மதிப்பை உயர்த்திக்கொள்ளுங்கள்

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை L.சரிதா தேவி (Laishram Saritha Devi), மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்தவர். 2014 ஆம் ஆண்டு தென் கொரியாவில் நடை பெற்ற குத்துச் சண்டை போட்டியில் Lightweight பிரிவில் பங்குக் கொண்டார். அவர் விடும் குத்தில் எதிரில் உள்ளவர்கள் சரிந்து விழ, அரை இறுதிக்குள் நுழைந்தார். தீப்பொறியாய் குத்துவிட்டு வெற்றி பெற்று விடுவேன் என்று நிமிர்ந்து நிற்கும் போது, நடுவருடைய முடிவு அவருக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

நடுவரின் முடிவை தவறு என்று விமர்சித்தார். அவரோடு இணைந்து அவருடைய கணவரும் நடுவர்களை தடித்த வார்த்தைகளால் திட்டினார். தொடர்ந்து நடந்த பதக்கத்தை பெறும் நிகழ்விலும் பதக்கத்தை வாங்க மறுத்து விட்டார். இவைகள் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த ஆசிய ஒலிம்பிக் குழு (Olympic Council of Asia) சரிதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழலுக்குள் சென்றது. அதன் பின்பு தனது கோபம், எரிச்சல், நடந்துக் கொண்ட விதம் தன் விளையாட்டு வாழ்க்கையையே முடமாக்கி விடும் என்று அறிந்து தனது தவறான  நடத்தைக்காக நிபந்தனையற்ற மன்னிப்பைக் கேட்டார்.  இறுதியாக அவருடைய மன்னிப்பு கடிதத்தை ஏற்று ஒழுங்காக பொறுப்புடன் நடந்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டார். வெண்கலம் பதக்கம் மீண்டும் அவருக்கு அளிக்கப்பட்டது.

வாழ்க்கையில் பொது இடங்களில் நம்முடைய உணர்ச்சிகளையும், மதிப்பீடுகளையும் கண்ணியத்துடன் காத்துக் கொள்ளும் போது வாழ்க்கையின் உச்ச நிலை பதவிகளுக்கு தகுதியுடையவர்களாக மாறி விடுகிறோம்.

“பிள்ளைகள் வீட்டில் வளரும் போது கூட சரியான அன்பும், அரவணைப்பும், வழி காட்டலும் மிகவும் முக்கிய இடத்தை அடைகிறது”. அன்பிலே வளரும் பிள்ளைகள் அன்பு செய்கிறவர்களாக வளர்ந்து விடுவார்கள். குறைக்கூறி வளர்க்கப்படும் பிள்ளைகளும் அப்படியே குறை கூறுகிறவர்களாகவே வளர்ந்து விடுவார்கள். எனவே குடும்பம் என்பது பிள்ளைகளின் வாழ்க்கையை உருவாக்கும் தொழில் கூடம் போன்றது. இங்கே அன்பு செய்ய பயிற்சி கிடைக்கிறது. நற்குணங்களை மேம்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கிறது.

ஒவ்வொருவரும் எடுக்கும் முடிவைப் பொறுத்தே ஒவ்வொருவரின் வாழ்வும் அமைகிறது. ஒவ்வொருவருக்கும் சுதந்திரம் இருக்கிறது. ஆனால் குடும்பங்களில், சமூகத்தில், கல்விகூடங்களில் பெற்றுக் கொள்ளுகிற நல்ல விஷயங்கள் நம்மை நல்ல முடிவுகளை எடுப்பதற்கு உந்துதல்களைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது.

பெற்றோர்கள், பிள்ளைகள் இளம் வயதுள்ளவர்களாக இருக்கும் போதே அன்பு, நேர்மை, பொறுமை, சகிப்புத்தன்மை, நீதி போன்ற நல்ல மதிப்பீடுகளை கொடுத்து வளர்க்க வேண்டும். அவைகள் தான் பின் நாட்கள் பிள்ளைகளுக்கு நிம்மதியான வாழ்வையும், மகிழ்ச்சியையும் அள்ளிக் கொடுக்கும்.

“பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.” (நீதிமொழிகள் 22:6) என்று திருமறை குறிப்பிடுகிறது. "பிள்ளையின் நெஞ்சில் மதியீனம் ஒட்டியிருக்கும்; அதைத் தண்டனையின் பிரம்பு அவனைவிட்டு அகற்றும்." (நீதிமொழிகள் 22:15) என்று அடுத்த நிலையையும் எடுத்துரைக்கிறது. பிள்ளைகள் வாழ்க்கையில் தீய மதிப்பீடுகள் உள்ளங்களை ஆட்கொள்ளும் போது அவைகள் சரி செய்யப்பட வேண்டும். இல்லையெனில் வளர்ந்த பின்னரும் பொது இடங்களில் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் தவறான செயல்களில் அல்லது முடிவுகளில் இறங்கும் சூழல்கள் வந்து விடும்.

குடும்பமாக மாறின பின்பும் நல்ல மதிப்பீடுகளோடு  வளர்க்கப்படும் பிள்ளைகள் சகிப்பு தன்மை உடையதாகவும், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை உடையவர்களாகவும், ஏற்றத் தாழ்வுகளில் இணை பிரியாது நிற்கும் மனம் உடையவர்களாகவும் மாறுகின்றனர். மொத்தத்தில் foundationயை சரியாக போடுங்கள் building அசையாமல் இருக்கும்.

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி