திறவுகோல் எங்கே?



ஒரு புத்தக கடைக்கு அடிக்கடி நான் சென்று வருவது உண்டு. அவ்வாறு சென்று வரும்போதெல்லாம் சுமார் 18 வயது மதிக்க கூடிய இளைஞன் ஒரு பையில் முறுக்கு வைத்துக் கொண்டு, sir இதை வாங்குங்கள் எனக்கு பள்ளியில் fees கட்ட வேண்டும் என்று சொல்லுவான். சிலர் வாங்கிக் கொள்வார்கள், சிலர் கண்டுகொள்ளாமல் போவார்கள். ஆனால் எப்போதுமே அதை அவன் வாடிக்கையாக்கி கொண்டே இருப்பான்.


சில வேளைகளில் பெற்றோருடைய சூழல் நிமித்தமாக சில சிறுவர்கள் கஷ்டப்படுகிற நிலைக்குள் தள்ளப்படுகிறார்கள். சிலர் இப்படி சொல்லியே அனுதாபத்தை தேடி பிழைப்பை நடத்துகிறார்கள். இவ்வாறு செய்வதால் யாருக்கு உதவி செய்யவேண்டும் யார் தேவை உள்ளவர்கள் என்பதை கண்டுபிடிப்பது கடினமாக உள்ளது.


கஷ்டங்களுக்கு மத்தியிலும் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்று யார் ஒருவர் மூச்சு காற்றை உள்வாங்குகிறார்களோ அவர்கள் கஷ்டங்கள், அவமானங்கள், ஏழ்மை என எல்லாவற்றையும் எருவாக்கி அழகிய விருட்சங்களாக பரந்து, விரிந்து, வளர்ந்து விடுகின்றனர்.


ஒரு சிறுவன் பிறக்கும்போதே ஒரு காதை இழந்து, முகம் கோணலாக பிறந்தான். ஏழு வயதாகும் போதே அவனும் அவன் சகோதரன் பிராங்கும், அவன் தாயும்  தந்தையிடமிருந்து பிரிந்து விடக் வேண்டிய சூழலுக்குள் தள்ளப்பட்டனர். தந்தையின் விவாகரத்து தாயை மட்டும் பாதிக்காமல், சிறுவர்களாக காணப்பட்ட பிள்ளைகளும் பாதிக்கப்பட்டனர். தந்தையின் அரவணைப்புக்காக ஏங்க வேண்டிய சூழல் வந்தது. படிப்பதற்கு தேவையான பணவசதிக்காகவும் பிறரை நோக்க வேண்டிய சூழல் வந்தது.


வாழ்க்கையை ஓட்டுவதற்காக ஹோட்டலில் பணியாற்ற வேண்டிய சூழலுக்குள் தள்ளப்பட்டான். இருப்பினும் நன்றாக உடலை பேணி இரும்பாக்கினான். இச்சூழலில் ஒரு அருமையான திரைக்கதையை எழுதி அதனை படமாக்குவதற்காக நல்ல சினிமா தயாரிப்பாளர்களை அணுகினான். சிலர் ok என்றனர்.  ஆனால் அடுத்த condition! அதில் நான் தான் Hero!! என்றான் அந்த இளைஞன். இவனை எப்படி Heroவாக்குவது என்று பலரும் தள்ளிவிட்டனர்.


மனம் தளரவில்லை, தன்னுடைய கதைக்கு தான் தான் உயிரூட்ட முடியும் என்பதில் உறுதியாக இருந்தான். காலங்கள் தாமதமானாலும் 1 மில்லியன் டாலர் செலவில் படமாக்க ஒரு தயாரிப்பாளர் முன்வந்தார். முழுத்திறமையும் வெளிப்பட வறுமையில் பிறந்து உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரன் characterல் நடித்து அந்தப் பாத்திரத்திற்கு உயிர் கொடுத்தான். பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டி 40 மில்லியன் டாலரை கொண்டு சேர்த்தது. தகப்பனாரால் புறக்கணிக்கப்பட்டவன், சமுதாயத்தால் கண்டுகொள்ளப்படாதவன், அதிக ரசிகர்களை கொண்ட ரசிகனாக, ஹாலிவுட் நடிகனாக உலகப் புகழ்பெற்றான். அவர்தான் சில்வெஸ்டர் ஸ்டாலன் (Sylvester Enzio Stallone).


உடம்பை மட்டும் உரம் ஏற்றுவதல்ல,  உள்ளத்தையும் உரம் ஏற்றிவை. முயற்சித்துக் கொண்டே இருந்தால் தான் உயர்நிலையை அடைய முடியும்.


திருமறையில் யெப்தாவின் உதவியை கீலேயாத்தின் பெரியவர்கள் அணுகினர். அப்பொழுது அவர்களைப் பார்த்து என்னை கறிவேப்பிலை போல் பயன்படுத்தி விட்டு தூக்கி தூர வீசி விடக்கூடாது. என்னை அழைத்து பயன்படுத்த வேண்டும் என்றால் உங்கள் மீது என்னை தலைவனாகவும், சேனாதிபதியாகவும் மாற்றுவதற்கு உறுதியளித்தால் மட்டுமே தான் வருவேன் என்று உறுதியாக சொல்லிவிட்டான். (நியாயாதிபதிகள் 11) இறுதியில் இஸ்ரவேல் மக்கள் அனைவரும் சம்மதித்தனர். அவனை நியாயாதிபதியாக மாற்றிவிட்டனர். தன்னை தேவைக்கு மட்டும் பயன்படுத்தி விட்டு தூர வீசி விடக்கூடிய மனிதனாக வாழக் கூடாது என்பதில் யெப்தா தீர்க்கமாக இருந்தான்.


இன்றைய இளைஞர்கள் B.E, M.E, M.Sc, Ph.D, என்று எல்லாம் படித்துவிட்டு, ஏதாவது ஒரு வேலை கிடைத்தால் போதும் என்ற மனநிலைக்குள் போய்விடுகின்றனர். தங்களின் முழு திறமைகளையும் வெளிக் காட்டக் கூடிய சூழலை உருவாக்கிக் கொள்ளவோ, பயன்படுத்தவோ முடியாமல் இருக்கின்றனர். அவர்கள் மனநிலையில் ஊக்கமும், உயர்ந்தே ஆகவேண்டும் என்ற வேகமும் இரத்தத்தில் கலக்க வேண்டும். இலட்சியத்தை அடையும் வரையில் அடைகாத்து வெற்றி பெற வேண்டும் என்ற அவாவை உருவாக்கிக் கொள்ள வேண்டும். உயிருள்ள மீன்களாக நீரோட்டத்தை எதிர்த்து நீச்சல் போட பழகிக் கொள்ள வேண்டும்.


இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி