Knighthood



ஆசிரியர் ஒருவர் மனம் உடைந்து தன் பணியில் சலிப்புடன் புலம்பினார். மாணவர்களுக்காகவே வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்து இரவு, பகலாக உழைத்தாலும் நமது பணியின் தியாகத்தைப் புரிந்துக் கொள்வதில்லை மாணவர்கள். அதே வேளையில் மாணவர்களை என் பிள்ளைகளை போல் நினைத்து சீர்திருத்தி சரியான பாதையில் அவர்களை வழிநடத்தினால் சிறை கைதியாக மாற வேண்டிய சூழல் வந்து விடும் போல இருக்கிறதே என்று மனம் வெதும்பினார்.

எத்தனை கடுமையான சூழல்கள் வந்தாலும் ஆசிரியர்கள் பிள்ளைகளை ஒழுக்கத்திலும், உயர் மட்டத்திற்கு அழைத்துச் செல்வதற்காகவும் சிரத்தை எடுத்துக் கொள்கின்றனர். அவர்கள் செயல்கள் காலங்கள் கடந்தாலும் வரலாற்றில் இருந்து மறக்க முடியாததாக மாறி விடுகிறது.            

உலகம் சுற்றி சுற்றி வந்தாலும் சர் சந்திரசேகர வெங்கட்ராமன் அவர்களின் பேராசிரிய பணி விடை இன்றும் மறக்கப்பட முடியாததாகவே இருக்கிறது. இவர் அரசு துறையில் நிதி கணக்கராக இருந்து, பின்னால் கல்கத்தாப் பல்கலை கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக 1917ல் பணியை ஏற்றவர். அத்தோடு மன நிறைவு கொள்ளாமல் ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டவர். ஒளியியல் மற்றும் ஒளி சிதறலுக்கான ஆராய்ச்சி பணியானது உலக அளவில் அவருக்கு அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுத்தது. 1929 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பேரரசால் 'Knighthood' என்ற பட்டமும், இங்கிலாந்து அரசியால் 'சர்' என்ற பட்டமும், 1930ல் நோபல் பரிசும், 1954ல் பாரத ரத்னா விருதையும் பெற்றார்.

இந்த பாரத ரத்னா விருதைப் பெற வரும் போது தன் வீட்டில் விருந்தினராக தங்க அழைப்பைக் கொடுத்தார் அப்பொழுது இருந்த குடியரசுத் தலைவர் Dr. ராஜேந்திர பிரசாத்.

அழைப்பைக் கேட்டு மகிழ்ந்தாலும் செய்யும் ஆசிரியப் பணியின் அர்ப்பணிப்பு என்பது அவ்வாறு தங்குவதற்கு இடமளிக்கவில்லை. எனவே மறுகடிதத்தில் தான் முனைவர் பட்ட படிப்பு படிக்கும் மாணவரின் வழிகாட்டியாக இருப்பதால் இறுதி கட்டத்தில் இருக்கும் அவருக்கு உதவிச் செய்ய வேண்டிய சூழல் இருப்பதால் தங்களுடைய அழைப்பிற்கு இணங்கி வர இயலவில்லை என்று தன் நிலையை வெளிப்படுத்தினார்.

ஆசிரிய பணிவிடையின் பொருட்டு ஈர்க்கப்பட்ட சர் சி. வி. இராமன் விருந்துக்கும்விழாவிற்கும் முக்கியத்துவத்தைக் கொடுக்காமல் கடமையே கண்ணாகி வாழ்ந்தவர். இறந்தும் நம்மிடையே வாழ்ந்துக் கொண்டே இருக்கிறார்.

ஈடு இணையற்ற பணி தான் ஆசிரிய பணி. எண்ணற்ற அறிவியல் அறிஞர்களையும், பொறியியலாளர்களையும், கணக்காளர்களையும், அரசு பணிவிடைச் செய்பவர்களையும், மேலாளர்களையும், விஞ்ஞானிகளையும், பல்வேறு துறையினரையும்  உருவாக்கிக் கொண்டு தான் இருக்கிறீர்கள். இடை இடையே வரும் இடைஞ்சல்களையெல்லாம் ஒரு பொருட்டாக எண்ணாமல் செய்யும் பணியில் மகிழ்வுடன் செயல்பட வேண்டும்.   

இயேசு கிறிஸ்துவும் ஒரு போதகராக காணப்பட்டார். அவருடைய போதனைகளைக் குறித்த எதிர்கருத்துக்கள் பல இருந்தாலும் தன்னுடைய கருத்தில் மிகவும் தெளிவாக இருந்தார். "நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்று அடிக்கடி தன்னுடைய மேலான கருத்துக்களை துணிந்து வெளிப்படுத்தினார். அக்கருத்துக்கள் தான் பாரம்பரியமாக நம்பி வந்த கருத்துக்களை கல்லறைக்கு அனுப்பியது. புதிய சமுதாயத்திற்கு புத்துயிர் ஊட்டுவதாக அவர் பேசியதால் இன்றும் புனிதமாக போற்றப்படுகிறது.

வார்த்தைகள் ஒவ்வொன்றும் பிள்ளைகளின் தலை விதியாக எழுதுகிறவர்கள் தான் ஆசிரியர்கள் என்பதை மறந்துப் போகாமல் முனைப்போடு பணியாற்றுங்கள். உங்களை ஆசிரிய பணிவிடைக்கு அழைத்தவர் முற்று முடிய தாங்கி வழி நடத்த வல்லவராக இருக்கிறார்.

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி