புதைத்து விடுங்கள்


அடுத்தவர்கள் சொல்வதைக் கேட்டே அனேக குடும்பங்களில் பிரச்சனையும், பிரிவினையும் வந்து விடுகிறது. கணவனைப் பற்றி, மனைவியைப் பற்றி, மருமகளைப் பற்றி, மாமியாரைப் பற்றி யாராவது ஒரு காரியத்தை சொல்லிவிட்டால் அந்த காரியம் உண்மையா அல்லது பொய்யா என்று சிந்திக்காமல், கேட்டவுடன் BP ஏறி விடுகிறது. உடனே வெட்டு ஓன்று துண்டு இரண்டு என்று முடிவெடுத்து விடுவது அபாயகரமான ஓன்று. குடும்பத்திற்கு ஆகாத ஓன்று.

ஆத்திர காரனுக்கு புத்தி மட்டு என்பது ஒரு பழமொழி. ஒரு காரியத்தைக் கேள்விப்பட்ட உடன் ஆத்திரப்பட்டு ஆராயாமல் முடிவெடுக்கும் போது தவறான முடிவாக மாறிவிடும்.

கணவன், மனைவி வெவ்வேறு இடங்களில் பணிபுரியும் போது கணவனைப் பற்றி, மனைவியிடம் யாராவது ஒரு காரியத்தைக் கூறினால் தீர ஆராய வேண்டும், விசாரிக்க வேண்டும். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று மற்றவர்கள் கூறுகிறதை 100% நம்பக் கூடாது. சிலருக்கு பிறர் குடும்பங்களில் சண்டையிடுவதைப் பார்த்து இரசிக்கும் குணம் இருக்கிறது. நன்மைச் செய்வது போல் நடித்து, பேசி குடும்பங்களில் தீ மூட்டி விடுவார்கள். பின்பு எரிகிற தீயில் நெய்யை வார்ப்பார்கள். அதன் பின் அருகில் நின்று நீலிக் கண்ணீர் வடிப்பார்கள். உள்ளுக்குள் மகிழ்வர். இப்படிப்பட்ட செய்திகளை ஒருவர் கொண்டு வந்தால் என்னச் செய்ய என்பதை சாக்ரடீஸ் வாழ்க்கையின் வழியாக நாம் புரிந்துக் கொள்ளலாம்.

நண்பர் ஒருவர் சாக்ரடீஸ் வீட்டிற்கு வேகமாக வந்தார். காரணம் அவர் சுமந்து வந்த செய்தியைச் சொல்வதற்காக!

என்ன விஷயமாக வந்தீர்கள் என்று சாக்ரடீஸ் வினாவ, "உங்களுக்குத் தெரியுமா, ஊரே இந்த matterயை குறித்துத் தான் பேசிக் கொண்டிருக்கிறது" என்றார்.

நிதானமாக கேட்ட சாக்ரடீஸ், ஊரைப் பற்றி எரிகிற matterல் உண்மை ஏதாகிலும் உண்டா என்றார்.

அதைப் பற்றி என்ன கேட்கிறீங்கோ, எனக்கு அதை தீர விசாரிக்கிறதற்கு நேரமில்ல, அது உண்மையோ, பொய்யோ முதல்ல உங்களிடம் சொல்லிவிட்டுப் போய் விடலாம் என்று தான் வந்தேன் என்றார்.

சரி, நீங்க சொல்லப் போகிற matterரால எனக்கு அல்லது உங்களுக்காவது ஏதாவது நன்மை கிடைக்குமா? என்றார் சாக்ரடீஸ்.

அது வந்து... நன்மை எதுவும் கிடைக்கிற மாதிரி எனக்குத் தோனல என்றார்.

ஒய் அப்படியானால் அந்த விஷயத்தை என்னிடம் சொல்ல வேண்டாம். அதில் உண்மையும் இல்ல, நன்மையும் இல்ல. பேசாம அந்த matterயை குழி தோண்டி புதைத்து விட்டு வீட்டுக்கு போங்க என்றார்.

அதுக்கு அப்புறம் இப்படி ஊர் matterயை கப்சா விடுவதற்கு சாக்ரடீஸ் வீட்டு பக்கம் வருவாராக்கும்.!   வரவே மாட்டார்!! ஆனால் உங்களுக்கு இப்படி மருமகளைப் பற்றி, மாமியாரை பற்றி, கணவனை பற்றி, மனைவியை பற்றி கட்டு கதை பேசுகிறவர்கள் உங்களுக்கு பிடிக்கிறது என்றால் உங்கள் வீட்டில் நித்தம் குழப்பம் தான்.

"பட்டயக் குத்துக்கள் போல் பேசுகிறவர்களும் உண்டு" (நீதிமொழிகள் 12:18) என்று திருமறை நம்மை எச்சரிக்கிறது. சிலருக்கு யாருக்காகிலும் தீமைச் செய்யாவிட்டால் தூக்கம் வராது. அப்படிப்பட்ட மக்களிடம் சகவாசம் வைக்காதிருங்கள். பொய்யாய் வீட்டில் உள்ள மற்றவர்களைப் பற்றி பேசுகிறவர்களை வீட்டிற்குள்ளே அனுமதிக்காதிருங்கள். அப்படி ஓயாமல் வந்தால் அக்கா நான் ஜெபிக்கப் போகிறேன். நீங்களும் வந்து ஜெபியுங்கள் என்று அழைப்புக் கொடுங்கள். இவ்வகையான சாத்தான்கள் உடனே இடத்தை காலிச் செய்து விடும்.

பொய் பேசுகிறவர்கள் சொல்வதைக் கேட்க ஆரம்பித்தால் சந்தேகம் உள்ளத்திற்குள் வர ஆரம்பித்து விடும். அதன் பின் சந்தேகக்  கோடு சந்தோஷ கேடாக மாறி விடும். தவறான புரிதல்களை தோண்டி புதைத்து விடுங்கள், மகிழ்ச்சி பெருக ஆரம்பித்து விடும்.

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி