மூழ்கி விடுவேனோ?

மா-சே-தூங் சீன தேசத்தின் சிற்பி என அழைக்கப்படுகிறார். சீனாவின் ஹீனன் மாநிலத்தில் உள்ள ஒரு சிற்றூரில் பிறந்தவர். படிப்பை முடித்து ஆசிரியராகவும், நூல் நிலையத்திலும் பணியாற்றியவர். பின்னர் கம்யூனிஸ்ட் கொள்கையில் ஈடுபாடு கொண்டு, கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து மன்னராட்சியை எதிர்த்தவர். 1934ல் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகி, 1949 அக்டோபரில் சீனா குடியரசு நாடாக மலர்ந்த போது முதல் அதிபராக பதவி ஏற்றவர்.

நீச்சல் அடிப்பது அவருக்கு அலாதி பிரியம். நீச்சல் அடித்தால் உடல் வலிமையாக இருக்கும். எனவே அனைவரும் நீச்சல் அடிக்கும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும் என்று கூறுபவர். சீனாவில் புரட்சியை ஏற்படுத்திய இவர் நீண்ட விவாதங்கள் செய்ய வேண்டுமென்றால் கூட ஒரு நீண்ட நீச்சலைப் போட்டு விட்டு தான் மனிதர் வந்து அமருவார்.

வயது 60 ஆனாலும் நீச்சலை மட்டும் விட்டு விடவில்லை. குறிப்பாக சீனாவின் அதிபரான பின்பும், பாதுகாவலர்களின் எச்சரிக்கையையும் மீறி அலைகளுக்கு மத்தியில் நீச்சல் அடித்து வந்தால் தான் அவரின் மனதுக்கு ஆறுதலாக இருக்கும்.

என்ன மனுஷன், கொஞ்சம் கூட பயம் கிடையாதா என்று கேட்டவர்களுக்கு அவர் சொல்லும் பதில், "நாம் மூழ்கிவிடுவோமோ என்று ஒரு போதும் அச்சப்படாமல் இருந்தால் ஒரு நாளும் மூழ்கமாட்டோம்.   பயந்தால் மூழ்குவது நிச்சயம்" என்றார்.

இந்த அலையை எதிர் கொள்ளும் பழக்கம் தான் மா-சே-தூங் வாழ்க்கையில் வந்த பிரச்சனைகளை எதிர் கொள்வதற்கு அவருக்கு நெஞ்சுறுதியைக் கொடுத்தது.

பயம் என்பது மனிதர்களின் வாழ்க்கையில் முன்னேற விடாமல் தடுக்கும் ஒரு சக்தி. பயம் அறியாமல் ஒரு காரியத்தைச் செய்பவர்கள், பயத்தைப் பற்றி அறிந்தால் ஒரு செயலைச் செய்யும் திராணியை இழந்து விடுவார்கள். அதிகம் பயப்படுகிறவர்கள் வீடுகளுக்குள்ளே முடங்கி விடுவார்கள். வெளியே சென்றால் என்ன ஆகுமோ! தொழிலில் பணத்தைப் போட்டால் எல்லாம் இழந்து விடுவோமோ! இந்த குறிப்பிட்ட காரியத்தில் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ? இப்படி பல்வேறு சூழல்களில் பயந்து நடுங்குகிறவர்கள் வாழ்க்கையில் ஒரு காரியத்தையும் செய்து முடிக்க முடியாமல் போய் விடுவார்கள்.

அதிக பயம் ஒருவருக்கு வந்து வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்களென்றால் நிச்சயமாக மனநல மருத்துவரிடம் சென்று ஆலோசனைக் கேட்பது மிகவும் அவசியமானது.

குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுவதற்கு சில இளைஞர்கள், இளம் பெண்கள் பயப்படுகின்றனர். இதனால் தனக்கு திருமணமே வேண்டாம் என்று ஒதுங்குவர். இப்படிப்பட்ட இளம் உள்ளங்களுக்கு நிச்சயமாக Counselling தேவை. அவர்கள் எந்த சூழலை நினைத்து பயப்படுகிறார்கள் என்பதை கண்டுபிடித்து அதிலிருந்து விடுதலை அடைவதற்கு, ஊக்கம் கொடுப்பதற்கு Counselling நிச்சயமாக உதவிடும்.

திருமறையில் சீடர்கள் அடிக்கடி பயப்படுகின்றனர். அப்பொழுதெல்லாம் பயப்படாதிருங்கள் என்று கூறுகிறார் இயேசு. குறிப்பாக இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு பின் யூதர்களால் ஏற்பட்ட சூழல்களைக் கண்டு பயந்து அறைகளில் முடங்கிக் கிடந்தனர். ஆனால் அவர்களுக்கு தன்னை வெளிப்படுத்தி, அவர்கள் உள்ளத்தை எஃகு போல் மாற்றி சாட்சி பகருகிறவர்களாக மாற்றினார். ஒரு வேளை பயத்தினால் இன்றும் நடுங்கிக் கொண்டிருக்கிறவர்களுக்கு இயேசுவின் வார்த்தைகள் வலுக்கொடுக்கும் அறுமருந்தாக உள்ளது. அவைகளை வாசிக்கும் போது நம்பிக்கையின் ஊற்று வெளிப்பட்டு பயங்கள் மறைய ஆரம்பிக்கிறது!

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி