அன்பை வெளிப்படுத்துங்கள்

 

வாழ்க்கையில் அன்பை வெளிப்படுத்துவதே ஒரு கலை தான். சரியாக அன்பை வெளிப்படுத்துகிறவர்கள் வாழ்வில் வெற்றி பெறுகின்றனர். சரியாக அன்பை வெளிப்படுத்த தெரியாதவர்கள் சண்டையிட்டு மண்டையை உடைத்துக் கொள்ளுகிறார்கள்.

பொதுவாக எல்லாருக்கும் தன் மனைவி, கணவன், பிள்ளைகள், பெற்றோர் மீது அன்பு இருக்கத்தான் செய்யும். ஆனால் வெளிப்படுத்த தெரியாமல் தான் சிக்கித் தடுமாறுகிறார்கள்.

நான் எவ்வளவோ என் மனைவி/கணவன் மீது அன்பு வைத்துள்ளேன். ஆனால் அவன்/அவள் புரிந்துக் கொள்ளவே இல்லையே என்று வருந்துகின்றனர். சிலர் தங்கள் மனைவியைப் பற்றி பக்கம் பக்கமாக கவிதை எழுதிக் கொட்டுகின்றனர். ஆனால் மனைவியோ கணவனைப் பார்த்து நீங்கள் எல்லாம் ஒரு மனுஷனே இல்லை! மனைவி, பிள்ளை என்றால் என்ன? எப்படி அன்பாக இருக்க வேண்டும் என்று கொஞ்சம் கூட தெரியவில்லை!   உங்களுக்கெல்லாம் ஒரு குடும்பம், மனைவி பிள்ளை எதற்கு!! என்று கோபத்தில் அவர்கள் வீட்டுக்குப் போய் விடுவார்கள்.

அன்பை வெளிப்படுத்துவது மட்டுமல்ல, பிறர் தன் மீது வெளிப்படுத்தும் அன்பைப் புரிந்துக் கொள்வதும் மற்றொரு கலை தான்.

நமது நாட்டின் முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்கள் சுதந்திரம் அடைவதற்கு முன் 1936ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு வருகைத் தந்தார்கள். உடுமலைப் பேட்டையிலிருந்து மதுரைக்கு வந்துக் கொண்டிருந்தார்கள்.   வழியெல்லாம் மக்கள் திரள் அவரைக் காண்பதற்கு, எனவே அவர் மக்களை பார்த்தவாறு, தன் கையை காருக்கு வெளியே நீட்டியவாறு அமர்ந்துக் கொண்டார்.

இரவு மதுரைக்கு வந்த போது நேருவின் கைகளைப் பார்த்த கோயம்புத்தூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் அதிர்ந்துப் போனார். நேருவின் கைகளைத் தொட்டுப் பார்க்கிறேன் என்று மக்கள் அவர் கைகளைத் தொட்டு, தொட்டுப் பார்த்ததில் அவர்களுடைய நகங்கள் பட்டு பட்டு காயங்களாகக் காணப்பட்டது.

மனம் வருந்தியவராக நேருஜியைப் பார்த்து, "மன்னித்துக் கொள்ளுங்கள், எங்கள் ஜனங்கள் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்று தெரியாமல் செய்து விட்டார்கள்," என்று கேட்டுக் கொண்டார்.

ஆனால் நேருஜியோ மகிழ்ச்சியோடு, "இது என் தமிழ் மக்கள் என் மீது காட்டிய அன்பின் அடையாளங்கள். இந்த அன்பு என் உள்ளத்தில் ஆழமாக பதிந்துள்ளது. இந்த காயம் எல்லாம் நிமிஷத்திலே ஆறக்கூடியது என்றார்.

சில வேளைகளில் அன்பை வெளிக்காட்ட தெரியாமல் வெளிக் காட்டலாம். ஆனால் அதைப் புரிந்துக் கொள்ளும் விதத்தில் புரிந்துக் கொள்ளவேண்டும். அன்பை சரியாக எடுத்துக் கொள்ளப் பழகிவிட்டால் பிரச்சனைகள் என்பது ஒன்றுமில்லாமல் போய் விடும்.

சிலருக்கு ஏன் என் மனைவி என்னை விட்டுப் பிரிந்துப் போனாள்? என்பதே தெரிவதில்லை. வீட்டுக்குப் போய் விட்டு வருகிறேன் என்று சொல்லித்தான் போனாள். ஆனால் இப்பொழுது Phone பண்ணினால் எடுக்க மாட்டேன் என்கிறாள். அவள் பெற்றோர் பேசுவதில்லை. வீட்டிற்கு போனால் ஏற்றுக் கொள்வதில்லை. நான் என்னத் தவறுச் செய்தேன் என்று தெரியவில்லையே என்று புலம்புவதைப் பார்க்க முடிகிறது. காரணம் அன்பை வெளிப்படுத்த, புரிந்துக் கொள்ள தெரியவில்லை.

புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்த சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்பு கூற வேண்டும். தன் மனைவியில் அன்பு கூறுகிறவன் தன்னில் தான் அன்பு கூறுகிறான். (எபேசியர் : 5:28) கிறிஸ்து அன்பு கூர்ந்தது போல் அன்பு கூற வேண்டும் என்றும் பவுலடியார் குறிப்பிடுகிறார். கிறிஸ்து சிலுவையில் தன்னை ஒப்புக் கொடுத்து அன்பை வெளியரங்கமாக்கினார். நம்முடைய அன்பும் மாயமற்றதாக, உண்மையாக, வெளிப்படையாக இருக்க வேண்டும். சில வேளைகளில் தன்னை தியாகம் செய்தும் அன்பை வெளிப்படுத்த முற்படவேண்டும். 

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி