என்னிடத்தில் வேறு ஒன்றும் இல்லை!


தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு இளம் தம்பதியினர் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். தொழில் செய்வதற்காக பணத்தைப் புரட்டி சிறப்பாக நடத்தி வந்தனர். எதிர்பாராத புயல் வியாபாரத்தில் வீச ஒரு அடி முன்னேறினால் இரண்டு அடி சறுக்கியது. வியாபாரத்தை நிலைநிறுத்த கடன் வாங்கி சமாளிக்க ஆரம்பித்தார். ஆனாலும் நான் முன்னேறுவேனா என்ன என்று மறுத்தது வியாபாரம். கடன் கொடுத்தவர்கள் வட்டி கேட்டு நச்சரிக்க ஆரம்பித்தனர்.

கடன்காரர்கள் வீட்டு வாசல் படியில் ஏறி வாய்க்கு வந்ததையெல்லாம் பேசும்போது மனைவி, பிள்ளைகள் எல்லாருமே மன அளவில் பாதிக்கப்பட்டு விடுவார்கள். அப்படித்தான் இந்த ராஜா மனமடிவானார். குடியிருந்த வீட்டை விற்று கடனை அடைக்க முயன்றார். இருப்பினும் கடன் வாழ்வை கசக்க வைத்தது. இந்த மன உளைச்சலில் ஒன்றும் அறியாத 11 வயது செல்ல மகனை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, கணவன் மனைவி தற்கொலை செய்து கொண்டனர்.

இவ்வாறு பல்வேறு பிரச்சனைகளை மேற்கொள்ள முடியாமல் தற்கொலைக்கு முயலும் போது மற்றவர்கள் என்ன செய்ய வேண்டும்? தற்கொலை என்பது ஒருவரின் தனிப்பட்ட முடிவாக இருப்பதால் இதனை மிகவும் கவனமாக கையாள வேண்டும். தற்கொலைக்கு முற்படும் நபர் தனியாகவே இருக்க முயலலாம். ஆனால் தனியாகப் பேசுவதற்கு ஊக்கப்படுத்த வேண்டும். அவர்கள் மனதில் உள்ள பிரச்சனையை வெளிப்படையாக கூறுவதற்கு வாய்ப்புக்கள் கொடுக்கவேண்டும். மனைவியிடம் ஒரு கணவன் வியாபாரத்தில் வரும் தோல்வியை, கடன் பிரச்சினையை கூறும்போது, “ஐயோ இப்படி ஆயிற்றா” என்று சேர்ந்து அழுது, கணவனை இன்னும் துக்கத்திற்கு கொண்டு போய் விடக்கூடாது. மாறாக நம்பிக்கை ஊட்டும் விதத்தில், “பரவாயில்லை, உங்களுக்கு திறமை இருக்கிறது. உங்களுக்கு வயது 40 தான். உங்களால் சம்பாதித்து இந்த கடனை அடைக்க முடியும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. முயன்று பாருங்கள். நான் இறைவனிடம் மன்றாடுகிறேன். உங்களுக்கு ஒத்தாசையாக இருக்கிறேன்” என்று தைரியமூட்ட வேண்டும். 

ஒருவரின் பிரச்சனையை தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது. இவன்/ள் வீணாகச் செலவிட்டு விட்டாள்/ன். நான் அப்பொழுதே சொன்னேன் என்று பேசி ஒருவரை கழற்றி விடவோ அல்லது நம்பிக்கை இழக்கும் அளவிற்கு பேசவோ கூடாது. “இனி உங்களால் ஒன்றும் செய்யமுடியாது” என்று எந்த விதத்திலும் பேசுவதை தவிர்க்க வேண்டும்.

தற்கொலைக்கு முயலலாம் என்ற சூழல் வரும்போது அவர்களுடன் நேரம் செலவிட அவர்கள் குடும்பத்தினர் ஆயத்தமாக இருக்கவேண்டும். எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கையின்மை வெளிப்படுத்துவர். அவர்கள் எவ்வளவு நேரம் சொன்னதையே சொல்லி புலம்பினாலும், குடும்பத்தினர் நம்பிக்கை தளராத வார்த்தைகளை அருகில் இருந்து கூற முற்படவேண்டும். விஷம், கத்தி போன்ற பொருட்கள் அவர்கள் அறையில் இல்லாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக மனச்சோர்வு அதிகமாக இருப்பின் மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று சிகிச்சை பெறுவது நல்லது.

திருமறையில் சாறிபாத் ஊரிலுள்ள விதவை வறுமை நிமித்தமாகவே சாவை நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருந்தாள். ஆனால் இறைவாக்கினர் எலியா அவளோடு பேசுகிறார். அவள் நிலைமை சரியாகும் என்று நம்பிக்கை ஊட்டுகிறார். கடவுள் வறுமையின் வழியாக கடந்து செல்லும் சூழல் வந்தாலும் கைவிடவே மாட்டார் என்பதை கூறி நம்பிக்கையூட்டுகிறார். (1 ராஜாக்கள் 17:8 to 15) தரித்திரத்தை மாற்றுவதற்கு இறைவன் வல்லமையுள்ளவர். எல்லா மிருகஜீவன்களுக்கும் ஆகாரம் கொடுக்கும் இறைவன் உங்களையும் பராமரிப்பார் என்ற நம்பிக்கையை கொடுங்கள். தற்கொலையில் இருந்து ஒவ்வொரு ஆத்துமாவையும் விடுவியுங்கள்.

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு :  நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி