குற்றமில்லா குற்றம்


வங்கியில் பணிபுரியும் ரினுவிற்கு ஏற்ற வரனைத் தேடி தேடி பெற்றோர்கள் அலைந்தார்கள். தன் மகள் வங்கியில் பணிபுரிவதால் அதற்கு மேல் சம்பளம் வாங்கும் மணமகனே தேவை என அலைந்து தேடிக் கொண்டிருந்தனர். சம்பளம் தானே இப்போது திருமணத்திற்கு முதன்மையான தகுதியாக இருக்கிறது! அப்படி அதிக சம்பளம் பெறும் மற்றொரு அரசாங்க வங்கியில் மானேஜராக பணியாற்றும் ஷியாம் மாட்டிக் கொண்டான். சம்பளம், அழகு எதற்கும் குறைவில்லை. பெற்றோரும் அரசாங்கத்தில் கைநிறைய சம்பளம் வாங்குகிறவர்கள். தங்கள் தகுதிக்கு ஏற்ப வரன் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. 

போதகரிடம் வந்து Banes வாசிப்பதற்காக வந்தார்கள். போதகர் Premarital counselling படிக்கச் செல்ல வேண்டும், திருமுழுக்கு, திருவிருந்து, ஆதார் கார்டு எல்லாம் நகல் வேண்டும் என்றார். உடனே மணமகளின் தகப்பனார் இந்த நகலெல்லாம் இருக்கிறது. ஆனால் Premarital counseling எல்லாம் எதற்கு? எங்கள் பிள்ளைகள் ஒழுக்கமானவர்கள். சிறு வயதில் இருந்தே ஆலயத்திற்கு செல்பவர்கள். மாப்பிள்ளை எங்களுக்கு கிடைத்ததே பெரிய காரியம். அவர்களை இப்படிப்போட்டு பாடாய் படுத்துகிறீர்களே! உங்களுக்கு எங்கள் நிலைமை தெரிகிறதா? மணமகன் பெரிய மேனேஜர் அவருக்கு நேரமே இருக்காது. அப்படி இருக்கும் போது ஏன் இந்த Premarital! நாங்க எல்லாம் இப்படி படித்து விட்டா திருமணம் பண்ணினோம்!! சும்மா அவசியம் இல்லாம செய்றீங்க!!! எத்தனையோ பிள்ளைகள் படித்து விட்டு வேலை இல்லாமல் இருக்கும் போது எங்க பிள்ளைகள் வேலைப் பார்த்து ஜம்முன்னு இருக்கிறாங்க. அவங்களுக்கு குடும்பத்தை நடத்தத் தெரியாதா? நீங்கள் சொல்லிக் கொடுத்து தான் தெரிந்துக் கொள்ள போகிறாங்களா என்ன? என்று பொரிந்துத் தள்ளினார்.

தொந்தரவு தாங்க முடியாத போதகர் அவரைப் பார்த்து உங்கள் பிள்ளைகள் Premarital counselling போகிறதும் போகாததும் உங்கள் விருப்பம் Sir, என்று திருமண அறிக்கையை வாசிக்க ஒத்துக்கொண்டார்.

பல இலட்சங்களை தாரை வார்த்து திருமணம் ஜே ஜே என்று நடந்தது. ஆடம்பரமான திருமணம். பலர் வியக்கும் அளவிற்கு திருமணம் நடந்தது. கடமைக்காக ஆலயத்தில் போதகர் திருமணத்தை நடத்தி தன் காரியத்தை முடித்துக் கொண்டார்.

ஏழு மாதம் கழித்து ரீனுவின் தந்தை போதகரைப் பார்க்க வந்தார். ஐயா என் மகளுக்கு ஏதாவது வரன் கிடைக்குமா என்று விக்கி விழுங்கி கூறினார்.

போதகருக்கு அதிர்ச்சியாக இருந்தது. என்ன பிரச்சனை என்று விசாரித்த போது,”என் மகளுக்கு அவனைப் பிடிக்கவில்லை என்று கூறி விட்டு திருமணமான இரண்டாம் மாதமே வீட்டிற்கு வந்து விட்டாள். என்ன பிரச்சனை என்று கேட்ட போது எனக்குப் பிடிக்கவில்லை! அவ்வளவு தான்! அவன் வேண்டவே வேண்டாம் என்று உறுதியாக கூறிவிட்டதால் mutual divorce வாங்கிவிட்டோம்” என்று கூறி கண்கலங்கினார்.

தற்பொழுது எந்த பிரச்சனை எதுவுமே இல்லாவிட்டாலும் திருமண முறிவு செய்துக் கொள்வது பெருகி வருகிறது. 1960ம் வருடத்திற்கு பின்பு No fault  marriage என்று இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி போன்ற நாடுகளில் பெருகிவருகிறது. இப்பொழுது இந்தியாவும் அதற்கு விதிவிலக்கல்ல. ஒரு பெண் நீதிபதி divorce கேட்ட ஒரு பெண்ணுக்கு கூறும் போது, “எந்த ஒரு ஆணும் ஒரு பெண்ணை எல்லா நேரங்களிலும் திருப்தி படுத்த முடியாது” என்று குறிப்பிட்டார் (' No man can satisfy a woman at all times')   இது பெண்ணுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் சேர்த்து தான்.

உங்கள் இருதய கடினத்தினிமித்தம் தான் தள்ளுதற் சீட்டைக் கொடுத்து தள்ளி விடலாம் என்று மோசே கூறினார் என்று இயசுவானவர் divorce குறித்து கூறினார் (மாற்கு 10:5). ஆனால் தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருப்பானாக என்று தம்முடைய கருத்தைக் கூறினார். இன்று “இருதய கடினம்” சாதாரண விஷயங்களுக்கே வந்து விடுகிறது தான் பரிதாபத்திற்குரிய காரியம்.

திருமணத்திற்கு முன் ஆலோசனை (Premarital counselling) என்பது மிகவும் முக்கியம். அது ஒரு நிலத்தை விவசாயி பயிரிடும் முன் பயன்படுத்துவது போன்றது. இன்று பண்படுத்தாமலே விதையை விதைக்க விரும்புகின்றனர். ஆகவே முளைத்த உடன் சீக்கிரத்தில் கருகி விடுகிறது இன்றைய திருமணங்கள்.

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு :  நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

புத்தியுள்ள மனைவி

உண்மையை உரக்க சொல்வோம்