளாக (Screen Addiction)” மாற்றுவது எவ்வளவு அபாயம் என்பதை பெரியவர்கள் உணரவில்லையே என்று என் மனம் வருந்தினேன்.
இளைய தலை முறை எவ்வாறு cellக்குள் மூழ்கி கிடக்கிறது என்பதைக் குறித்து சென்னை லயோலா கல்லூரி visual communication துறையின் முதுகலை மாணவர்கள் ஒரு ஆய்வை தென் தமிழகத்தில் நடத்தியுள்ளனர். அது 2000 பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் நடத்தப்பட்டது. இவர்களின் சராசரி வயது 15 முதல் 19 வரைதான். இவர்கள் தினந்தோறும் 3 மணி நேரத்திற்கும் அதிகமாக வலைத்தளத்திற்குள் வழுவி விழுந்து கிடக்கின்றனர். இவர்களுக்கு 2 GB என்பது ஒரு கொசுரு மாதிரி. அம்மா அப்பா இல்லாமல் 1 மணி நேரம் இருக்கும் பிள்ளைகளுக்கு வலை தளம் இல்லாமல் 1 மணி நேரம் கூட 13.3% இருக்க முடியவில்லையாம்.
Whatsapp தினமும் 2 மணி நேரமாவது பார்த்தால் தான் 68% பேருக்கு திருப்தியாக இருக்கிறதாம். Pubg, free fire என்று video gamesல் சாதாரணமாக 3 மணி நேரமெல்லாம் அசால்டா 72% பேருக்கு போய் விடுகிறதாம்.
குறைந்தது 1 மணியிலிருந்து 3 மணி நேரமாவது Youtube பார்த்தால் தான் திருப்தியாக இருக்கிறதாம். OTT தளத்தில் 67.7% பேர் தங்கள் நேரத்தை செலவிடுகின்றனராம். 30% பேர் வயது வந்தோருக்கான இணையதளத்தில் உலாவருவதும் உண்டாம்.
இப்படியெல்லாம் உலகமே இணையதளத்தில் இணைந்து செல்ல பக்கத்து வீட்டுக்காரர்கள் யார் என்றே தெரியாமல் போய் விடுகிறது. நண்பர்கள் என்றால் facebook நண்பர்கள் தான். சொந்தமென்றால் youtube groupல் உள்ளவர்கள் தான். பேசிக்கொள்ள Twitter இருக்கிறது. அப்புறம் எதற்கு வீண் பயணங்கள்! சொந்தங்கள்!! இருந்த இடத்தில் இருந்தே எல்லாம் முடித்து விடலாம் என்று நினைக்கிறீர்களா?
கொரானா வந்த போது எந்த facebook, youtube நண்பர்களாவது வந்து உங்களை பார்க்க வந்தார்களா? ஒரு வேளை உணவு கொடுக்க வந்திருப்பார்களா? மூச்சு விட தடுமாறிய போது உங்கள் உறவுகள் தானே உயிரையும் பெரிதாக கருதாமல் உங்களோடு இருந்தார்கள். மாயையான உலகில் வாழ்ந்து தடுமாறாதிருங்கள்.
இணையதளம் உங்களுக்கு வாழ்வை தரப்போவதில்லை. "மாயை, மாயை, எல்லாம் மாயை என்று பிரசங்கி சொல்லுகிறான். காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும் நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார்."(பிரசங்கி 12:8,13,14). எனவே வாழ்க்கையில் இணைய தளத்தைத் தேவைக்கு மட்டும் பயன்படுத்தி விட்டு, தூரமாக கன்னுக்குத் தெரியாமல் வைத்து விட்டு நமது கடமையைச் செய்தால் 'காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளலாம்'. இல்லையென்றால் நேர விரயத்தினால் வாழ்வில் முன்னுக்குச் செல்ல வேண்டிய நீங்கள் 'Screen Addiction திரை அடிமைத்தனத்தால்' வீழ்ந்து போவீர்கள்.
ஆலயத்திற்கு செல்லும் போது, முக்கியமான கூடுகைக்கு செல்லும் போது cell யை எடுத்துச் செல்லாதிருங்கள். கையில் இருந்தால் தான் open செய்ய வேண்டும் என்ற எண்ணம் வரும். கையில் இல்லையென்றால் சிந்தனையில் தெளிவும், நேர்மையான செயல்பாடுக்கு நேரம் செலவிடவும் முடியும்.
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Comments
Post a Comment