ஸ்வீடன் மருமகளே வருக

 


ஸ்வீடன் நாட்டைச் சார்ந்த 16 வயது சிறுமி மும்பையைச் சார்ந்த 19 வயது கல்லூரி மாணவருடன் instagramமில் தூது விட்டுக் கொண்டிருந்தார்கள். எவ்வளவு நாள் தான் இப்படி சும்மா chatting பண்ணிக் கொண்டே இருப்பது, பேசாமல் கொஞ்சம் போய் தான் பார்த்து விட்டு வந்து விடலாமே என நம்ம ஊரில் பஸ்ஸை பிடித்து செல்வது போல் tourist visaவில் flight பிடித்து வந்து சேர்ந்தாள் ஸ்வீடன் நாட்டு மருமகள் மும்பைக்கு!

திபு திபுவென்று சொல்லாமல் திடீரென்று வந்து விட்டாளே மருமகள் என்று மனம் பதறினர் கல்லூரி மாணவனின் பெற்றோர். வந்த மருமகளை உடனே என்னச் செய்வதென்று தெரியாமல் உறவுக்காரர்கள் வீட்டில் உட்கார வைத்தனர்.

ஸ்வீடனில் இருந்து பெற்றோரின் அனுமதியில்லாமல் சண்டிங் வந்ததை உணராத பெற்றோர்கள் மகளைக் காணாமல் ஸ்வீடனில் போலீஸ்க்கு தகவல் கொடுத்தனர். மகளுடைய இன்ஸ்டாகிராமைப் பார்த்தால் மும்பை மாணவருடன் chat பண்ணினதைத் தெரிந்துக் கொண்டனர். இறுதியாய் வலை வீசிப் பார்த்ததில் சிறுமி மும்பையில் முகாமிட்டிருப்பது தெரிந்தது. சர்வதேச காவல் துறை உதவியுடன் சிறுமியின் தந்தை வந்து மகளை சமாதானப்படுத்தி தன்னோடு ஸ்வீடனுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இப்படி ஸ்வீடன் நாட்டு சிறுமி ஏன் இப்படி செய்தாள் என்கிறீர்களா? ஒரு வேளை இதனை 'இன்பிரீடிங் டிப்ரஷன்' (inbreeding depression) என்று எடுத்துக் கொள்ளலாம். உறவுக்குள் பெண்/ஆண் தேர்ந்தெடுத்தால் வாரிசுக்கு நல்லதல்ல என்று கூறுகிறோம் அல்லவா. அதைப் போன்ற மனநிலை. குடும்பத்திற்குள்ளேயே கொடுத்து வாங்கிக் கொண்டிருந்தால், பிள்ளைகளின் ஆரோக்கியம் குன்றிவிடும், இறுதியாக இனமே அழிந்து விடும் என்கிறது பரிணாமக் கொள்கை. எனவே மனிதனுக்குள்ளும், மிருகங்களுக்குள்ளும் கூட இரத்த பாசங்களைத் தாண்டி தான் தங்கள் உறவை வைத்துக் கொள்ளுகின்றன.

குடும்பத்தில் எல்லாரும் மிகப் பெரிய படிப்பாளியாக இருக்கும் போது நமது குடும்பத்திற்கே தொடர்பற்ற படிப்பில் நாட்டமில்லாத ஒருவரை பிள்ளைகள் தெரிவுச் செய்வதற்கும் ஒரு காரணம் நமது அப்பா, அன்ணன், தம்பி போன்று நமது துணை இருக்கக் கூடாது என்று நினைப்பது தான். அதனால் தான் பிள்ளைகளைப் பார்த்து இருந்து இருந்து இப்படி ஒருவனைப் பார்த்திருக்கிறீயே உனக்கு புத்திக்கு சரியில்லையா என்று கேட்கிறார்கள். ஆனால் புத்தியில் பிறன் நிலை இல்லை. மனம் தான் ultimate ஆன ஒரு சந்ததி வர வேண்டும் என கனக்குப் போடுகிறது.

இதனால் தான் ஸ்வீடன் நாட்டு பெண் இந்திய நாட்டின் மீது படையெடுத்ததற்கு காரணமாக இருக்கலாம்.

திருமறையில், தீனாள் என்ற யாக்கோபின் மகள் தேசத்தை சுற்றிப் பார்க்க சென்ற போது ஏவியனாகிய சீகேம் என்பவனின் மனம் தீனாள் மேல் பற்றுதலாயிருந்தது. அவன் தீனாளை நேசித்து, அந்த பெண்ணின் மனதுக்கு இன்பமாய் பேசினான் (ஆதியாகமம் 34:1-8). யாக்கோபுடைய குடும்பத்திற்கு சற்றும் சம்பந்தமில்லாதவன் சீகேம். ஆனால் சீகேமின் தகப்பன் யாக்கோபுவுடன் பேசி உங்கள் குமாரத்திகளை எங்களுக்கு கொடுத்து, எங்கள் குமாரத்திகளை உங்களுக்கு கொண்டு, எங்களோடே வாசம் பண்ணுங்கள் என்று அழைக்கிறான். ஆனால் இந்த நிகழ்வுக்கு பின்பு மிகப் பெரிய யுத்தமே நடந்து விடுகிறது.   பலர் மடிந்துப் போய் விடுகின்றனர்.

இன்றைய சூழலில் வலை தளம் என்பது வரை முறைகளைத் தாண்டி பழகுவதற்கு வாய்ப்பாக அமைந்து விடுகிறது. அதிலும் குறிப்பிட்ட வயதை ஏய்துவதற்கு முன்பே  வாழ்வை துவங்க துடித்து தவறான முடிவுகளை எடுத்து விடுகின்றனர். இதனால் பெற்றோர்கள் மனம் பதறிப் போய் விடுகின்றனர். வலைத் தளத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்த இளம் வயதுள்ளோர் தான் முடிவெடுக்க வேண்டும். நல்ல எதிர்காலத்தை இழந்துவிடக் கூடாது.

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி