இன்பத்திலும், துன்பத்திலும்


பிரவீனும் அவன் துணைவி வினோலியாவும் எதிர் எதிர் திசையில் முறைத்துக் கொண்டிருக்க ஒரு சம்பவத்தை அவர்களுக்கு நினைவு படுத்தினேன்.


சார்லஸ் பிளாண்டின் நயாகரா அருவியை கடக்க முயன்று வெற்றியை கண்டவர். அவரைப் பற்றி கூறினேன். நயாகராவின் அகலம் சுமார் 4500 அடி, உயரம் 175 அடி. முதல் சாதனையை 1859ல் நிகழ்த்திய போது மக்கள் ஆரவாரம் பண்ணினார்கள்.


அடுத்த ஆண்டும் அதைப்போன்று கடக்க போகிறார் என்ற உடன் அதை பார்க்க பெரும் கூட்டம் சுற்றிவளைத்து இடத்தை பிடித்துக் கொண்டு நின்றது. வேல்ஸ் இளவரசரும் அதைக் காண வந்தார். சார்லஸ் சூப்பராக நடந்து அடுத்த கரைக்கு வந்து சேர்ந்தார். மக்கள் விசில் பறக்க கரகோஷம் விண்ணை பிளந்தது.


மக்கள் கூட்டத்தை பார்த்து மீண்டும் நான் கடக்க விரும்புகிறேன். ஆனால் தனியாக அல்ல, உங்களில் ஒருவர் வரலாம் என்று அழைப்பு கொடுத்தார். அந்த அழைப்பை ஏற்க முன் வந்தது யார் என்றால் இந்த சாதனையை பார்க்க விளம்பரங்களை நடத்திய ‘கல்கார்ட்’ என்பவர் தான். மற்றவர் எல்லாரும் முன்னங்கால் பிடரி அடிக்க ஓடினர்.


கல்கார்டை தோளிலும், முதுகிலும் தூக்கிக்கொண்டு சென்றார் சார்லஸ். மெதுவாக மெதுவாக முன்னேறி நடுப்பகுதிவரை வந்துவிட்டார். கீழே பார்த்தால் சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது நீர்வீழ்ச்சி, விழுந்தால் எலும்பை கூட பொறுக்க முடியாது.


அடி அடியாய் முன்னேறி முக்கால் பகுதியை கடந்த போது எதிர்பாராமல் கயிற்றில் ஒரு பிணைப்பு அறுந்து விட்டது. இதனால் கயிறு அங்கும் இங்குமாக ஆட ஆரம்பித்தது. தனியாக இருந்தால் தன்னை காத்துக்கொள்ள சார்லஸ் ஆல் முடியும் ஆனால் கல்கார்ட் இருப்பதால் அவரை விட்டு விட்டு ஓட முடியாத இக்கட்டான நிலை.


கல்கார்ட், சார்லஸ் இடம் “நான் என்ன செய்ய வேண்டும், உன் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது” என்றார்.


“நீங்கள் ஒன்றும் செய்யாமல் இருந்தால் போதும், நீர் என் முதுகில் ஏறி பிடித்துக்கொள்ள வேண்டும், தனித்து இயங்காதிரும்” என்றான்.


விளக்கமாக சொல்லும் என்றார் கல்கார்ட். நீர் இப்பொழுது கல்கார்ட் அல்ல சார்லஸ் ஆக மாறி விட வேண்டும். நீர் பிழைத்தாலும், மரித்தாலும் என்னையே சார்ந்துக்கொள்ளும், என்னோடு நீர் ஒத்துழைத்தால் மட்டும் போதும்.


சரி நான் ஒத்துழைக்கிறேன்.

“கயிறு எவ்வளவு ஆடினாலும் நீர் செயல்பட வேண்டாம். என்னை மாத்திரம் பிடித்துக் கொண்டால் போதும்.”


Ok


மக்கள் எல்லாரும் அவர்களின் முடிவை பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.


அவர்கள் இருவராக இருந்தாலும் ஒருவராய் மாறியது போல செயல்பாடு ஆரம்பமானது. இப்பொழுது சார்லஸ் தனிப்பட்ட மனிதனை போல வேகம் எடுத்தார். சமநிலை தவறாமல் கண் இமைக்கும் நேரத்தில் கரையை அடைந்தார். இருவரும் பாதுகாக்கப்பட்டனர் என்று விளக்கமாக எடுத்துரைத்தேன்.


என்ன வினோலியா என்ன நினைக்கிறீர்கள் என்றேன்?


புரிகிறது. பிரவீனை பொருளாதார பிரச்சனையின் மத்தியில் விட்டுவிட்டு வந்தது தவறுதான்.


திருமறையில் ஆபிரகாமை கர்த்தர் அழைத்தபோது தன் மனைவியோடு புறப்பட்டான். சாராள் அவனிடம் கேள்வி எழுப்பவில்லை. ஆபிரகாமோடு பல்வேறு இடங்களுக்கு சென்ற போது பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. பஞ்சமான சூழல் வருத்தியது. ஆனாலும் பொறுமையோடு ஆபிரகாமோடு வாழ்க்கையை நடத்தியதால் தான் நாம் இன்று விசுவாசத்தின் தாயாக பார்க்கிறோம் என்றேன்.


வினோலியா கண்களில் இருந்து கண்ணீர் சிறு நீரோடையாக ஓடியது. நானும் அவரோடு சேர்ந்து தான் துன்பத்தை அனுபவிப்பது கடவுளின் சித்தமா? என்றாள்


வாழ்விலும், தாழ்விலும், சுகத்திலும், துக்கத்திலும் என்று வாக்கு கொடுத்ததை நினைவூட்டினேன்.


அன்று சொல்லும்போது மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. ஆனால் இப்பொழுது கசக்கிறது என்று சிரித்துக் கொண்டே கண் கலங்கினாள்.


அன்று ஆலய ஆராதனை முடிந்து எல்லாரும் வெளியே வந்து கொண்டிருந்தனர். எல்லாரையும் வாழ்த்தி விடையனுப்பும் போது ஒரு couple சேர்ந்து வந்து “ஸ்தோத்திரம்” என்றனர். அது வேறு யாருமல்ல பிரவீனும், வினோலியாவும் தான். இருவரும் ஒரே மாம்சமாயிருந்தார்கள். 


இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி