முயற்சி திருவினையாக்கும்


ஒரு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு motivation speech கொடுப்பதற்காக சென்றிருந்தேன். முதல் முதலாக அவர்களிடம் ஒரு பேப்பரில் அவர்களுடைய ambition என்னவென்று எழுத சொன்னேன்.

எல்லா பிள்ளைகளும் மகிழ்ச்சியாக தங்களுடைய ambitionயை எழுதி முடித்தார்கள். பிறகு அவைகளை ஒன்று சேர்த்த போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்தப் பிள்ளைகளில்  ஏறக்குறைய 60% மருத்துவராகவும் 38% பேர் Engineer ஆகவும் மற்ற சிலர் மட்டும் IAS, IFS, Professor  ஆகவும் வேண்டும் என்று எழுதி இருந்தனர்.

அடுத்த கேள்வியாக எவ்வளவு நேரம் படிப்பீர்கள்? எவ்வளவு நேரம் உங்கள் ambitionக்காக முயற்சி செய்வீர்கள் என்று கேட்ட போது அதிகமான பிள்ளைகள் ஒன்றும் செய்வதில்லை என்று ஒத்துக் கொண்டனர். இன்று அநேகம் பெற்றோர்கள் லட்ச லட்சமாக பிள்ளைகளின் படிப்புக்கு முதலீடு செய்ய நினைத்து பார்க்கின்றனர். தங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு பிள்ளைகள் ஒத்துழைக்க மாட்டார்களா? என்று ஏங்குகின்றனர். கல்வி என்பது மிகப்பெரிய வியாபாரமாக மாறிவிட்டது. இதில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் விருப்பு வெறுப்புக்களை தெரிந்து கொள்ளாமல் இலட்சக் கணக்கில் கடன் வாங்கி கட்டி படிக்க வைக்கின்றனர்.

பிரபலமான பள்ளிகளுக்கு லட்சக்கணக்கில் fees கட்டி விட்டு, tuition என்ற பெயரில் ஒவ்வொரு subjectக்கும் பணம் கட்டி லோ லோ என்று காலையும், மாலையும் பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு அலைகின்றனர். அதனையும் தாண்டி NEET, JEE preparation என்ற பெயரில் சில கல்வி நிறுவனங்களில் சேர்ந்து விட்டு  படிக்க ஊக்கப்படுத்துகின்றனர். இறுதியில் பிள்ளைகளின் மதிப்பெண்ணை பார்த்துவிட்டு பெற்றோர் அப்பாடா இதற்கு போய் இவ்வளவு முயற்சி எடுத்து வீணாய் போனோமே என்று fret-up ஆகிவிடுகின்றனர்.

ஒருநாள் வண்ணத்துப்பூச்சியும், மழைக்காலங்களில் வெளியே பறந்து வரும் ஈசலும் பேசிக்கொண்டது. “கடவுள் உனக்கு மட்டும் நல்ல அழகான இறக்கைகளை கொடுத்திருக்கிறார். பார் என்னுடைய இறக்கை அழகே இல்லை, என்னை யாரும் விரும்புவதே இல்லை. கடவுள் மிகவும் பாரபட்சம் உடையவர் தானே”. நான் சொல்லுகிறது சரிதானே என்று நீ ஈசல்.

வண்ணத்துப்பூச்சி ஈசலை பார்த்து மறுமொழியாக அது உண்மை அல்ல. நான் என்னை கூட்டுப்புழுவாக இருக்கும்போது குறுக்கிக் கொண்டு வெளியே வராமல் சுயகட்டுப்பாட்டுடன் பலநாள் உணவு அருந்தாமல் பொறுமையுடன் உட்கார்ந்து வளருகிறேன். அதனால் தான் எனக்கு வண்ணமயமான சிறகு முளைக்கின்றன. ஆனால் மழை பெய்த உடன் ஓடி வந்து பறந்து உன் மகிமையை காட்ட முற்படுகிறாய். அதனால் அழகு சிறகுகள் முளைக்க வாய்ப்பில்லை என்றது. இதைக் கேட்ட ஈசல் உன்னை போல் என்னால் எல்லாம் இருக்க முடியாது என்று சொல்லிவிட்டு பறக்க ஆரம்பித்து. கொஞ்ச நேரத்தில் சிறகுகள் இல்லாமல் கீழே ஊர்ந்துக் கொண்டே அலைந்தது.

திருமறையில் ஒரு வசனம் இவ்வாறு கூறுகிறது. “"ஞானமே முக்கியம், ஞானத்தைச் சம்பாதி; என்னத்தைச் சம்பாதித்தாலும் புத்தியைச் சம்பாதித்துக்கொள். நீ அதை மேன்மைப்படுத்து, அது உன்னை மேன்மைப்படுத்தும்; நீ அதைத் தழுவிக்கொண்டால், அது உன்னைக் கனம்பண்ணும்.” (நீதிமொழிகள் 4:7,8) படிக்கும் பிள்ளைகளே நீங்கள் கடினப்பட்டு ஞானத்தையும், அறிவையும் தேட முற்பட வேண்டும். அதற்காக உழைக்க வேண்டும். அறிவை தேடக்கூடிய நேரத்தில் அதை தேடாமல் மணிக்கணக்கில் facebook, twitter, whatsapp, chat, tv என்று பொழுதுபோக்குகளில் செலவிட்டு விட்டு தேர்வு நேரத்தில் ஒன்றும் நான் படித்து வரவில்லை என்று கடவுளை குற்றம் சாட்டுவதில் பயனில்லை. ஆண்டவரே நான் மருத்துவப் படிப்பில் சேர்ந்து விட்டால் தோத்திர காணிக்கை வைத்து விடுவேன் என்று வெறும் நேர்ச்சி கடன்களை சொல்லி agreement போடாதிருங்கள். உங்களைப் போன்று பலர் agreementயை போட்டு ஏமாந்து போய் விட்டனர். உங்கள் தவறான agreementக்கு மயங்குகிறவர் நமது ஆண்டவர் அல்ல. உங்களை பார்த்து சோம்பேறியே நீ எறும்பினிடத்திற்கு போய் சுறுசுறுப்பு, முயற்சி போன்ற பாடத்தை கற்றுக் கொள் என்று உரைக்கிற சத்தம் இப்பொழுது உங்கள் காதுகளில் விழும் என்று நம்புகிறேன்.

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு :  நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

புத்தியுள்ள மனைவி

உண்மையை உரக்க சொல்வோம்