இவ்வளவு தானா?

சில இளம் வயதினோர் மாற்று சமயத்திலுள்ளவர்களை திருமணம் செய்ய விரும்புவர். உடனே பெற்றோர் மறுத்தால் யோசிப்பர். பேசாமல் அவளை/அவனை நமது சமயத்திற்கு மாற்றினால் என்ன? பிரச்சனை முடிந்து விடும் என்ற முடிவுக்குள் வந்து விடுவார்கள். இவ்வாறு திருமணத்திற்காக மாற்று சமயத்திற்குள் வருவதற்கு தற்பொழுது பல தடைகள் போடப்பட்டு வருகிறது.

அதே வேளையில் இப்படி மாற்று சமயத்தினர் கிறிஸ்தவர்களாக வரும் போது முழுமையான மன மாற்றம் என்பது இல்லாமல் கைப் பிடிக்கும் கனவிலேயே திருமுழுக்கை பெற்றுக் கொள்ளுகின்றனர். குடிக்கிறவன் திருமுழுக்கைப் பெற்ற பின்னும் குடிகாரனாகவே தொடர்கிறான். கொள்ளைக்காரன், ரவுடி, சண்டையிடுகிறவன், ஏமாற்றிப் பிழைப்பவன் தன் குணத்தை மாற்றிக் கொள்ளாமல் அப்படியே வாழவைத் தொடர்கின்றான்.

மாற்றம் என்பது பெயரில் மட்டுமே அன்றி வாழ்வில் இல்லை. நான் கேள்விப்பட்டேன் அவன் குடிகாரன்! இப்படி பெற்றோர் கூறினால், பிள்ளைகள் அவர் ஞானஸ்நானம் எடுத்த பின் குடிக்க மாட்டேன் என்று சத்தியம் பண்ணி விட்டார். ஆகவே எனக்குத் திருமணம் செய்து வையுங்கள் என்று அடம் பிடிப்பர்.  

இளைஞர்கள் திருமணத்திற்காக வேஷம் மாற்றிக் கொள்வதில் பலே கில்லாடிகள். அடுத்த நாளே சிலுவை அணிந்த chain கைப்பிடித்த அன்று இரவே நண்பர்கள் ஊற்றி விட்டு கூறுவர், "மாப்பள இனி உன் மனைவி உன்னை விட்டுப் போக மாட்டாள்".

ரோம் பட்டணத்திலே கிறிஸ்தவரல்லாதவர் ஒருவர் வசித்து வந்தார். தவகாலம் வந்த போது அப்பகுதியில் உள்ள கிறிஸ்தவர்கள் Nonvegயை எடுக்கவில்லை. ஆனால் கிறிஸ்தவர் அல்லாதவர் நன்றாக கோழிகுழம்பு வைத்து சாப்பிட்டார். மனம் அருகில் உள்ளவர்களை இழுத்தது.

ஒருவர் வந்து சகோதரா நாங்கள் இந்த காலத்தில் Nonveg சாப்பிடுவதில்லை. எனவே நீங்கள் இறைச்சி குழம்பு வைப்பதை தவிருங்கள். எங்களுக்கு temptation ஆக இருக்கிறது என்றனர்.

சரி என்றவர், அடுத்த வாரமும் வழியில்லாமல் ஒரு கோழியை சாய்த்து விட்டார். உடனே அருகில் உள்ளவர்கள் திருச்சபை பெரியவர்களிடம் கூறினார்கள்.

திருச்சபை பெரியவர்களும் யோசித்தார்கள். இப்படி temptation பண்ணினால் என்ன ஆகும் என்று பெரியவர்கள் கோழி சமைத்தவரிடம், இந்த தவக்காலத்தில் மட்டும் தவிர்த்து விடுங்கள் என்றனர்.

சரி என்றுக் கேட்டுக் கொண்டவர், கோழி குழம்பை அடுத்தவாரமும் வாசனையை தவிர்க்க கவனமாக கதவைப் பூட்டி தயார் செய்து விட்டார்.

வாசனை வெளியே வீசவே உடனே போப்பிடமே complaint போய் விட்டது. போப் யோசித்தார். அந்த ஆள் மட்டும் தான் கிறிஸ்தவராக இல்லை. ஏன் பேசிப்பாருங்கள், அவர் கிறிஸ்தவராக மாறினால் இப்படிச் செய்ய மாட்டார் அல்லவா! என்று கூறினார்.

அப்படியே அவர் முழுக்காட்டப்பட்டு அருளப்பராக மாறினார்.

வாரம் ஒன்றானது, வழக்கம் போல் கோழி குழம்பை வைக்காமல் இருக்க முடியவில்லை. மனம் அருகில் உள்ளவர்களின் மூக்கை துளைத்தது. அருளப்பரை போதகரிடம் அழைத்துச் சென்றனர்.

ஏனப்பா இந்த தவநாளில் இப்படிச் செய்தாய்! என்றார்.

போதகரே, நான் கோழிக்குழம்பை சாப்பிடவில்லை. கோழியை கொல்வதற்கு முன் அதற்கு ஞானஸ்நானம் கொடுத்து அதற்கு கத்தரிக்காய் என்று பெயரிட்டு விட்டேன் என்றான். 

யாரும் திருமணம் செய்துக் கொள்வதினால் மனமாற்றம் அடைந்துவிடமாட்டார்கள். இவன்/ள் திருமணம் செய்தால் சரியாகி விடுவான்/ள் என்று கூறி திருமணம் செய்து வைக்காதிருங்கள். ஒருவர் அழகை அடைவற்ற்காக சபை மாற்றம் என்ற வேஷத்தைப் போடலாம். ஆனால் மன மாற்றம் அடைவார்களா? என்பது பெரிய கேள்வியே. " உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்". (ரோமர் 12:2) என்று திருமறை கூறுகிறது. உள்ளான மாற்றம் அடையாதவர்களின் பழைய சுபாவம் எப்பொழுதுமே தண்ணீருக்குள் இருக்கும் காற்று மேலே வருவது போல் வந்து விடும். சாயம் போன சட்டைப் போல பல்லைக் காட்டும். எனவே வாழ்க்கைக்கு துணையைத் தேடும் போது கவனமாக தேடுங்கள்.

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி