கடவுள் காட்டட்டும்
அனேக குடும்பங்களில் பிள்ளைகளின் வாழ்க்கையைக் குறித்தும், எதிர்காலத்தைக் குறித்தும் குறிக்கேட்பது போல் கேட்டு அதன் படி நடக்கிறார்கள். ஒரு வீட்டைக் கட்டினால் அதற்கு நல்ல நேரம் பார்த்து திறப்பதும், வாஸ்து பார்க்க மாட்டோம் என்று வெளியே சொல்லிக் கொண்டாலும் பெரியவர்கள் சொல்லுகிறார்கள் என்று சம்பிரதாயங்கள் செய்வதும் இன்றும் குறைந்து விடவில்லை.
மூடப்பழக்கம் என்பது பல்வேறு விதங்களில் குடும்பங்களில் மறைமுகமாகவும், நேரடியாகவும் நடந்துக் கொண்டே இருக்கிறது. திருமண வரன் பார்ப்பதில் ஜோதிடம் பார்ப்பது போல் மக்கள் ஊழியர்களிடம் குறிக் கேட்க ஆரம்பிக்கின்றனர். ஊழியர்கள் தங்கள் மனதில் உள்ளபடி கூறி மக்களை முட்டாள்களாக மாற்றி விடுகின்றனர். சிலர் நயவஞ்சகமான செயல்களையும் ஜெபம், தீர்க்கதரிசனம் என்ற பெயரில் செய்து விடுகின்றனர்.
விஜய பேரரசில் ஒரு அரசர் இருந்தார். அவருக்கு ஜோதிடம் மேல் அதிக நம்பிக்கை. எந்த காரியத்தைச் செய்தாலும், ஜோதிடரிடமே கேட்டுச் செய்வார். இந்த weaknessயை வேங்கை நாட்டு அரசன் புரிந்திருந்தான்.
அன்று வேங்கை மீது போர் புரிவதற்காக சூழுரைத்தான் விஜய பேரரசன். உடனே இந்த போரைத் தடுப்பதற்கு வேங்கை அரசன் எதிரி நாட்டு அரசனின் ஜோதிடர் மூலம் திட்டத்தை எப்படி கவிழ்க்கலாம் என்று திட்டமிட்டான். ஒற்றன் மூலம் பணத்தைக் கொடுத்து மயக்கினான்.
அரசன் போருக்கு போகும் முன் ஜோதிடரிடம் கேட்க, "மன்னா காலம் இது நல்ல காலமல்ல. போருக்குப் போனால் தோல்வி தான் மிஞ்சும்" என்று மிரட்டினான்.
அரசர் சோர்ந்து போய் உட்கார்ந்தார். எதிர்பாராத விதமாக வந்த அமைச்சர் சோகமே உருவான அரசனின் நிலையைக் கேட்டான்.
மன்னரின் ஜோதிடம் மேல் இருக்கும் நம்பிக்கையை மாற்றிட எண்ணி, அரசரை மறுநாள் ஜோதிடரின் வீட்டிற்கு அழைத்துச் சென்று அரசரை வெளியே விட்டு விட்டு அமைச்சர் மட்டும் உள்ளே சென்றார்.
அமைச்சரின் வருகையைக் கண்ட ஜோதிடர் என்ன விசயமாக வந்தீர்கள் என்றார்.
"ஜோதிடம் மேல் உமக்கு அதிக நம்பிக்கையா?" என்று அமைச்சர் கேட்க “ஆம் ஒய்” என்றார்.
அப்படியென்றால் உமது ஆயுள் இன்னும் எத்தனை வருடங்கள் இருக்கும் என்று சரியாகச் சொல்லும் என்றார் அமைச்சர்.
ஒய் எனக்கு இன்னும் 25 வருடங்கள் கெட்டியாக இருக்கிறது என்றார் ஜோதிடர்.
தன் உறையில் வைத்திருந்த வாளை உருவி, கண் இமைக்கும் நேரத்தில் ஜோதிடரின் தலையைக் கொய்தார் அமைச்சர்.
அதிர்ந்து போன அரசர், என்னச் செய்து விட்டீர் அமைச்சரே என்றார்.
ஜோதிடம் பொய் ஆகிவிட்டதல்லவா மன்னா! அதற்காக இப்படிச் செய்யலாமா? என்றார் அரசர்.
மன்னா நேற்று இரவு நான் இந்த வழியாக வரும் போது வீட்டிற்குள் சத்தம் கேட்டது. உற்றுக் கேட்ட போது நடந்த உரையாடலால் சந்தேகப்பட்டேன் என்று கூறிக்கொண்டே உள்ளேப் போய் ஒற்றனை தூக்கிக் கொண்டு வந்தார் அமைச்சர். ஒற்றன் உண்மையைக் கக்க ஜோதிடத்தினை எப்படியெல்லாம் பயன்படுத்துகின்றனர் என்பதை அறிந்து உறைந்துப் போனார் மன்னர்.
திருமறையிலும் கள்ளத் தீர்க்கதரிசிகள் என்பவர்கள் மனதில் உள்ளதை உரைத்து அரசர்களையும், மக்களையும் அன்று ஏமாற்றி வந்தனர். அதைப் போன்று இன்றும் இறைவனின் பெயரால் தீர்க்கதரிசனம் கூறுகிறோம் என்று பொய்களை கூறி குடும்பங்களைப் பிரித்து விடுவதும், திருமண வரன்களை கடவுள் காட்டினால் தான் திருமணம் செய்ய வேண்டும் என்று பொய்யாய் உரைத்து அனேகர் தகுதியான துணையைத் தேடுவதை விட்டு விட்டு 40 வயதிலும் வாசலைப் பார்த்துக் கொண்டே வரும் வரும் என்று கூறிக் கொண்டே இருக்கின்றனர். கள்ளத் தீர்க்கத்தரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Comments
Post a Comment