காணாமல் போன கண்மணிகள்
பிள்ளைகள் அவரிடம் பேச வாய்ப்பே கிடையாது. தேவையான பணத்தை மட்டும் கொடுத்து விட்டு தன் கடமையை முடித்துக் கொள்வார். எனவே பிள்ளைகள் கையில் மட்டும் அளவுக்கு மிஞ்சிய பணம் கிடைத்தது.
கல்லூரியில் காலடி எடுத்து வைத்ததில் இருந்து மகன் ஜோவின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. தவறான நண்பர்களோடு ஏற்பட்ட பழக்கத்தினால் போதைப் பொருள்களை பயன்படுத்த கற்றுக் கொண்டான். இரவு நேரம் party என்று போய் விட்டு இரவு 12 மணிக்கு மேல் தான் வர ஆரம்பித்தான்.
ராஜேஷ்க்கு மனதில் சற்று மகனைக் குறித்து கவலை வந்தது. லேட்டாக வரும் போது மகனை கோபப்பட்டு பேசிப் பார்த்தார். அவன் ஒன்றுக்கும் அசரவில்லை.
ஒரு நாள் இவனுக்கு பாடம் படித்துக் கொடுக்க வேண்டும் என்று எண்ணினார். அன்று ஜோவின் நன்றாக குடித்து விட்டு இரவு 2 மணிக்கு வீட்டுக்கு வந்து கதவைத் தட்டினான். "கதவை திறக்கமாட்டேன், எங்கேயும் போய் செத்து, தொலை, நீ எனக்கு மகனும் இல்லை. நான் உனக்கு தகப்பனும் இல்லை" என்று சொல்லிவிட்டு lightயை off பண்ணி விட்டு படுத்துக் கொண்டார். மனைவி அவரிடம் மன்றாடினாள், “தயவு செய்து அவன் வீட்டிற்கு வர விடுங்கள்” என. மனைவியை அதட்டிவிட்டு, “நீ வீட்டிற்குள் இருக்க விரும்புகிறாயா அல்லது நீயும் வெளியே உன் மகனோடு போகிறாயா?' என்று அதட்டினார்.
கதவை தட்டிக் கொண்டே இருந்த ஜோவின் அப்படியே தெருவில் மீண்டும் நடக்கத் தொடங்கினான்.
ராஜேஷ் மனது மிகவும் சலனப்பட்டது. lightயை போட்டுக் கொண்டு பெட்டில் அமர்ந்திருந்தார். அப்பொழுது அவருடைய படுக்கைக்கு நேராக இயேசுவானவர் ஒரு தொலைந்து போன ஆட்டை தேடிக் கையில் பிடித்திருப்பது போன்ற படம் தொங்கியது. அது அவரோடு பேச ஆரம்பித்தது. தவறு செய்கிறவர்களை கடவுள் மன்னித்து தேடிச் சென்று தம் பிள்ளையாக வைத்துக் கொள்ளுகிறார் என.
ஜெபம் என்பது அவசியமற்றது. அது தொழிலுக்கு உதவாது என்று எண்ணிய ராஜேஷ் உள்ளம் அன்று நொறுங்கிப் போயிருந்தது. தன் குடும்பத்தில் யாரும் போதை வஸ்துக்களையோ, மதுவையோ அருந்தியது கிடையாது. ஆனால் இப்படிப்பட்ட பழக்கத்திற்கு தன் மகன் அடிமையாவதற்கு நான் ஒரு காரணமாயிற்றோ என்ற குற்ற உணர்வு அவரைத் தாக்கியது.
நம்முடைய குடும்பத்திலுள்ள நல்ல தகவல்களை அவனோடு பகிர்ந்துக் கொள்ள தவறி விட்டேனோ? நான் வாலிப வயதில் எப்பொழுதும் ஆலயத்தையே சுற்றி சுற்றி வந்ததால் மதுபானம் அருந்துவது என்பது வெட்கக் கேடான செயல் என்று எண்ணினேன். ஆனால் என் மகனை நான் ஒரு நாளும் ஆலயத்திற்கு அழைத்துச் செல்வது கிடையாது. மகனின் பள்ளி வாழ்க்கை, நண்பர்கள் பற்றி ஒரு நாளும் அவனிடம் கேட்டதும் இல்லை. நான் அவனோடு நேரம் செலவிடுவதே waste என்று நினைத்தேனே என்று கண்கலங்கினார்.
