சாவியாக இருங்கள்
இன்றைய இளைஞர்கள் கல்லூரிக்கு விடுமுறை கொரானா என்ற பெயரால் பெறுவதினால், நேரத்தை செலவிட தெரியாமல் மணிக்கணக்காக கைப்பேசியில் கண் மயங்கி கிடக்கின்றனர்.
வாழ்க்கையில் செலவு செய்த நேரங்கள் மாத்திரம் திரும்ப ஒரு நாளும் வரப் போவதில்லை. உருண்டு கொண்டிருக்கும் பூமியை யாரும் நிறுத்தி வைக்க முடியாது. நாம் தான் பூமியோடு சேர்ந்து உருண்டு, திரண்டு கல்விச் செல்வத்தை சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும்.
பாட கல்வியை மட்டும் தேர்ந்தெடுத்தல்ல, விருப்பமுள்ள புத்தகங்களைக் கற்று மூளையை புஷ்டிப்பாக்கிக் கொள்ள வேண்டும், இல்லையென்றால் மூளையை கரையான் போன்று செல்போன் கொஞ்சம் கொஞ்சமாக கரைத்து விடும்.
அறிஞர் அண்ணா சிறந்த முதலமைச்சர். ஆனால் S.S.L.C யில் இரண்டு முறை தவறி, மூன்றாம் முறை கரை சேர்ந்தவர். M.A முடித்து சட்டக் கல்லுரியில் காலடி எடுத்து வைத்தார். ஆனால் வறுமை அவர் காலை தட்டி விடவே fees கட்ட முடியாமல் மூன்று மாதத்திலே வெளி நடப்பு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால் பல நாட்டின் அரசியல் சட்டங்களை அரசியலுக்காகக் கற்று இந்திய அரசமைப்பையே மாற்ற வேண்டும் என்று உரக்க குரல் எழுப்பி அனைவரின் கைகளையும் பிசைய வைத்தவர்.
கல்வி என்பது தேனாமிர்தமாக மாணவப் பருவத்தில் இருக்க வேண்டும். அப்பொழுது அறிவு, ஞானம், என்பது வேலை வாய்ப்பைத் தேடிச் செல்லும் போது, அழையா விருந்தாளியாக திடீரென்று வந்து உதவிடும்.
ஒரு முறை சுத்தியலும், சாவியும் உரையாடிக் கொண்டன. சுத்தியல் சாவியைப் பார்த்து, "நான் எவ்வளவு குண்டாக இருந்தாலும் ஒரு பூட்டை திறக்க வேண்டுமானால் எவ்வளவு நேரம் பிடிக்கிறது. ஆனால் நீயோ மிகவும் ஒல்லியாக இருக்கிறாய். ஆனால் நொடியில் கதையை முடித்து விடுகிறாயே" இது எப்படி சாத்தியம் என்றது.
உடனே படார் என்று சுத்தியலைப் பார்த்தது, பார் நீ வெளியே இருந்து திறக்க முற்படுகிறாய், நானோ உள்ளே சென்று கச்சிதமாக கதையை முடித்து விடுகிறேன் என்றது சாவி.
கல்வி என்பது படிபடி என்று சொல்வதால் நிகழக்கூடிய செயலாக மாறாமல் இயற்கையாகவே விருப்பத்தோடு புரிந்து, நுழைந்து படிக்க வேண்டும். அப்பொழுது தான் நீடித்து நிலைக்கும். செல்லும் இடமெல்லாம் சிறப்பைத் தேடி தரும்.
ஞானம் கூப்ப்பிடுகிறதில்லையோ? புத்தி சத்தமிடுகிறதில்லையோ? அது வழியருகேயுள்ள மேடைகளிலும், நாற்சந்திகளிலும் நிற்கிறது... பேதைகளே, விவேகம் அடையுங்கள். மூடர்களே, புத்தியுள்ள சிந்தையாயிருங்கள். கேளுங்கள், மேம்பாடான காரியங்களைப் பேசுவேன், என் உதடுகள் உத்தம காரியங்களை வசனிக்கும் (நீதிமொழிகள் 8:1-6) என்று திருமறை கூறுகிறது. வாழ்க்கையில் ஞானம், அறிவு, புத்தி என்பவைகளின் மேன்மையைப் புரிந்துக் கொள்ள வேண்டும். கிடைக்கிற நாட்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள். போட்டி நிறைந்த உலகத்தில் போட்டிப் போட்டு நீந்த பழகிக் கொள்ள வேண்டும். காலம் முழுவதும் விரையம் பண்ணி விட்டு எனக்கு வேலை ஓருவரும் தருவதில்லையென்று உலகத்தை குறைக் கூறுவதால் எந்த பயனும் இல்லை.
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Comments
Post a Comment