சரி செய்ய வேண்டுமா?
குடும்பம் என்ற அமைப்பை உருவாக்கியவர் இறைவன். ஆதாம் தனிமையாய் இருப்பது நல்லதல்லவென்று ஏவாளைப் படைத்து அவளை ஆதாமுக்கு துணையாகக் கொடுத்தார். இதைப் போலத் தான் ஒவ்வொருவருக்கும் இறைவன் ஒரு துணையைப் படைத்துள்ளார். ஆனால் குடும்ப அமைப்புக்குள் பிரச்சனை வரும் போது படைத்தவரை நோக்கிக் கூப்பிட்டு சரி செய்ய அழைப்பதை பலர் மறந்து விடுகின்றனர்.
அன்று காரில் வேகமாக இளைஞன் ஒருவர் பறந்து சென்றுக் கொண்டிருந்தான். அவசரமாக பயணித்துக் கொண்டிருந்த போது தீடீரென்று வண்டி ஓட மறுத்து விட்டது. சாலையில் ஓரத்தில் நிறுத்தி விட்டு என்னப் பிரச்சனை என்று பார்த்தான். முயற்சிகள் மேற்கொண்டும் ஓன்றும் அகப்படவில்லை.
அந்த நேரத்தில் பல கார்கள் அவனைத் தாண்டிச் சென்றுக் கொண்டிருந்தது. யாரும் கண்டுக்கொள்ளவில்லை. ஆனால் ஒரு காரில் சென்ற வயதானவர் பழுதுப்பட்டு நின்றுக் கொண்டிருக்கிற காரைப் பார்த்த உடன் நிறுத்தினார்.
உங்கள் காரில் எதுவும் பிரச்சனையா? என்று கேட்டுக் கொண்டு அருகில் வந்தார்.
எனக்கு நன்றாகவே வண்டியில் உள்ள பிரச்சனைகளைச் சரி செய்ய முடியும். ஆனால் இந்த பெரியவர் வந்து என்னச் செய்யப் போகிறார் என்ற அலட்சியத்தில் அவரை நோக்கிப் பார்த்தான்.
நான் உங்களுக்கு உதவிச் செய்ய வேண்டுமா? என்று மீண்டும் கேட்டார்.
நம்மால் சரிச் செய்ய முடியாததை இந்த பெரியவர் என்னச் செய்துவிடப் போகிறார் என்று எண்ணி கொண்டு, yes என்று ஒப்புக்கு கூறினான்.
பெரியவர் தன்னுடைய மேலாடையை கழற்றி விட்டு மெதுவாக வண்டிக்கு கீழே மெதுவாகச் சென்று இரண்டு நிமிடம் ஏதோ செய்துவிட்டு வெளியே வந்தார்.
Start பண்ணிப்பாருங்கள் என்றார்.
நான் இவ்வளவு நேரம் செய்யாததையா, இந்த பெருசு செய்துவிடப் போகிறது என்று அலட்சியமாக start பண்ணிப் பார்த்தான். அடுத்த நொடியே start ஆனது. அதிர்ந்துப் போனான்.
ஐயா, நீங்கள் யார்? சாதாரணமாக உங்களை எடைப் போட்டு விட்டேனே? 2 மணி நேரமாக செய்ய முடியாததை 2 நிமிடத்தில் முடித்து விட்டீர்களே என்று ஆச்சரியத்தோடு கேட்டான்.
என் பெயர் ஹென்றி போர்டு இந்த வண்டியை உருவாக்கினவன். எனவே எனக்கு என்னப் பிரச்சனை ஏற்பட்டிருக்கும் என்று தெரியும் என்று சிரித்துக் கொண்டு, மேலாடையை உதறிப் போட்டுக் கொண்டு தன் வாகனத்தில் கிளம்பினார்.
இன்று குடும்பத்தை உருவாக்கினவரிடம் repair ஆன வாழ்வைக் கொடுத்து சரிச் செய்ய நாம் இடமளிப்பதில்லை. எனக்கு எல்லாம் தெரியும், என்னால் சரி செய்ய முடியாததை யாராலும் சரி செய்ய முடியாது. நான் எத்தனை பேர் வாழ்க்கையை சேர்த்து வைத்துள்ளேன். அப்படி இருக்க என் பிள்ளைக்கு, மருமகனுக்கு நான் கூறாத ஆலோசனையா மற்றவர்கள் கூறி விடப் போகிறார்கள் என்றெல்லாம் பலர் தங்களுக்குத் தாங்களே மனதை சரிச் செய்துக் கொள்ளுகின்றனர்.
கானா ஊர் திருமண வீட்டில் குறைபாடு வந்த போது இயேசுவின் தாய் அதனை இயேசுவிடம் தான் கொண்டுச் செல்லுகிறாள். இயேசுவும் அதனைச் சரிசெய்து குறைகளை நிறைவாக்கி விடுகிறார்.
குறைகளை இயேசுவிடம் கூறுவதற்குப் பதிலாக தவறான நண்பர்களிடமும், நம்முடைய தவறை நியாயப்படுத்துகிறவர்களிடமும் கொண்டு சென்று விடுகிறோம். நம்மை திருமண வாழ்வில் இணைத்தவரிடம் கொண்டு சென்று விட கற்றுக் கொள்ள வேண்டும். அப்பொழுது நிறைவான, மகிழ்ச்சியான வாழ்வை நாம் அவருடைய வசனத்தின் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Comments
Post a Comment