ஆயுள் அதிகரிக்க வேண்டுமா?
திருமண வீடுகளுக்கு செல்லும்போது “மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு” என்ற பாடலை பாடுவார்கள். அப்படி பாடும் போதெல்லாம் அடிக்கடி மக்கள் தவறாகவே பாடுவார்கள். குறிப்பாக “அவளை இல்லாதவன் ஒரு பாவி” என்று பாடுவார்கள்.
இப்படி ஒரு மணமகன் வாழ்த்து ஜெபக்கூட்டத்தில் பாடிக்கொண்டிருந்தனர். உடனே அதை சரி செய்யும் வண்ணமாக செய்தி வேளையில் “அவளை இல்லாதவன் ஒரு பாதி” என்று பாடுங்கள் என்று திருத்தி கூறினேன். இவ்வாறு பாடாவிட்டால் வாலிபர்கள் எல்லாம் பாவி ஆகிவிடுவார்கள். வீட்டிற்கு போன உடனே அம்மா, எனக்கு ஒரு பெண்ணைப் பார்த்து உடனே திருமணம் செய்து வையுங்கள். நான் எவ்வளவு நாள் தான் பாவியாக இருப்பது என்று கேட்பார்கள் என்று கூறினேன்.
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த ஒரு 35 வயது இளைஞன் என்னிடம் தனியாக வந்து, “ஐயா, நான் ஒரு பாவி. நான் திருமணம் செய்யாமல் என் வயதான பெற்றோரை பராமரித்து வாழ்ந்தாலே போதும் என்று நினைத்து வாழ்ந்து வந்தேன். ஆனால் உங்கள் செய்தியை கேட்டபோது திருமணம் செய்து கொள்வது நல்லது என்று தோன்றுகிறதே!” என்றான்.
உடனே பரவாயில்லையே நம்ம செய்தி அவனுக்கு பிரயோஜனமாக இருந்திருக்கிறது. போகிற வழியிலே காகம் இதை பொறுக்கி விட்டு போய்விடக்கூடாது என்று கேட்ட வார்த்தைக்கு சக்தியை சேர்க்க ஒரு புள்ளிவிபரத்தை ஆணி அறைந்தால் போல் தலையில் அறைந்து விட்டேன். இதோ அந்த புள்ளிவிபரம்.
இது அமெரிக்காவில் நடந்தது. 29 முதல் 59 வயது வரையில் உள்ள இருபால் மக்களிடம் நடத்தப்பட்டது. அதில் உள்ள கண்டுபிடிப்பு என்னவென்றால்,
திருமணம் செய்து வாழ்கிற ஆண்களுக்கு ஆயுள் 2 வருடம் கூடுகிறதாம்! அதேபோல் சந்தோஷமாக குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுகிற குடும்ப பெண்களுக்கு ஒரு வருடம் ஆயுள் கூடுகிறது.
ஒருவேளை கணவனை divorce பண்ணிவிட்டு ஒரு பெண் தனியாக வாழ்ந்தால் ஆயுளில் 2 ஆண்டு out.
அதேபோல் மனைவியை divorce பண்ணி வாழப்போகிறேன் என்று ஒரு ஆண் வாழ்ந்தால் ஆண்களுக்கு ஆயுளில் ஒரு ஆண்டு out.
தம்பி நல்லா கவனிச்சுக்கோ திருமணமே பண்ணிக் கொள்ளாமல் தன்னந்தனியனாய் வாழ்ந்தால் ஆயுளில் 3 ஆண்டுகள் மைனஸ். என்ன யோசிக்கிறாய் என்று கேட்டுவிட்டு கண்ணை மூடித் திறந்தேன் ஆளைக் காணவில்லை.
சில நாள் கழித்து எங்கள் வீட்டின் கதவு தட்டப்பட்டது. திறந்தேன் “ஐயா கல்யாண கார்டு கொண்டு வந்திருக்கிறேன், உள்ளே வரலாமா?” என்றான் அதே இளைஞன்.
“ஆதாமுக்கோ ஏற்ற துணை இன்னும் காணப்படவில்லை.” (ஆதியாகமம் 2:20) என்று கர்த்தர் கண்டார். ஆகவே அவன் மீது உள்ள கரிசனையினால் ஏவாளை உருவாக்கி ஆதாமுக்கு துணையாக கொடுத்தார். ஆண்டவர் அத்தனையான அக்கறை உள்ளவர். ஆனால் பெற்றோர்கள் பலர் இன்று அக்கறை இல்லாதவர்களாகவும், சோம்பற்காரர்களாகவும், பிள்ளைகளுக்கு துரோகம் செய்கிறவர்களாகவும் மாறிவருகின்றனர். திட்டமிட்டே பிள்ளைகளுக்கு திருமண வரன் பார்ப்பதில் தாமதம் செய்கின்றனர்.
உங்களுக்கு சரியான வயதில் திருமண வரன் பார்க்க உங்கள் பெற்றோர்கள் எவ்வளவு கரிசனையாய் இருந்தார்கள்? ஆகவே தானே நீங்கள் இன்று குடும்பமாக வாழ்கிறீர்கள். ஆனால் உங்கள் பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை செய்ய நீங்கள் முயற்சிக்காவிடில் நீங்கள் கடவுளுக்கு முன் போக்கு செல்ல முடியாது. உங்கள் பிள்ளைகள் அது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் உங்களை நம்பித்தானே இருக்கிறார்கள். அவர்களாக தனியாக ஒரு முடிவு எடுத்து இருந்தால் நீங்கள் இன்று பதறிப்போய் முதலாவதே வரன் பார்த்திருப்பீர்கள். ஆனால் நம்பின உங்கள் பிள்ளைகளுக்கு துரோகம் செய்யலாமா? முயற்சி செய்யுங்கள்! கர்த்தர் ஏற்ற துணையை வைத்திருக்கிறார். கர்த்தரை நீங்கள் குறை சொல்ல முடியாது!!
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Comments
Post a Comment