மைக்ரோஸ்கோப் பார்வை


ஆஷிகாவுக்கும் அவள் கணவர் ஜோன்ஸ்க்கும் இடையே பிரச்சனை பெரியதாகி பிரிந்து வாழ்ந்தனர். ஜோன்ஸின் நண்பர் ஸ்டான்லி எப்படியாவது தனது நண்பன் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று ஆசைபட்டான். எனவே அடிக்கடி ஆஷிகாவிடமும், ஜோன்ஸ் உடனும் பேசி பிரச்சனையை தீர்க்க முயற்சி எடுத்தான்.

ஸ்டான்லியின் செயல்பாட்டால் பிரிந்த குடும்பம் ஓன்று சேர வழி பிறந்தது. மனம் விட்டு பேச வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்ததால் இருவரும் காரசாரமாக பேசிக் கொண்டனர். ஆஷிகா தன்னுடைய தவறை உணர்ந்தாள். இனி நான் எந்த தவறும் செய்ய மாட்டேன் என்று ஒத்துக் கொண்டாள். ஆனால் என்று இழுத்தாள்...

என்ன matter மனம் விட்டு சொல்லுங்க ஆஷிகா என்று கேட்டான் ஸ்டான்லி.  

இல்ல... நான் தவறு செய்ததை ஒத்துக் கொண்டேன். ஆனால் இதை எப்பொழுதும் சொல்லி சொல்லி என்னை புண்படுத்தக்கூடாது என்பதை மட்டும் கண்டிப்பாக உங்கள் நண்பரிடம் சொல்லி விடுங்கள். இதை இப்பொழுது நீங்கள் சொல்லாவிட்டால் பழைய குப்பையை உங்கள் நண்பர் நேரம் காலம் பார்க்காமல் கிளரிக்கிட்டே இருப்பார். என்னை நிம்மதியாக வாழ விட மாட்டார் என்றாள் ஆஷிகா.

பலவேளைகளில் செய்த ஒரு தவறை மட்டும் வைத்துக் கொண்டே பேசி பேசி வாழ் நாள் முழுவதும் பிறரை புண்ணாக்கி விடலாம். இன்றும் சிலர் மைக்ரோ ஸ்கோப் மூலமாகவே கணவன்/மனைவியைப் பார்த்துக் கொண்டே அலைவார்கள். சின்ன சின்ன விஷயத்தையும் பெரிதான தவறு நடக்க போவது போல் கற்பனைச் செய்துக் கொண்டு, இப்படியே  விட்டு விட்டால் குடும்பமே பாழாய் போய் விடும் என்று சண்டையிட்டு வாழ்வை நரகமாக்கி விடுவார்கள். மன்னிப்போம், மறப்போம், வாழ்வோம் என்ற நிலையை உருவாக்கிக் கொண்டால் தான் வாழ்க்கையில் ஒரு மகிழ்ச்சி கிடைக்கும்.

புத்தரிடம் பலர் மன அமைதியைப் பெற வருவது உண்டு. சிலவேளைகளில் அவரை திட்டுவதற்கு வருவதும் உண்டு. அப்படித்தான் ஒரு நாள் ஒரு  குடும்பத்தலைவனின் பிள்ளைகள் சொத்து சுகத்தை விட்டுவிட்டு  ஆசிரமத்தில் சேர்ந்ததை நினைத்து, கோபத்தோடு ஆசிரமத்திற்குள் நுழைந்து, அவரை கன்னத்தில் அறைந்து விட்டான்.

சற்றும் எதிர்பாராத புத்தர் அடித்த அவனைப் பார்த்து சிரித்தார். எந்த விதமான கோப வார்த்தைகளை பதிலுக்குச் சொல்லாமல் அமைதியோடு இருந்தார். இதைப்பார்த்த அந்த மனிதனுக்கு ஆச்சரியமாக இருந்தது. என்ன இந்த மனிதன் ஒரு வார்த்தையும் சொல்லவில்லையே என்று யோசித்துக் கொண்டே போனவனுக்கு, இரவு முழுவதும் தூக்கமே இல்லாமல் போய் விட்டது.  

காலையில் எழுந்ததும் ஆசிரமத்தை நோக்கி கால் விரைவாக நடக்க ஆரம்பித்தது. புத்தரைப் பார்த்ததும் Very Sorry என்றான்.

புத்தர் அவனிடம், “எதற்காக?” என்றார்.

அந்த மனிதன், “நேற்று உங்களை கோபத்தில் கன்னத்தில் அறைந்தேனே அதற்காகத் தான்” என்றான்.

"அப்படியா, அந்த மனிதன் இங்கே இல்லையே, எப்பொழுதாவது அந்த மனிதனை நான் சந்தித்தால் நீ அவனிடம் மன்னிப்புக் கேட்டதாக சொல்லுகிறேன். ஆனால் இப்பொழுது இந்த ஆசிரமத்தில் இருக்கும் நபருக்கு நீங்கள் எந்த தவறும் இழைக்கவில்லை” என்று புத்தர் கூறியதும் மன்னிப்பு என்பதின் மேன்மையைப் புரிந்துக் கொண்டவனாக விடை பெற்றான். 

மன்னிப்பு பற்றிய யாக்கோபு, ஏசாவின் உரையாடல் திருமறையில் இனிமையாக விளக்கப்பட்டுள்ளது. தவறு புரிந்த யாக்கோபு தன் சகோதரன் தன்னை மன்னிக்க வேண்டும், தன்னை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக வெகுமதிகளையெல்லாம் அனுப்பி ஏசாவை cool பண்ண விரும்புகிறான். ஆனால் ஏசா ஏற்கனவே யாக்கோபுவை மனப்பூர்வமாக மன்னித்து விட்டான்.

தன்னை மன்னித்த தன் சகோதரனின் முகத்தைப் பார்த்த போது தேவனுடைய முகத்தைக் கண்டது போல் இருக்கிறது என்கிறார் யாக்கோபு. (ஆதியாகமம் 33:10). மன்னிப்பவர் கடவுளுடைய பிரதிநிதிகளாக மாறி விடுகிறார்கள். குடும்ப வாழ்வும் மன்னிக்கும் வரையில் அதற்கு வயது கூடும். மன்னிக்க எப்பொழுது மறுக்கிறோமோ அப்பொழுதே உறவு என்பது பட்டுப்போய் விடும். ஆண்டவரே நாங்கள் மகிழ்ந்திருக்கும் படி நீர் எங்களை திரும்பவும்  உயிர்பிக்க மாட்டீரோ?

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு :  நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி