கிரஸா சரஸா



சமீபத்தில் ஒரு பள்ளியில் நடந்த நிகழ்ச்சி வீடியோவாக வைரலாகி கொண்டிருந்தது. அந்த பள்ளி மாணவர்கள் கஞ்சாவை பயன்படுத்துகின்றனர். அவர்களுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியையிடம் தர்க்கம் செய்யவும், அவர்களுடைய கைப்பையை எடுத்து வீசுவதும், chairயைக் கொண்டு தாக்குவதும், துப்பட்டாவை இழுத்து வீசுவதுமாக இருந்தது. இறுதியாக பள்ளி ஆசிரியை மாணவர்களால் தான் தாக்கப்பட்டதைக்  குறித்து complaint கொடுத்துள்ளதும் வெளியானது.


பள்ளிக்கூட மாணவர்கள் போதைப் பொருட்களை பயன்படுத்தும் அளவிற்கு போய்விட்டதா என்று நீங்கள் நினைக்கலாம். இதற்கு ஆதாரமாக தினகரன் செய்திதாளில் 27-12-21ல் ஒரு செய்தி வெளியானது. “திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்யும் வகையில் பதுக்கி வைத்திருந்த 33 கிலோ போதை சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது” என. மாணவர்களை இன்று போதைக்குள் தள்ளுவதற்கான செயல்பாடுகள் மறைமுகமாக நடக்கின்றன. அதோடு மட்டுமல்லாமல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ய 120 வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.


இளம் வயதுள்ளவர்களை குறிவைத்தே பெட்டிக் கடைகளில் இவை சிறு பொட்டலங்களாக விற்கப்படுகிறது. ஒரு மாணவன் ஒரு போதைப் பொருளை பயன்படுத்திய உடன், மாப்பிள்ளை, ‘சரஸ்’ செமையா இருக்குது. என்ன மாப்பிள்ளை ‘சரஸ்’னா?  அதுதான் கஞ்சா. கஞ்சான்னா?  என்ன என்று கேட்க, மாப்பிள்ளை இதுக்கு பெயர் அமெரிக்காவில் ‘கிராஸ்’. நம்ம சாக்லேட் மாதிரி தான். ஆனால் use பண்ணினா செமயா இருக்குது என்று நண்பர்களால் அறிமுகப்படுத்தப்படுகிறது.


ஆர்வம் பொங்க அப்பா கொடுத்த pocket moneyயில் முதல் சாக்லேட்டை சாப்பிட்டு பார்க்கலாம் என்ற ஆர்வம் பொங்க கடைக்கு ஓடுகின்றனர் மாணவர்கள்.


முதலில் சோதனை செய்து பார்க்கும் பழக்கமே போகப்போக உச்சகட்டத்திற்கு அழைத்துச் சென்று விடுகிறது. அந்த அனுபவத்தை மீண்டும் பெறவேண்டும் என்ற ஆசை தொடர்ந்து பயன்படுத்த வைத்து விடுகிறது. இனி இந்த ‘கிக்’ இல்லைன்னா உடலுக்கே சரியில்லாதது போன்ற உணர்வுக்குள்  வந்துவிடுகின்றனர்.


உயர் அதிகாரிகள் தமிழகத்தில் குற்றங்கள் பெருகுவதற்கு முக்கியமான காரணம் போதைப்பொருள் தான் என்கின்றனர். காரணம் போதை தலைக்கு ஏறிய உடன் கொலை, திருட்டு, பல்வேறு குற்றங்கள் செய்வதற்கு மனம் எளிதாக இடம் கொடுத்து விடுகிறது. எனவே குற்றங்கள் குறைய வேண்டுமானால் போதைப்பொருளை ஒழித்தாக வேண்டும் என்று காவல்துறையினர் தற்பொழுது கண்காணித்து வருகின்றனர்.


மாலை வேளையில் வாழைப்பழம் வாங்குவதற்காக கடைக்கு சென்றேன். ஒரு இளைஞன் apache bikeல் இருந்து இறங்கினான். வேகமாக வந்து, ‘இரண்டு கிராஸ் கொடுங்க’ என்றான்.


கடைக்காரர் அவனைப் பார்த்து நாங்க இப்பொழுது அதை விற்கிறதை விட்டு விட்டோம் என்று கடையின் அந்த ஓரத்தை காட்டினார். அதில் இயேசு கிறிஸ்து சிலுவையில் தொங்கும் படம் ஸ்டிக்கராக ஒட்டப்பட்டு இருந்தது. அதில் இவ்வாறு எழுதியிருந்தது. “இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி இரட்சிக்கும்” என.


இளைஞன் சிரித்துக் கொண்டே பக்கத்து கடையில் கிராஸை வாங்கிக் கொண்டு bikeல் மிக வேகமாக acceleratorயை கொடுத்தான். சரியாக லாரிவர டயருக்குள் கிராஸாகி விட்டான்.


இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php


Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

புத்தியுள்ள மனைவி

உண்மையை உரக்க சொல்வோம்