சோர்ந்துப் போகாதே

ஒவ்வொரு மனிதர்களும் ஊக்கம் இருக்கும் வரையில் தான் முயற்சி செய்து முன்னுக்கு வர நினைப்பார்கள். கொரானா பரவல் அதிகரித்த போது கிரிக்கெட் போட்டி பார்வையாளர்கள் இன்றி நடத்த தீர்மானித்தனர். ஆனால் பார்வையாளர்கள் இல்லாமல் விளையாடினால் நன்றாக இருக்காது என்று பலர் மனதுக்குள் முறுமுறுத்தனர். காரணம் உற்சாகமான கைத்தட்டும், விசில் சத்தமும் விளையாடுகிறவர்களுக்கு ஊக்க மருந்து போல் மாறி விடுகிறது.

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னும் ஓரு பெண் இருக்கிறாள் என்று கூறக்காரணம் எந்த ஒரு மனைவி கணவனின் செயல்களுக்கு ஊக்கம் கொடுக்கிறார்களோ அவ்வளவுக்குத்தான் கணவன் எழும்பி பிரகாசிப்பான். எதிர்மறையாக கணவனின் அல்லது மனைவியின் செயல்பாடுகளை சாடினால் சீக்கிரமே எல்லா முயற்சியையும் மூடிவிட்டு நீட்டி நிமிர்ந்து படுத்து விடுவார்கள்.

ஒரு சிறுவனுக்கு அவன் தந்தை கடிகாரம் ஒன்றை வாங்கிக் கொடுத்தார். அவனோ அதனை அக்குவேர் ஆணிவேராக பிரித்துப் பார்த்து விட்டு அப்படியே மீண்டும் சேர்த்து ஓடவிட்டான். இந்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு நண்பர்களின் வீட்டு கடிகாரங்களைப் பழுது பார்த்துக் கொடுத்தான்.

அந்த சிறுவன் பெரியவனாக மாறிய போது கிளாரா ஜேன் பிரையண்ட் என்ற பெண்ணை திருமணம் செய்தான். அவனுடைய மூளை மோட்டார்கள் பற்றிய ஆராய்ச்சியில் மூழ்கிக் கிடந்தன. அவரை பார்க்கிறவர்களெல்லாம் சரியான பைத்தியம் என்று அவரைக் கேலியும் கிண்டலுமாக பேசினர். காரணம் தோல்வி மேல் தோல்வியை பெற்றுக் கொண்டே இருந்தார். 

கிளாரா மட்டும் தன் கணவனை கிண்டல் செய்யாமல் அவருக்கு திறமை இருக்கிறது என்றாவது ஒரு நாள் பெரிய ஆளாக வருவார் என்று ஊக்கம் கொடுத்துக் கொண்டே இருந்தார். அந்த ஊக்கத்தின் அடிப்படையில் தான் மோட்டார் காரை கண்டுபிடித்தார். தொடர்ந்து மூளையை கசக்கி கசக்கி புதிய சாதனைகளைப் படைக்க அவர் மனம் துடித்துக் கொண்டே இருந்தது. இதன் விளைவாக ஒரு மணி நேரத்துக்கு 146.9 KM வேகத்தை அடையும் பந்தய கார்களை எல்லாம் உருவாக்கினார். பின்னர் அமெரிக்காவின் ஒவ்வொரு நகரத்திலும் அவர் காரை சந்தைப்படுத்த விற்பனையாளர்களை அமைத்து ஓகோ என்று கையை கன்னத்தில் வைக்கும் அளவிற்கு வாழ்க்கையில் முன்னுக்குச் சென்றார். அவர் தான் போர்டு மோட்டார் நிறுவனத்தின் உரிமையாளர் ஹென்றி போர்டு. அமெரிக்க போக்குவரத்திலும், தொழில் துறையிலும் புரட்சியை ஏற்படுத்தியவருக்கு பெரிய மூலதனமே மனைவிதான்.

கடவுள் கொடுத்த மனைவியை மிகவும் சாதாரணமாக ஆண்கள் நினைக்கக்கூடாது. வாழ்க்கையில் வாழ்ந்தாலும், வீழ்ந்தாலும் உடன் இருந்து தூக்கி விடவே கடவுள் கொடுத்த நல்ல துணை. உலகிலேயே நம்பகத்தன்மையுள்ள நபர் யார் என்றால் மனைவிக்கு கணவன், கணவனுக்கு மனைவி தான்.

பெண்களும் ஆண்களுடைய கொம்பை அடிக்கடி சீவி விட வேண்டும். அப்பொழுது தான் உலகிலே போராடும் சக்தியை ஆண்கள் பெற்றுக் கொள்வார்கள். கணவனுக்குள் இருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வரவும், நம்பிக்கையூட்டவும் செய்ய வேண்டும். தோல்வி மேல் தோல்விகளை ஆண்கள் பெற்று மனது சுருங்கி வரும் போது, "போதும் போதும் தொழிலில் நீங்கள் ஒன்றுக்கும் உதவ மாட்டீர்கள்" என்று கூறி மனதை முடமாக்கி விடாதிருங்கள்.

"குணசாலியான ஸ்திரீ தன் புருஷனுக்குக் கிரீடமாயிருக்கிறாள்". (நீதிமொழிகள் 12:4) என்று திருமறை கூறுகிறது. கிரீடம் என்பது மனிதனுக்கு அலங்காரமாக இருக்கிறது. மனைவியின் வார்த்தைகள் குறிப்பாக உற்சாகமூட்டும் வார்த்தைகள் ஒரு கணவனை நாள் முழுவதும் சிறகில்லாமல்  பறக்கச் செய்து விடும். மனைவியின் பாராட்டு உலகில் மற்றவர்களின் பாராட்டை விட அதிக வலுவூட்டுகிறது. எலும்புகளுக்கு மஞ்சைப் போன்றது. (Bone Marrow).

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி