திருமணத்தில் ஒரு 'கிக்'
நம் இந்திய நாட்டில் பெரும்பாலோனார் பெற்றோர் வழியாகவே துணையைக் கண்டுபிடிக்கின்றனர். வெளிநாடுகளில் முற்றிலும் மாற்றாக விரும்பியே திருமணத்தைச் செய்துக் கொள்ளுகின்றனர்.
விரும்பி திருமணம் செய்துக் கொண்டவர்களானாலும், பெற்றோர் முடித்து வைக்கிற திருமணங்களானாலும் வாழ்நாள் முழுவதும் இணைந்து வாழ்பவர்களும் உண்டு. இடையிலே சீ சீ என்ன வாழ்க்கை இது என்று காய் சொல்லிவிட்டு பிரிந்து செல்கிறவர்களும் உண்டு.
இவைகளுக்கு அடிப்படை காரணமென்ன? யாக்கோபு அழகான பெண் ராகேலை நேசித்து அவளை திருமணம் செய்துக் கொள்ள ஒப்பந்தம் செய்து ஏழு வருடம் ஆடுகளை மேய்க்கிறான். ஆனால் கூச்சப் பார்வையுடைய லேயாள் அவன் விரும்பாமலே வாழ்க்கைக்குள் நுழைகிறாள். ஆனால் இறுதி வரையிலும் இரண்டு பெண்களோடும் balance பண்ணி வாழ்க்கையை நடத்தினான்.
ராகேல் யாக்கோபின் பார்வையில் அழகானவளாகக் காணப்பட்டது மட்டுமன்றி அவளை அதிகமாக நேசித்தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வெறும் அழகை மாத்திரம் வாழ்வில் தூக்கிப் பிடிக்காமல் அன்பு, நேசம் என்பது தொடர்ந்து வந்துக் கொண்டே இருந்தது. இந்த அன்பு, நேசம் என்பது அழகு மறைந்தாலும் வாழ்வில் உயர்த்தி பிடிக்கும் போது மட்டும் தான் குடும்பம் என்ற பந்தம் கட்டிக் காட்டப்படுகிறது.
திருமணத்திற்கு முன் பெண்கள் ஒல்லியாக இருந்திருக்கலாம். ஆனால் திருமண வாழ்விற்கு பின் ஆண்டுகள் போக போக குண்டாகி விடலாம். ஆண்களுக்கு தலை நிறைய அழகான முடி இருந்திருக்கலாம். காலம் போக போக காற்று முடியை கொண்டு போய் இருக்கலாம். அழகு என்பது நாட்கள் கூட கூட தேய்பிறையை நோக்கித்தான் செல்ல ஆரம்பிக்கும். எனவே வெறுமையாய் அழகை மட்டுமே மூலதனமாகக் கொண்டு திருமண வாழ்வில் ஈடுபட்டால் அழகுக்கு மைனஸ் மார்க் வரும் போது திருமண வாழ்வில் failஆகி விடுவர். துவக்கத்தில் அழகு முக்கியமாக தெரிந்தாலும் காலப்போக்கில் மெதுவாக நகர்ந்து நகர்ந்து நட்பாக வலுப்பட வேண்டும். நட்பு பிரிக்க முடியாத அளவிற்கு சென்று விட்டால் நட்புக்கு பிளஸ் மார்க் விழ விழ குடும்பம் passஆகி போய் கொண்டே இருக்கும். உடல் ஈர்ப்பைத் தானடி அன்பு, நேசம் என்பது இதயத்தில் பெருகிவிடவேண்டும். அப்பொழுது தான் குடும்பம் காலப்போக்கில் விழாமல் செல்ல முடியும்.
விரும்பியோ அல்லது பெற்றோரால் பார்த்தோ அழகு பெண்ணைப் பார்த்து / அழகு பையனைப் பார்த்து திருப்திப்பட்டுக் கொண்டு வாழ்க்கையை துவங்கினால் துவக்க காலத்தில் உலகத்திலேயே இவர்களைப் போன்ற சந்தோஷமான ஜோடி எங்குமே இல்லை என்று உலகம் மெச்சலாம். ஆனால் நாளடைவில் இதுவெல்லாம் ஒரு மூஞ்சா, இதைப் பார்த்து விட்டு வேலைக்குப் போனால் ஒன்றும் உருப்படாது என்று எடுத்தெரிந்துப் பேசும் நிலை என்றாவது ஒரு நாள் வந்து விடும்.
உலகமே சொல்லும், சினி ஸ்டார் மாதிரி இருவரும் இருக்க இப்படி பிரிந்து போய் விட்டார்களே என! பார்வையிலே field out ஆகி விழுந்தவர்கள் சில வேளை எழுந்திருப்பது கஷ்டமான விஷயமாகவே உள்ளது. ஆனால் திருமறை சொல்லுகிறது “சௌந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண், கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரியே புகழப்படுவாள். குணசாலியான ஸ்திரியைக் கண்டு பிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப் பார்க்கிலும் விலை உயர்ந்தது”. (நீதிமொழிகள் 31:30,10)
அழகில் “கிக்” கொள்ளுகிற வாழ்க்கை சீக்கிரத்தில் அடங்கி விடுகிறது. குணத்தில் “கிக்” கொள்ளுகிற வாழ்க்கை காலம் முழுவதும் செழித்திருக்கிறது.
பெற்றார்ப் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு
“நல்ல மனைவி கிடைத்தால் சொர்க்கத்தில் வாழ்வதற்குச் சமம்” என்றார் வள்ளுவர்.
எத்தனைப் பேர் சொர்க்கத்தில் இருக்கிறார்களோ? எத்தனை பேர் நரகத்தில் வாழ்கிறார்களோ?
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Comments
Post a Comment