சின்னதா? பெரியதா?


கவினும், செல்வினும் தனியாக என்னிடம் பேச வந்தனர். கவின் புதிதாக திருமணம் செய்தவர். தனக்கும் தன் மனைவிக்கும் இடையே பிரச்சனை அதிகமாக இருக்கிறது. வீட்டுப் பொறுப்புகளை யார் எடுத்துச் செய்வது என்பது தான் வீட்டில் ஒரே குழப்பமாக இருக்கிறது என்றான்.

அவனைப் பார்த்து எபேசியர் 5ம் அதிகாரத்தில் “புருஷன் மனைவிக்கு தலையாயிருக்கிறான்” என்று குறிப்பிட்டிருக்கிறது. எனவே தலை வேலையை நீங்கள் செய்ய வேண்டும். கை வேலையை கைச் செய்ய வேண்டும் கால் வேலையை கால் செய்ய வேண்டும். இதற்கு பதிலாக தலை கால் வேலையையும், கை தலை வேலையையும் செய்யக் கூடாது என்றேன்.

சற்று புரியும் படியாக சகோதரா நீங்கள் உங்கள் பொறுப்புகளை சரியாக பிரித்துக் கொள்ளுங்கள். அப்பொழுது பிரச்சனை எழாது. பெரிய பிரச்சனைகளை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள், சிறிய பிரச்சனைகளை உங்கள் மனைவியை பார்த்துக் கொள்ளச் சொல்லுங்கள் என்றேன்.

சின்னப் பிரச்சனை என்றால் என்ன என்றான் கவின்.

வேறு ஒன்றுமில்லை வீட்டிற்கு எவ்வளவு மாதந்தோறும் செலவு செய்ய வேண்டும், பிள்ளைகள் என்னப் படிக்க வேண்டும், பண்டிகைக்கு எவ்வளவு பணத்திற்கு dress எடுக்க வேண்டும், சொந்த பந்தங்கள் வீட்டிற்கு எவ்வளவு மொய் செய்ய வேண்டும் என்பதையெல்லாம் முடிவெடுப்பதற்கு உங்கள் மனைவியிடம் விட்டுவிடுங்கள்.   இவையெல்லாம் உள் நாட்டு விவகாரம் என்றேன்.

ஐயா வெளி நாட்டு விவகாரம், பெரிய பிரச்சனை என்ன என்றான்? 

அது ஒன்றும் இல்லப்பா, அடிக்கடி முல்லை பெரியார் பிரச்சனை நமக்கு வருகிறது, சில வேளை காவேரி தண்ணீர் பிரச்சனை வருகிறது, திடீர், திடீரென்று பாகிஸ்தான் நம்மை ஆக்கிரமிக்கப் பார்க்கிறது, சீனாவும் சும்மா சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது ஏதாவது ஒரு வழியில் நமக்கு தலைவலியாக இருக்கிறது. இதையெல்லாம் ஆண்கள் தான் முடிவெடுக்க வேண்டும். அவைகளைக் குறித்து உங்கள் மனைவி, நண்பர்கள் போன்றோருடன் பேசி நல்ல முடிவெடுக்க வேண்டும் என்றேன்.

தலையை ஆட்டி ஆட்டிக் கேட்ட கவினுக்கு சிரிப்பாக இருந்தது.

செல்வின் அருகில் இருந்து மாப்பிள்ள நீ பெரிய ஆளு,  வெளிநாட்டு விவகாரத்துறைக்கு நீ தான் அமைச்சர். கொடுத்து வச்ச ஆளு தாம்பா. நான் தான் பரிதாபம் என்றான்.

என்ன என்றான் கவின். 

வேறு ஒன்றுமில்லை உங்க தங்கச்சிக்கிட்ட சொல்லி வெளிநாட்டு, உள்நாட்டு விவகாரத்துறையில் எதையாவது ஒன்றை எனக்கு கொஞ்சம் கொடுக்கச் சொல்லக் கூடாதா? என்றான்.

வாழ்க்கையில் ஒரே காரியத்திற்கு முடிவெடுப்பதில் கணவன், மனைவி இருவரும் முட்டிக் கொள்ளுகின்றனர். ஆனால் "நாம் ஒருவருக்கொருவர் அவயங்களாயிருக்கிறபடியால், பொய்யைக் களைந்து, அவனவன் பிறறுடனே மெய்யைப் பேசக்கடவன்" (எபேசியர் 4:25) என்று திருமறை கட்டளையிடுகிறது. குடும்ப வாழ்வில் மனைவி, கணவன், பிள்ளைகள் எல்லாரும் கூட்டாக இணைந்துள்ள ஒரு பெரிய உடலுக்கு ஒப்பாக இருக்கிறோம். உடல் உறுப்புகள் ஒரு போதும் தீர்மானம் எடுப்பதில் சண்டையிட்டுக் கொள்வதில்லை. கூட்டாகவே சேர்ந்து முடிவெடுக்கும். அதைப் போன்று குடும்ப வாழ்வில் விட்டுக் கொடுத்து, அனுசரித்து முடிவுகளை எடுக்க முற்படுவோம். அப்பொழுது குடும்ப வாழ்வு சுமுகமாகச் செல்லும்.

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி