Powerful பெண்கள்
ஆண்களைக் காட்டிலும் பெண்கள் மிகவும் புத்திசாலித்தனமாக பிறரை கணித்துவிடுகின்றனர். "நான் கூட இப்படி நினைக்கவில்லை, நீ எப்படி சரியாக அவன்/அவள் உள்நோக்கத்தை கண்டுபிடித்து விட்டாய்?" என்று ஆச்சரியமாக மனைவியைப் பார்த்து கணவன் கேட்பதுண்டு. பெண்களைப் பற்றி உளவியல் நிபுணர் டாக்டர் சாலினி அவர்கள் குறிப்பிடும் போது "...the female of the species is deadlier than the male” என்று குறிப்பிடுவார். காரணம் பெண் இனமானது ஆண்களைக் காட்டிலும் பழங்காலங்களிலே வேட்டையாடுவதிலும், தன்னுடைய குட்டிகளைப் பாதுகாப்பதிலும், ஞானமாக பிழைக்கும் திறன் உடையவர்களாகவே வாழ்ந்து வருகின்றனர். பெண் மிருகங்கள் எப்படி வேட்டையாடி தன் இனத்தை வாழ வைக்கிறதோ அப்படித்தான் மனித இனமும் கூட தன் பிள்ளைகளை காப்பதிலும், எதிர்காலத்தை அமைத்துக் கொடுப்பதிலும் மிகவும் கருத்தாக இருப்பார்கள்.
அன்று வட்டிக்கு கொடுத்தவர் வீட்டிற்குள் வந்து கண்டபடியெல்லாம் திட்டு திட்டு என்று திட்டித் தள்ளினான். தன் தந்தை தலை குனிந்து நின்றுக் கொண்டே இருந்தார். தந்தையின் நிலையை கண்டு மனம் உடைந்த சாலினி மெதுவாக தந்தையின் நிலையைக் கண்டு வருந்தி சமையல் அறைக்குள் இருந்து வெளியே வந்தாள். அவளைப் பார்த்த உடன் வட்டிக்காரன் கோபம் பொசுக்கென்று மறைந்தது.
அவன் மூளை வேறு calculation போட்டது. பெரியவரே என்னை தப்பா நினைக்காதிரும். நீங்க நினைத்தால் இந்த பிரச்சனையை ஈசியா சரி பண்ணிடலாம் என்றான்.
பெரியவருக்கு திடீர் மாற்றம் ஆச்சரியமாக இருந்தது. எப்படி! என்றார். வேறு ஒன்றுமில்ல. என் மனைவி இறந்து 5 வருடம் ஆகி விட்டது. எனக்கு வயது 60. சூடு தண்ணீர் வைப்பதற்கு கூட ஆள் இல்ல என்று மெதுவாக இழுத்தான்.
சரி அதற்கு நான் என்னப்பா செய்ய முடியும்? என்றார் பெரியவர். நாளைக்கு நம்ம ஊர் பஞ்சாயத்தை கூட்டி இதற்கு ஒரு தீர்வை உருவாக்குவோம். நம்ம ஊர் ஆற்றில் இருந்து ஒரு வெள்ளைக் கூழாங்கல்லும், கருப்பு கூழாங்கல்லையும் எடுத்து ஒரு பையில் போட்டு வருகிறேன். உமது மகளை அதில் ஒன்றை எடுக்கச் சொல்லுவோம். வெள்ளைக் கல் வந்தால் நீர் கடனை திருப்பி தரவேண்டாம். கருப்பு கல் வந்தால் உமது மகளை எனக்கு திருமணம் செய்து வைத்து விடும். இதைத் தவிர வேறு வழியில்லை. உம்மால் கடனை திருப்பி தந்துக் கொள்ள மாட்டீர் என்று ஒரே போடாக போட்டான்.
என்னச் செய்வதென்று தெரியாமல் பெரியவர் விழி தள்ளி நின்றார். அருகில் இருந்த மகள் இதில் ஏதோ ஒரு trick இருக்கும் போல் தெரிகிறதே என்று அவள் computer மூளை கனக்குப் போட்டது. இருப்பினும் அந்த 60 வயது கிழவனை, இந்த 20 வயது கம்பியூட்டர் பெண் சமாளிக்க முடியாதா? என்ன என்று களம் இறங்க சம்மதித்தவளாக தகப்பனைப் பார்த்து green signal கொடுத்தாள்.
பெரியவரும் வழி தெரியாமல் சரி என்று ஒத்துக் கொண்டார். பஞ்சாயத்து அடுத்த நாள் கூடியது. ஆற்றோரமாய் மக்கள் நின்றுக் கொண்டிருக்க வட்டிக்காரன் இரண்டு கூழாங்கல் எடுக்கப் போனான். அவன் 2 கருப்பு கூழாங் கல்லை எடுத்துப் பையில் போட்டான். திகைத்துப் போனாள் சாலினி. எப்படியும் மாட்டித்தான் ஆக வேண்டுமா? கடவுளே என்று மன்றாடினாள்.
ஊர் மக்கள் கூடியிருக்க பையை சாலினி பக்கம் நீட்டினான் வட்டிக்காரன்.
மக்களெல்லாரும் ஆவலாய் காத்திருக்க, சாலினி ஒரு கல்லை எடுத்தவள் அப்படியே மயங்கியவாறு கல்லைக் கீழேப் போட்டு விட்டாள். அது மற்ற கீழே கிடந்த கல்லோடு ஓடி சேர்ந்தது. எதுவென்று தெரியாமல் மக்கள் திகைத்தனர்.
தன்னை சுதாகரித்துக் கொண்ட சாலினி மெதுவாக எழுந்தாள். ஐயா என்னை மன்னித்து விடுங்கள், தெரியாமல் கல் கீழே விழுந்து விட்டது. இப்போதும் பையில் ஒரு கல் இருக்கிறது. நான் எடுத்தது வெள்ளை என்றால் உள்ளே இருப்பது கருப்பு, என் தந்தை கடனை செலுத்த வேண்டிய அவசியமில்லை, நான் அவரை திருமணம் செய்ய வேண்டிய கட்டாயமுமில்லை. ஒரு வேளை நான் எடுத்தது கருப்பாக இருந்தால் உள்ளே வெள்ளைக் கல் இருக்கும், நான் திருமணம் செய்துக் கொள்கிறேன் என்று கூறி ஊர் பெரியவர்களிடம் பையைக் கொடுத்து நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என்றாள்.
உள்ளே கருப்பு கல் இருக்க calculation workout ஆனது. மகிழ்ச்சியோடு நடையை கட்டினாள் தகப்பனுடன் சாலினி.
குணசாலியான ஸ்திரியைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப் பார்க்கிலும் உயர்ந்தது (நீதிமொழிகள் 31:10) என்று திருமறை கூறுகிறது. எலிசாவின் காலத்தில் தீர்க்கதரிசியின் பிள்ளைகளை அடிமையாக்கிட கடன் கொடுத்தவர்கள் முயன்ற போது, தீர்க்கதரிசியின் மனைவி எலிசாவிடம் முறையிடுகிறார். இறைவனின் அருளால் அவள் கடனை அடைத்துப் பிள்ளைகளை காக்கிறாள். பெண்களிடம் அதிக திறமைகள் மறைந்து இருக்கிறது. தீமைச் செய்யும் மனிதர்களின் சூட்சமத்தைப் புரிந்துக் கொள்ளும் முன் மதியுடையவர்களாக கடவுள் படைத்துள்ளார். பெண்கள் சமுதாயமே வெற்றியுள்ள வாழ்வு வாழ அழைக்கிறார் இறைவன்.
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Comments
Post a Comment