கோபக்கணல்

 

குடும்பங்களில் கோபம் என்பது தீ போல் பரவி உறவை எரித்து சாம்பலாக்கி விடும் தன்மை உடையது. கணவன், மனைவி, பிள்ளைகள், பெற்றோர் என்ற நட்பு வட்டத்தை நாசமாக்கும் தன்மை உடையது.

மனிதர்களுக்குள் காணப்படும் மிருக தன்மை கோபத்தின் போது வெளிப்பட்டு கொடூரமாக கொலைச் செய்யும் அளவிற்கு கொண்டுச் செல்லும் தன்மை உடையது.

கொஞ்சம் கோபப்படாமல் இருந்திருந்தால் நான் என் கணவனோடு / மனைவியோடு இணைந்து வாழ்ந்திருப்பேன். இன்று குடும்பமாக மகிழ்ச்சியோடு வாழ்ந்துக் கொண்டிருப்போம். கொஞ்சம் கோபப்படாமல் இருந்திருந்தால் நான் என் மனைவியை/கணவனை அவசரப்பட்டு கொன்றிருக்க மாட்டேன். இவ்வளவு பெரிய தவறை நானா செய்தேன் என்பதை என்னால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை.

என் அளவுக்கு மிஞ்சிய கோபத்தால் என் பெற்றோரை மிகவும் காயப்படும் அளவிற்குப் பேசிவிட்டேன். அன்றிலிருந்தே அவர்கள் நான் பேசிய தடித்த வார்த்தைகளை நினைத்து நினைத்து சாப்பிடாமல் இறந்துப் போவதற்கு காரணாமாகி விட்டேன் என்று புலம்புகிறவர்கள் உண்டு.  

கோபம் என்பது ஒரு தனிப்பட்ட நபரை மட்டுமல்ல பலரை பாதிக்கும் தன்மை அதற்கு உண்டு. கோபத்தின் உச்சியில் நின்று கொண்டு எடுக்கும் முடிவுகள் அநேகமாக தவறாகவே இருக்கும்.   பலர் அநியாயமாக பாதிக்கப்படுவார்கள்.

நமது விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் அவர்கள் வாழ்வில் கூட அப்படி ஒரு சம்பவம் நடந்து, பாதிப்புக்குள்ளானார். சிறைச்சாலைக்குள் இருந்த வ.உ.சி. அவர்கள் இறைவனிடம் ஒரு நாள் பிரார்த்தனைச் செய்துக் கொண்டிருந்தார். அப்பொழுது சிறைச்சாலை அதிகாரி அவரைக் கூப்பிட்டார். ஆனால் அவர் மனம் இறைவழிபாட்டில் முழு சிந்தனையும் மூழ்கியிருந்தபடியினால் காதில் அழைப்பின் சத்தம் விழவில்லை.   திரும்பவும் கூப்பிட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு BP ஏற, கோபத்தில் மீண்டும் வ.உ.சி யை அழைத்தார்.

நிதானமாக வ.உ.சி. சிறை அதிகாரியிடம் என்னவென்று கேட்டுக்கொண்டு வெளியே வந்தார். 

தான் அழைத்த உடன் ஏன் வரவில்லை என்று கத்தினான். அதற்கு “உங்களை விட பெரியவரை வழிபட்டுக் கொண்டிருந்தேன். அதனால் நீங்கள் அழைத்தது என் காதில் விழவில்லை" என்று coolஆக சொன்னார்.

கோபத்தில் உச்சியிலிருந்த சிறை அதிகாரி இன்னும் கோபத்திற்குச் செல்லவே வ.உ.சியை செக்கிழுக்க செய்து விட்டான்.  ஓரு நல்ல மனிதன் அநியாயமாக பாடுபட்டார்.

இதைப் போன்று தான் கோபத்தின் விளைவால் கணவன்/மனைவி/பிள்ளைகள்/பெற்றோர் என்று யார் வேண்டுமானாலும் பாதிக்கப்படலாம். ஒரு நாள் கோபத்தை குறைத்துக் கொண்டாலே எத்தனையோ court, caseகள் தவிர்க்கப்படும்.

கோபம் என்பது பிறரை எப்படி தாக்கலாம், எப்படி துன்புறுத்தலாம், எப்படியெல்லாம் வேதனைப்படுத்தலாம், எப்படியெல்லாம் குற்றுயிராக்கலாம் என்று தான் திட்டமிடுகிறது.   நமது பாசம், செய்த உதவிகள், நன்மையான காரியங்கள் எல்லாம் கண்களுக்கு மறைந்து விடும்.

வெகுளி, சினம் ஆகிய இரண்டும் வெறுப்புக்குரியவை. பாவிகள் இவற்றைப் பற்றிக் கொள்கின்றார்கள்…  மனிதர் மனிதர் மீது சினம் கொள்கின்றனர். அவ்வாறிருக்க, ஆண்டவர் தங்களுக்கு நலம் அளிப்பார் என எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? ( சீராக் 27:30; 28:3) என்று இணை திருமறையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மனிதர் பிறர் மீது கோபம் கொள்வோமானால் கடவுளின் இரக்கத்தை, நன்மையை பெற இயலாது என்று திட்டவட்டமாக கூறுகிறது.   கணவன், மனைவி ஒருவரை ஒருவர் பழி வாங்கிக் கொண்டு கடவுள் சமூகத்தில் எப்படி உறவாட முடியும். கண்ட கணவன்/மனைவியிடம் அன்பு காட்டாமல், கோபத்தை குறைக்காமல் காணாத இறைவனிடம் எப்படி அன்பு கூற முடியும். 

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி