வலிமையற்றவர்கள்
வீர சூர புலிகளாக ஆண்கள் இருந்தாலும் தாய் ஒரு வார்த்தை சொல்லி விட்டால் போதும் அதை மீறுவது என்பது மிகவும் கஷ்டமான காரியமாக மாறிவிடுகிறது. ஆகவே தான் சில வேளைகளில் திருமணமான பின்பும் தன் தாயிடம் இருந்து பிரிந்து மனைவியோடு வாழ்வதில் ஆண்கள் கஷ்டப்படுகின்றனர். மனைவி தன் தாயை குறைத்துப் பேசினால் வருத்தப்படுகின்றனர். சில ஆண்கள் தன் தாயிடம் அதிக அன்பு வைத்து அவர்கள் பேச்சைக் கேட்டு மனைவியை விரட்டி விடவும் செய்து விடுகின்றனர். சில மாமியார் தன் மருமகள் தன் பேச்சைக் கேட்கவில்லையென்றால் பழி வாங்குவதற்கு கருவியாக தன் மகனையே பயன்படுத்திக் கொள்ளுகின்றனர். இன்னும் சில இடங்களில் தன் மருமகள் தன் மகனை எடுத்துக் கொள்ளக் கூடாது, தனக்கு தன் மகன் தரும் முக்கியத்துவம் குறைந்து விடக் கூடாது என்பதற்காக பல விதமான கோள் மூட்டுதல்களை செய்து காரியத்தை சாதித்து விடுகின்றனர்.
மாவீரன் அலெக்ஸாண்டர் வாழ்விலும் அப்படி ஒரு சம்பவம் நடைப் பெற்றது. எப்பொழுதும் போர் போர் என்று அலைந்தவர் அலெக்ஸாண்டர். உலகை தன் ஆளுகைக்குள் கொண்டு வர வேண்டும் என்ற துடிப்பு கடைசிவரைக்கும் அவருக்கு அடங்கவே இல்லை.
அவருடைய தாயார் பெயர் ஒலிம்பியா. மகன் நாடு நாடாகச் சென்றதால் அரசாங்கத்தை நடத்துவதில் அதிகமாக பங்கை எடுத்துக் கொண்டாள். அவருடைய தலையீட்டைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அதிகாரிகள் தலையை சொறிந்துக் கொண்டு இருந்தனர்.
இந்த செய்தி அலெக்ஸாண்டர் காதுகளுக்குச் சென்று சேரவே தன் தாய்க்கு ஒரு கடிதத்தை எழுதி, “தயவு செய்து தாயே, அரசு நடவடிக்கைக்குள் மூக்கை நுழைக்க வேண்டாம்” என்று எழுதினார்.
அந்த அம்மா ஒலிம்பியா அதைப் பார்த்து விட்டு, அதைக் கணக்கிலே எடுத்துக் கொள்ளவில்லை.
பார்த்து பார்த்து தலைவலி தாங்க முடியாமல் ஆளுநரே ஒரு கடிதத்தை அலெக்ஸாண்டருக்கு எழுதினார்.
கடிதத்தைப் பார்த்த அலெக்ஸாண்டர் கீழ்கண்டவாறு நாசுக்காக ஆளுநருக்கு எழுதினார்.
"ஆளுநர் அவர்களே எனக்கு நீங்கள் தொடர்ந்து கடிதத்தை எழுதுவதில் எந்த பலனும் இல்லை. காரணம் என் தாயின் ஒரு கண்ணீர் துளி என்னை பெலனற்றவனாக்கிவிடும்" என்றார்.
ஆளுநர் இந்த கடிதத்திற்கு பின்பு கடிதம் எழுதுவதில் எந்த பயனுமில்லை என்பதைப் புரிந்துக் கொண்டு தன் பணியில் கவனம் செலுத்தினார்.
சில பெலம் வாய்ந்தவர்கள் கூட அம்மாமாரின் மந்திரத்தில் கிரங்கி விழுந்து விடுகின்றனர். அம்மாகள் எல்லாம் ஆண் பிள்ளைகளை வளர்க்கும் போதெ சொல்லி சொல்லியே வளர்க்கின்றனர். பார்த்தாயா உனக்காக எவ்வளவு கஷ்டப்பட்டு உள்ளேன். என்னை கடைசி வரையும் கண் கலங்காமல் பார்த்துக் கொள். 10 மாதம் உண்ணாமல் உறங்காமல் கஷ்டப்பட்டேன் என்று கூறியே ஆண் பிள்ளைகளை முடமாக்கிவிடுகின்றனர்.
பெரிய யானை கூட சிறிய சங்கிலிக்குள் அடங்கி விடுவது போல் தாய்மாரும் '10மாதம்' என்ற வார்த்தையிலேயே அடக்கி விடுகின்றனர். ஆனால் பெண் பிள்ளைகளை இந்த மந்திரம் சொல்லி அடக்கி விட முடியாது. இந்த Psychology அவர்களிடத்தில் workout ஆகாது. காரணம் அவரகளும் 10 மாதம் சுமந்து அவர்கள் பிள்ளைகளைப் பெறுவதால் இந்த காரியமெல்லாம் செல்லுபடி ஆவதில்லை.
'புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடு இசைந்திருப்பான்" (ஆதியாகமம் 2:34) என்ற வார்த்தையைக் கடைபிடிப்பதில் ஆண்களுக்கு இன்னும் சிக்கலாகவே இருக்கிறது. ஆண்டவர் தாமே ஆண்களுக்கு விசேஷித்த பெலனைக் கொடுப்பாராக.
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Comments
Post a Comment