வெற்றியின் இரகசியம்

 


இளைஞன் ஒருவனை பேருந்தில் சந்தித்தேன். பேசிக்கொண்டே போகும் போது உங்கள் எதிர்கால திட்டம் என்ன என்றேன்? சிரித்துக் கொண்டு பெண் போன்று ரீத் வைத்திருந்ததை சரி செய்துக் கொண்டான். காதில் போட்டிருந்த கம்மலும் இருக்கிறதா என்று தொட்டுப் பார்த்துக் கொண்டு வந்து… sir, என்று இழுத்துக் கொண்டே யோசித்தான். கையில் நாய்க்கு சங்கிலி போடுவது போல் ஒரு சங்கிலி தொங்கியது, மற்றொன்று கழுத்தில் தொங்கியது, அதில் இயேசு நாதரும் தொங்கிக் கொண்டிருந்தார்.

பேருந்து ஒரு கல்லூரி நிறுத்தத்தில் நின்றது. அந்த கல்லூரி வளாக சுற்று சுவரில் ஒரு திருக்குறள் எழுதப்பட்டிருந்தது.

  வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றவை எல்லாம் பிற.

அதைப் பார்த்து, "தம்பி இதன் அர்த்தம் என்னத்தெரியுமா?” என்று கேட்டேன். அதற்கும் சிரித்துக் கொண்டே "என்ன சார் செய்ய புரியாத தமிழில் எழுதிப் போட்டு இருக்கிறாங்க.   கம்பியூட்டர் உலகில் இதுவெல்லாம் முக்கியமா? என்ன" என்றான்.

நானும் ஒரு நமட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டே “மனதில் உறுதி தான் செயலின் உறுதியாகும். மற்றதெல்லாம் சரியில்லை” என்பது தான் விளக்கம் என்று சுஜாதா அவர்களின் விளக்க நூலில் படித்ததை கூறினேன்.

பரவாயில்லை சார் உங்க காலத்து தமிழ் உங்களுக்குப் புரியுது என்று இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்தவன் போல் பேசினான். இருப்பினும் அவன் வாழ்க்கையில் ஒளியேற்ற வேண்டும் என்ற ஆவலோடு, ஒரு சம்பவத்தை பகிர்ந்துக் கொண்டேன்.

ஒரு நாள் உங்களைப் போன்ற ஒரு இளைஞன் சாக்ரடீசிடம் சென்று ஐயா, “நீங்கள் புகழ்பெற்றவர்களாக வலம் வருகிறீர்களே அதன் இரகசியம் என்ன?” என்று கேட்டான்.

இளைஞர்களுக்கு புரியும் படி interesting ஆக சொல்லவில்லையென்றால் மொக்கப் போடுகிறாரே என்று கூறி விடுவானே என்று யோசித்து நாளை குறிப்பிட்ட ஆற்றங்கரைக்கு வரச் சொன்னார்.

அப்படியே வந்தான். அவனை அந்த ஆற்றுக்குள் அழைத்துச் சென்றார். கழுத்தளவு தண்ணீர் அளவுக்கு சென்றனர். சாக்ரடீஸ் திடீரென்று இளைஞன் தலையை தண்ணீருக்குள் அமிழ்த்தினார். அவன் தண்ணீருக்குள் இருக்கும் போது மூச்சு முட்டியது. உள்ளே திணறினான். பின்னர் மெதுவாக கையை எடுத்தார். தப்பித்தோம், பிழைத்தோம் என்று வெளியே வந்து மூச்சு வாங்கினான்.

சாக்ரடீஸ் அவனிடம் தண்ணீருக்குள் இருக்கும் போது எது முக்கியமாக தோன்றியது? என்றார்.

சுவாசிப்பது தான் முக்கியம்.

அதைப் போலத் தான் வெற்றி பெற வேண்டும் என்று தீவிரமாக செயல்பட ஆரம்பித்தால் அது தான் வெற்றியின் இரகசியம் என்றார்.

இதைப் போல் தான் இளைஞர்களுக்கு சுவாமி விவேகானந்தர் கூறும் போது ஒர் உயரிய இலட்சியத்தை எடுத்துக் கொள்ளவேண்டும். அதை உன் உள்ளத்தில் பாய விடு. நாடி நரம்புகளில் ஓட விடு. அதைப்பற்றியே சிந்தித்திரு. கனவுகளிலும் நினைவுகளிலும் அது வந்து வந்து செல்லவேண்டும். அதைப் பற்றி தான் உன் பேச்சே இருக்க வேண்டும். வெற்றிக் கிடைக்கும் வரை ஓயாமல் செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார் என்பதை அவனோடு பகிர்ந்துக் கொண்டேன்.

Sir, நான் இறங்கட்டுமா என்றான்.

ஏன் நீங்கள் திருநெல்வேலிக்கு புது படம் பார்க்க அல்லவா கிளம்புனீர்கள் என்றேன்.

இல்லை. புறப்படும் போதே எங்க அப்பாவும், ஏதாவது உருப்படியாக வாழப்பழகு என்று கத்தினார். அதை காதில் வாங்காமத்தான் புறப்பட்டேன். ஆனால் நீங்கள் சொன்ன விஷயம் மனதில் எனக்கும் ஒரு நெருடலாகவே இருக்கிறது. நான் இறங்கி முடியை வெட்டி விட்டு, கம்மலை கழற்றி தூர எறிந்து விட்டு ஏதாவது ஒரு வேலையைச் செய்து வாழ்க்கையில் முன்னேறப்போகிறேன். படத்தைப் பார்த்து, பாலபிஷேகம் செய்து, கிடா வெட்டி இரத்த பலி கொடுத்து வீனாக ஏன் என் வாழ்க்கையை B E படித்த பின்னும் விரயம் செய்ய வேண்டும் என்று கூறியவன் அடுத்த நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டு கையை அசைத்தான்.   பேருந்து புறப்பட்டது புதிய விடியலைத் தேடி.

திருமறையில் யெப்தாவை அவனுடைய சகோதரர்கள் விரட்டி விட்டனர். வீணரான மனுஷர் யெப்தாவோடே கூடிக் கொண்டு, அவனோடே கூட யுத்தத்திற்குப் போவார்கள் (Where he was joined by a number of men who would do anything for money). அவர்களுக்கு வேலையில்லை. ஆனால் அவர்களை சரியாக வேலை வாங்கி, பெலசாலியாக திகழ்ந்தான் யெப்தா. இந்த செயலானது யெப்தாவை மிகவும் பெலமுள்ளவனாகவும், புகழ்பெற்றவனாகவும் மாற்றியது. நல்ல எதிர்கால திட்டமுள்ளவர்கள் வாய்ப்புகள் கிடைக்கும் போதெல்லாம் மூளையைத் தீட்டி தீட்டி கூர்மையாக்கிக் கொண்டே இருப்பார்கள். சிறந்த வாய்ப்புகள் கண்ணுக்கு முன்னால் வந்தால் லபக்கென்று பிடித்து மலையின் முகட்டுக்குச் சென்று விடுவார்கள். அப்படி தான் யெப்தாவுக்கு வாய்ப்பு வந்த போது இஸ்ரவேல் தேசத்தின் பெரிய judgeஆக மாறினான். மக்களை காக்கும் வீரனாக மாறினான். 

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி