ஊக்கமா? உதாசினமா?
சில இளம் வயது தம்பதியினர் சண்டையிட்டு தற்காலிகமாக பிரிவது உண்டு. அப்பொழுதெல்லாம் நல்ல பெற்றோர்கள், உறவினர்கள் அவர்களைப் பார்த்து சரி இந்த ஒரு முறை பொறுத்துக் கொண்டு போய் சேர்ந்து வாழ்க்கையை நடத்து, அடுத்த முறை பிரச்சனை வந்தால் பார்த்துக் கொள்ளுவோம் என்று சமாதானப்படுத்தி அனுப்பி வைப்பர்.
இப்படி எத்தனை முறை பிரச்சனை வந்தாலும் அத்தனை முறையும் நல்ல பெற்றோர்கள் சமாதானப்படுத்தி இந்த ஒரு முறையும் சேர்ந்து வாழ முயற்சி பண்ணு என்றே அனுப்பி வைப்பார்கள். இது சரிதானா?
புத்தரும் அவருடைய சீடர்களும் நடை பயணமாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு போய் கொண்டிருந்தார்கள். போகிற போக்கில் வழியை மறந்து வேறு வழியாக பயணப்பட்டார்கள். தொலை தூரம் வந்த பின் தான் வழி தவறியதை உணர்ந்தனர். உடனே அருகில் உள்ளவர்களிடம் வழி கேட்டனர். அந்த கிராம மக்கள் "2km தூரம் தான் இப்பொழுது வந்து விடும்" என்றார்கள். அதைக் கேட்ட உடன் வேகமாக நடக்க ஆரம்பித்தனர்.
2km தாண்டிய பின்னும் ஊர் வரவில்லை. அலுத்துப் போன சீடர்கள் அடுத்த ஒரு கிராம மக்களிடம் வழி கேட்டனர். அவர்களும் 2km தூரம் தான், இதோ இப்பொழுது சீக்கிரம் வந்து விடும் என்றனர்.
உற்சாகத்துடன் நடையை மேற்கொண்டனர் சீடர்கள். 2km, 3km என்று போய் கொண்டிருக்க ஊர் வந்தது போல் தெரியவில்லை. புத்தரின் ஒரு சீடருக்கு கிராம மக்கள் மீது செம கடுப்பாயிற்று.
இந்த கிராம மக்களுக்கு கிலோ மீட்டர் என்றால் என்னவென்றுத் தெரியுமோ என்னவோ என்று புத்தரிடம் புலம்பித்தள்ளினான்.
சிரித்துக் கொண்டே சீஷனை நோக்கினார் புத்தர், "எப்பா நீ தான் அவர்கள் கூறியதை சரியாக புரிந்துக் கொள்ளவில்லை. நாம் 50km என்றால் அப்பொழுதே சோர்ந்துப் போய் உட்கார்ந்திருப்போம். நாம் சோர்ந்துப் போகாமல் இருக்கத்தான், 2km தான், இதோ இப்போது வந்து விடும் என்று கூறி நம்மை உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்" என்றார்.
குடும்ப வாழ்வில் சண்டைப் போடுவது என்பது சகஜமான காரியம். காலையில் சண்டை வரும், மாலையில் அதை மறந்து போய் விடுவோம். வைராக்கியம் பாராட்டுவதற்கு இங்கே இடமில்லை. உன்னை மன்னிக்க மாட்டேன், நீ செய்ததை மறக்க மாட்டேன், சாகும் வரையில் நாம் சேர முடியாது என்று சொல்லி கவிழ்த்து விட்டுப் போக முடியாது.
"தேவன் இணைத்ததை மனுஷன் எவனும் பிர்க்காதிருப்பானாக" என்ற ஆண்டவர் சேர்ந்து வாழ்வதே அவருக்கு உகந்ததாக காண்கிறார். பெற்றோர்கள் இதை உணர்ந்து பிரச்சனைகளைச் சரிச் செய்ய முற்பட வேண்டும்.
பறக்கும் விமானத்தில் சில வேளை repair ஆகிவிட வாய்ப்பு உண்டு. உடனே யாரும் விமானத்திலிருந்து குதித்து விடுவது இல்லை. அதை சரிச் செய்து பத்திரமாக மக்களை காப்பதற்கே விமானி விரும்புவார். வாழ்க்கைப் பயணம் என்ற விமானத்தில் ஏறிய நீங்கள் பிரச்சனை வந்த உடன் குதிப்பதே உங்கள் எண்ணமாக இருக்க வேண்டாம். பெற்றோரும் உடனே குதித்து விடு அம்மா இருக்கிறேன், அப்பா இருக்கிறேன் என்று சொல்லக்கூடாது. நீங்கள் எத்தனை முறை சண்டையிட்டு ஓய்ந்துப் போயிருக்கிறீர்கள். ஆனாலும் கூடி வாழ்கிறீர்கள் அல்லவா? அப்படி இருக்கும் போது பிள்ளைகளும் சண்டையிட்டாலும் சரி செய்ய இடங் கொடுக்க வேண்டும்.
இன்று போடுகிற சண்டையை, அடுத்த வருடம் நினைத்துப் பார்த்தால் அது அர்த்தமற்றதாகவும், ஒன்றுமில்லாததாகவும் இருக்கும். இதற்கு போய் வீணாய் இப்படி சண்டையிட்டுள்ளோமே என்று யோசிக்கத் தோன்றும். எனவே பெற்றோர் பிள்ளைகளுக்கு நல்ல ஆலோசனைகளையே கூறி சேர்த்து வைக்க முற்பட வேண்டும்.
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Comments
Post a Comment