எல்லாவற்றிற்கும் ஒரு எல்கை!

ரோஜருடைய நிச்சயதார்த்தம் மிகவும் கோலாகலமாக இருந்தது. மணமகள் வீட்டார் மணமகனுக்கு gift கொடுக்கவும், மணமகன் வீட்டார் மணமகளுக்கு gift கொடுக்கவும் ஜோராக நடந்தது. பணக்கார குடும்பமாக இருந்ததால் இரு குடும்பங்களும் தங்கங்களை தாராளமாக பரிமாறிக் கொண்டனர். எல்லாவற்றிற்கும் மகுடமாக மணமகன் மணமகளுக்கு விலை உயர்ந்த cell phone  யை சிம்கார்டு உடன் பரிசாக வழங்கி மணமகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தினான்.

இந்த cell phoneம் சிம்கார்டு தான் அவர்களின் நிச்சயதார்த்த வாழ்க்கைக்கும் குடும்ப வாழ்க்கைக்கும் கூட முற்றுப் புள்ளி வைக்கப் போகிறது என்பதை யாரும் உணரவில்லை.

மணமகன், அவனுடைய friends என எல்லாரும் மணமகளுடன் விளையாட்டாக பேசவும், message அனுப்பவும், chat செய்யவும் ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் அளவில்லாத டார்ச்சராக மாற ஆரம்பித்தது. தவறான அபிப்பிராயம் மணமகன் மீது உருவாகவே குடும்ப வாழ்வு வளரும் முன்பதாகவே கருகிப்போனது. 

17ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் விவசாயத்தொழில் முக்கியமாக நடந்து வந்த காலம், வெள்ளையர்கள் குடியேறி ஆக்கிரமித்திருந்தனர். அந்த காலத்திலே இளைஞர்கள் தேனீ போன்று மலர்களைத் தேடி அலைந்தனர். தேனீயால் பறக்க முடியும், இளைஞர்களால் குதிரைகளில் தொலைதூரம் சென்று தேடி அலைய முடியும். இப்படி தொலைதூரம் சென்று இளம் பெண்களை பார்த்து விட்டு திரும்ப நினைக்கும் போது காதலியின் (வருங்கால மணமகள்) வீட்டார் உணவு கொடுப்பது உண்டு. சில வேளைகளில் இருட்ட ஆரம்பித்து விட்டால் காட்டு மிருங்களால் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக தங்கள் வீடுகளிலேயே தங்க அனுமதியளிப்பர்.

முந்தைய காலங்களில் வீடுகளெல்லாம் மிகவும் சிறியதாக இருந்தது. மின்சார வசதி குறைவால் விளக்குகளை ஏற்றி வைத்திருப்பர். அதுவும் அமெரிக்காவில் குளிர் கொஞ்சம் அதிகமாக இருப்பதால் நம்ம ஊர் போல் கீழே உருள முடியாது. ஆகவே வருங்கால மணமகள் அருகிலேயே தூங்குவதற்கு கூட அனுமதிப்பர். ஆனால் அவர்கள் இருவருக்கும் இடையே சுருக்குப் பலகை (Bundling Board) என்ற பலகை ஒன்றை இருவருக்கும் இடையே அமைத்து விடுவர். அது இருவருக்கும் இடையே கழுத்திலிருந்து கால் பகுதி வரைக்கும் நீளமாக இருக்கும். ஆனால் பேசிக்கொள்ள chance கொடுத்திருக்கிறார்கள் அந்த காலத்து அமெரிக்கர்கள்.  

இன்றைய சமுதாயத்தில் குதிரை தேவையில்லை, ஒரு cell phone போதுமானது. எங்கே இருந்தும் முகமுகமாக பார்த்துப் பேசி விடலாம். ஆனால் பேச்சு பேச்சாக இருக்க வேண்டும். எல்லைத் தாண்டிய வார்த்தைகள் பயங்கரவாதம் போல் பார்க்கப்படும். அதுவே வாழ்க்கை வாழ்வதற்கு தடைகற்களாக அமைந்து விடும்.

திருமறையில் யாக்கோபு தன் மாமனாகிய லாபான் வீட்டில் இருக்கும் போது ராகேல் மேல் பிரியமாக இருக்கிறான். அதனை வெளிப்படையாக தன் மாமாவிடம் கூறுகிறான். ஆனாலும் பொறுமையுடன் ஒரே வீட்டில் தங்கியிருக்கிறான். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபடவில்லை. வார்த்தையில், செயலில் தூய்மையைக் காத்துக் கொள்ளுகிறான். திருமணம் நடைபெறும் வரையில் லாபான், யாக்கோபு மீது எந்த குற்றச்சாட்டையும் வைக்கவில்லை, ராகேலும் வைக்கவில்லை. அந்த அளவிற்கு தன் வாழ்வைப் பாதுகாத்துக் கொண்டான்.

இன்றைய இளைஞர்கள் இந்த முன்மாதிரியை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும். தன்னை பற்றி வருங்கால மனைவி/கணவன் எல்லாவற்றையும் அறிந்துக் கொள்ள வேண்டும் என்று photoயை share பண்ணுவதும், அளவுக்கு மீறி நண்பர்களும் தன் வருங்கால மனைவி/கணவனுடன் அரட்டை அடிப்பதும், chat பண்ணுவதும் பலவேளைகளில் எதிர்மறையான பிம்பத்தை உருவாக்கி விடும். ஆகவே எல்லாவற்றிற்கும் ஒரு குறிப்பிட்ட எல்கையை நியமித்துக் கொள்ளுங்கள். 

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

புத்தியுள்ள மனைவி

உண்மையை உரக்க சொல்வோம்