EMI சமுதாயம்


ஜெலஸ்டின் தன் மகனை நன்றாக அடித்து விட்டு மனது ஆறாமல் மெதுவாக ஆலயம் அருகில் ஒதுங்கினார். முகம் எல்லாம் கோபக் கனல் மாறாமல் இருந்தது. அவரைப் பார்த்ததுமே பிரச்சனையோடு இருக்கிறார் என்பதைப் புரிந்துக் கொண்டு அவரை அன்புடன் அணுகினேன்.

தன் மகனைப் பற்றி வேதனையைக் கொட்டித் தீர்த்தார். ஒரே பையன் என்பதற்காக அளவுக்கு அதிகமாக செல்லம் கொடுத்து வளர்த்தது தவறாக போய் விட்டது என கூறி மனம் கலங்கினார்.

ஐயா, நடந்தது என்னவென்றால் எனது மகன் ஜெலஸ்டின் கல்லூரி படிப்பை முடித்த பின்னரும் எந்த வேலைக்கும் செல்வதில்லை. ஆனால் எல்லா ஆடம்பரப் பொருள்களையும் வீட்டில் வாங்கி குவிக்கிறான். என்னுடைய Debit card யை மனம் போல் பயன்படுத்திக் கொள்ளுகிறான். கண்ட பொருள்களை எல்லாம் EMI மூலமாக வாங்கி லட்சகணக்கில் கட்ட வைத்து விட்டான். இன்று 1,30,000 மதிப்புள்ள Cell யை EMI யில் வாங்கியுள்ளான். இப்படி EMI மாத்திரம் என் சம்பளத்தை விட அதிகமாக கட்ட வேண்டிய சூழல் வந்து விட்டது. எல்லா பொருள்களையும் புதிய model வர வர மாற்றிக் கொண்டிருக்கிறான். பணத்தின் மதிப்பு என்னவென்றே தெரியாமல் வளருவதை எண்ணி வருத்தம் தாங்காமல் இன்று அடித்து துவைத்து விட்டேன் என்று வருந்தினார்.  

இன்று இளைஞர்கள் மட்டுமல்ல சில திருமணமானவர்கள் கூட EMI பெயரில் பல பொருள்களை பொறுப்பில்லாமல் வாங்கி குவிக்கின்றனர். வங்கிகள் பல வித விதமான Cardகளை மக்களுக்குக் கொடுக்கிறது. எனவே வரம்பை மீறி பணத்தை செலவு செய்து விட்டு அதை கட்ட முடியாமல் கடன்காரர்களாக மாறி விடுகின்றனர். குறிப்பாக இளைஞர்கள் சிலர் வேலைச் செய்து வரும் பணத்தின் அருமையேத் தெரியாமல் இருப்பது சிக்கலான ஓன்று தான். மனிதன் என்ன மிருகங்கள் கூட உழைத்து தான் வாழ்கிறது, EMI கட்டுவதில்லை.

ஒரு நாள் புலி ஓன்று கஷ்டப்பட்டு வேட்டையாடி விட்டு  ஒரு குகைக்குள் மிகவும் tiredஆக வந்து படுத்தது. அப்பொழுது அந்த குகைக்குள் ஒரு சிலந்தி ஹாயாக உட்கார்ந்து தன் வலையில் வரும் சிறு பூச்சிகளைப் பிடித்து சாப்பிட்டு விட்டு ஜாலியாக இருப்பதைப் பார்த்த உடன், சிலந்தியைப் பார்த்து புலி சொன்னது, "நீ புத்திசாலி உழைப்பே இல்லாமல் உட்கார்ந்து சாப்பிடுகிறாய், பார் நான் முட்டாள் தனமாக ஓடி ஓடி மிருகத்தை பிடித்து சாப்பிட்டு கஷ்டப்பட்டு வருகிறேன். நான் இனி உன்னைப் போல் பேசாமல் உட்கார்ந்து சாப்பிடப் போகிறேன்" என்றது.

சிலந்தி புலியைப் பார்த்து ஒரு நக்கல் சிரிப்பை உதிர்த்து விட்டு, புலியாரே தவறாக என்னைப் புரிந்து கொண்டுள்ளீர்கள். நானும் கஷ்டப்பட்டு தான் இந்த கூட்டை மேலும் கீழுமாக தொங்கி தொங்கி கட்டியுள்ளேன். இப்பொழுது இதில் வந்து விழுகிற பூச்சிகளை நான் சாப்பிடுகிறேன். நானும் இந்த வலையை உழைத்து தான் பின்னியுள்ளேன்.   வலையைப் பின்னாமல் இறைக்காக காத்திருந்தால் நானும் சோம்பேறியாக ஏமாந்து தான் போகவேண்டும். எனவே நீங்களும் குகைக்குள் படுத்து கிடந்து உணவு வரும் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றம்  தான் கிடைக்கும். நாம் உழைப்பதிலும் மகிழ்ச்சி இருக்கிறது என்று கூறிவிட்டு திரும்பியது. அங்கே ஒரு பூச்சி வலையில் அகப்பட்டது. அதை ஓடோடி பிடிக்கச் சென்றது.

“சோம்பேறியே நீ எறும்பினிடத்திற்கு போய் அதன் வழிகளைக் கற்றுக் கொள்” என்று திருமறை அழைப்புக் கொடுக்கிறது. அதே வேளையில் “சிற்றின்பப்பிரியன் தரித்திரனாவான்” (நீதிமொழிகள் 21:17) என்றும் கூறுகிறது. இளைஞர்களிடத்தில் வேலைச் செய்யாமல் வீண் செலவு செய்யும் மனது பெருகாமல் இருக்க பெற்றோர்கள் உலகின் reality யை புரிந்துக் கொள்ள பழக்குவிக்க வேண்டும். கஷ்டங்கள் படுவதற்கு அனுமதியுங்கள். கிடைக்கிற குறைந்த சம்பளத்தில் வாழ கஷ்டப்பட்டால் விட்டு பிடியுங்கள். பணத்தின் மதிப்பு தெரியட்டும்.

வங்கிகள் எத்தனை cardகளை கடன் பெறக் கொடுத்தாலும் அதை முடிந்த அளவு பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள். இல்லையென்றால் கடன் உங்கள் வாழ்க்கையை அழிக்கும். பிள்ளைகளுக்கு கடன் பாரத்தின் வலி என்பதே தெரியாமல் போய் விடும். அது ஆபத்தை விளைவிக்கும் என்று கூறி நண்பரை அனுப்பினேன்.

அன்று நவம்பர் மாதத்தின் முதல் நாள். முதல் மாதத்தின் சம்பளம் 9000 ரூபாயை கவரில் வைத்து நன்றி காணிக்கை செலுத்த ஆல்டரில் முழங்காலில் நின்றான் ஜெலஸ்டின்.

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

புத்தியுள்ள மனைவி

உண்மையை உரக்க சொல்வோம்