இயேசு ஆடுகளைத் தேடியது போல் என் மகனைத் தேடிப் போகிறேன். என்னை மன்னியும் ஆண்டவரே! என்று வீட்டை விட்டு கிளம்பினார். மகனைத் தேடிப் பிடித்து வீட்டிற்கு அழைத்து வந்தார். காலையில் அவன் போதைத் தெளிந்திருந்த போது மகனின் கையைப் பிடித்துக் கொண்டு மகனே என்னை மன்னித்து விடு. நீ தவறான வாழ்க்கை வாழ்வதற்கு நானும் ஒரு காரணமாகி விட்டேன் என்று கண்ணீர் மல்கினார்.
தந்தையின் கண்களில் இருந்து கண்ணீரை ஒரு நாளும் காணாத ஜோவின் அதிர்ந்துப் போனான். அப்பா, நானும் இனி தவறான friends உடன் சேர்ந்து செல்வதைத் தவிர்ப்பேன் என்று கண்ணீர் விட்டான்.
ஆலயத்தில் “கர்த்தரின் பந்தியில் வா சகோதரா கர்த்தரின் பந்தியில் வா” என்ற பாடல் ஒலிபரப்பப்பட்டது காதில் விழுந்தது. சரி ஜோவின் churchக்கு கிளம்பு, நாம் குடும்பமாக போய் வரலாம் என்று ராஜேஸ் கூறும் போது Cell மெதுவாக சினுங்கியது. ராஜேஸ் Cell Phone யை switch off பண்ணி விட்டு இனி ஓய்வு நாளில் businessம் கிடையாது, busy யும் கிடையாது என்று Bibleயை தூக்கிக் கொண்டு, மகனின் தோளில் கையைப் போட்டுக் கொண்டு குடும்பமாக ஆலயத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
“தன் சொந்தக் குடும்பத்தை நன்றாய் நடத்துகிறவனும், தன் பிள்ளைகளைச் சகல நல்லொழுக்கம் உள்ளவர்களாகக் கீழ்ப்படியப்பண்ணுகிறவனுமாயிருக்கவேண்டும்.” என்று பவுலடியார் குடும்ப தலைவர்களுக்கு ஆலோசனையாக கூறுகிறார் (I தீமோத்தேயு 3:4). நல்ல குடும்ப தலைவன் தான் திருச்சபையிலும் பொறுப்பைப் பெறுவதற்கு தகுதியுடையவன். பிள்ளை, மனைவி எப்படிப் போனால் என்ன? நான் என் விருப்பப்படி வாழ்வேன் என்று வாழக் கூடாது.
பணத்தை சம்பாதிப்பது ஒன்றே வாழ்வின் குறிக்கோளாக பல ஆண்கள் நினைக்கின்றனர். இதனால் குடும்பத்தைக் குறித்து அக்கரை இல்லாமல் போய் விடுகிறது. "நான் குடும்பத்திற்காகத் தானே இவ்வளவு கஷ்டப்படுகிறேன். ஆனால் என் பிள்ளைகள் ஒழுங்கற்று திரிகிறார்களே நான் என்னச் செய்வது என்று கையைப் பிசைந்துக் கொண்டு இருக்கிறீர்களா?" தவறு அவர்கள் மேல் இல்லை உங்கள் மீது தான். நீங்கள் கொடுக்கும் பணத்தை காட்டிலும் நீங்கள் தான் அவர்களுக்கு முக்கியம். உங்கள் நேரம் தான் முக்கியம். நீங்கள் உங்கள் பிள்ளைகளோடு செலவிடும் ஒவ்வொரு மணித் துளியுமே அவர்கள் வாழ்வை இனிமையாக்கக் கூடியது. ஆனால் நீங்கள் அவர்களோடு நேரம் செலவிடுவதை தவிர்க்க அல்லது உங்கள் பிள்ளைகள் உங்களோடு பேசி தொந்தரவு செய்யாமல் இருக்க Cell, TV, பார்க்க சொல்லுகிறீர்கள். அதன் விளைவு தான் இரத்த கண்ணீர். முதலில் மனந்திரும்ப வேண்டியது குடும்ப தலைவர்கள் தான்.
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Comments
Post a Comment