மாற்றம் தேவை யாரிடம்?

சார்லஸ் தன் மகன் பிரவின் காலை 8.00 மணி ஆகியும் படிக்காமல் படுத்து கிடப்பது எரிச்சலை ஊட்டியது. இரவு 9 மணிக்கே தூங்கிவிட்டான். இப்படி கரடி மாதிரி தூங்கி   விழித்தால் எப்படி MBBS  படிப்பான். அடித்துப் பார்த்தால் அவரை முறைத்துப் பார்க்கிறான். ஏசிப்பார்த்தால் ஏற இறங்க பார்க்கிறான். இவன் படித்து என்ன சாதிக்கப் போகிறானோ தெரியவில்லை என்று முணுமுணுத்துக் கொண்டே வெளியே கிடக்கிற நாயின் பக்கம் போனார்.

Friends சொன்ன மருந்தைக் கொடுத்துப் பார்ப்போம் என்று மருந்து பாட்டிலை எடுத்துக் கொண்டு, நாயைப் பிடித்து, வாயைப் பிளந்து, ஊற்றி விட்டார். நாய்க்கு சுவை பிடிக்கவில்லைப் போல், கத்திக் கொண்டே போனது.

மாலை வேளையில் பிரவின் டியூசன் போகாமல் நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தான். சார்லஸ்க்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. வாயில் வந்த படியெல்லாம் திட்டினார். நீ எல்லாம் படித்து என்னத்தை செய்யப் போகிறாய் என்று தெரியவில்லை. என் பணம் தான் wasteஆகப் போகும் போல் தெரிகிறது என்று புலம்பிக் கொண்டே போனார்.

வீட்டிற்குள் போனவர் முகத்தை கழுவி விட்டு வந்த போது பப்பி மிகவும் சுட்டியாக இருந்தது. உடனே ஞாபகம் வந்தது. மாலை வேளைக் கொடுக்கக் கூடிய மருந்தைக் கொடுத்து விட வேண்டும் என்று பப்பியை பிடிக்க ஓடினார்.

மருந்துப் பாட்டிலைக் கண்டதும் வெறுத்துப் போய் ஓட்டம் பிடித்தது. ஏய் பப்பி உனக்கு நல்லதுக்குத் தானே தருகிறேன். வா வா என்று பின்னால் ஓடினார். 

ஒரு வழியாக கையில் மாட்டியது. பிடித்து வைத்து மருந்து ஊற்ற ஆரம்பித்தார். அது எகிறி குதிக்க ஆரம்பித்தது. எதிர்பாராத விதமாக மருந்துப் பாட்டிலை தட்டி விட்டது. அத்தனை மருந்தும் கீழே கொட்டி விட்டது.

வந்ததே கோபம், ரெண்டு அடிக்கொடுத்து ஓடு என்று விரட்டினார். காலியான பாட்டிலை எடுத்து குப்பை தொட்டியில் போட்டு விட்டு வந்தவருக்கு ஒரு அதிர்ச்சிக் காத்துக் கிடந்தது.

பப்பியைப் பார்த்தால் கீழே சிந்திக் கிடந்த மருந்தை நாவினால் நக்கிக் கொண்டிருந்தது. அப்பொழுது தான் அவருக்குப் புரிந்தது நாயைப் பிடித்து வைத்து மருந்தை கொடுக்காமல் கீழே ஒரு பாத்திரத்தில் ஊற்றினாலே அது நாவினால் நக்கி குடித்து விடும் என்பதைப் புரிந்துக் கொண்டார்.

ஆண்டவர் பேசினார் சார்லஸிடம் "எபேசியர் 5:4 யை வாசித்துப் பார்" என்றார். ஓடிப் போய் சார்லஸ் வாசித்தார். "தந்தையரே, உங்கள் பிள்ளைகளுக்கு எரிச்சல் மூட்டாதிருங்கள். மாறாக அவர்களை ஆண்டவருக்கேற்ற முறையில் கண்டித்து திருத்தி, அறிவு புகட்டி வளர்த்து வாருங்கள்". என்று எழுதப்பட்டிருந்ததை வாசித்து விட்டு வெளியே வந்தார். பிரவின் உம் என்று பாட புத்தகத்தை தூக்கிக் கொண்டு வெளியே கிளம்பினான்.

பிரவின் நில்டா! டீ சாப்பிட்டியா, அம்மா வீட்டில் இல்லையே. என்னப்பா சாப்பிட்ட என்று அன்போடு தந்தை அணுகினார்.

பிரவினுக்கு அப்பாவின் மாற்றம் புரியாத புதிராக இருந்தது. இல்ல Dady நான் பிஸ்கட் வீட்டில் இருந்ததை சாப்பிட்டு விட்டேன் என்று அன்போடு பேசினான். மகன் இப்படி அமைதியாக பேசி எத்தனையோ நாட்கள் போய் விட்டதை எண்ணி ஆனந்த கண்ணீர் வடித்தார்.

பெற்றோர்களே உங்கள் அணுகுமுறையால் மாற்றங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள். எவ்வளவு பிள்ளைகள் படிக்க முடியுமோ அவ்வளவு படிக்க ஊக்கப்படுத்துங்கள். உங்கள் பிள்ளைகளை இயந்திரம் போல் 24 மணி நேரமும் படிக்க வைக்க முற்படாதிருங்கள். நல்ல நண்பராக பேசி சிரித்து மகிழுங்கள். வாழ்க்கை என்பது கொஞ்சம் நாட்கள் தான். அதுவும் பிள்ளைகளோடு செலவு செய்யும் நாட்கள் மிகவும் குறைவு என்பதை மறந்து விடாதிருங்கள்.

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி