ஜெயிக்க வைக்கும் அம்மாக்கள்

 

வாழ்க்கையில் அம்மாவின் role என்பது ஆண் பிள்ளைகளாயினும், பெண் பிள்ளைகளாயினும் கொஞ்சம் ஓவராகவே தாக்கத்தை ஏற்படுத்திவிட்டுத்தான் உலகத்தை விட்டுப் போவார்கள். அதனால் பலருக்கு அம்மாதான் உலகமாகவே இருந்து வருகின்றார்கள்.

வீர சிவாஜி, மகாத்மா காந்தி போன்றோர் வாழ்க்கையில் தாயார் உள்ளத்தில் போட்ட விதையானது பின் நாட்களில் ஆல் போல் வளர்ந்து சிறந்த மதிப்புமிக்க ஆளுமைகளாக மாற்றி விட்டது.

பெண் குழந்தைகள் வாழ்விலும் அம்மாக்களின் தாக்கம் என்பது அளவிட முடியாத அளவுக்கு இருக்கிறது. தமிழ் குடும்பத்தில் அவதரித்த இந்திரா நூயி என்ற குழந்தை சென்னையிலுள்ள Holy Angels பள்ளியில் கல்வியைக் கற்றுத் தேர்ந்தார். அதைத் தொடர்ந்து சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் வேதியியல் பாடத்தில் இளங்கலைப் படிப்பை முடித்து விட்டு, கல்கத்தாவில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் MBAவை கையோடு முடித்தார்.

இந்தியாவில் கல்வி கற்று தேர்ந்த ஒருவர் எப்படி PepsiCo நிறுவனத்தில் தலைவராக மாறினார்? 'டைம்' பத்திரிக்கையின் புள்ளி விபரப்படி 2007 மற்றும் 2008க்கான உலகில் தாக்கத்தை ஏற்படுத்தும் 100 பேரில் ஒருவராக எப்படி மாறினார்! Forbes பத்திரிக்கையின் அடிப்படையில் 2008ம் ஆண்டில் மிகவும் சக்தி வாய்ந்த 3வது பெண்மணியாக எப்படி மிளிர்ந்தார்?

இவற்றுக்கு அடித்தளமாக அவருடைய வாழ்க்கையில் இருந்தது யார் என்றால் அவர்களுடைய அம்மா! ஆச்சரியமாய் இருக்கிறதா?

இந்திரா நூயி சிறு பெண்ணாக இருக்கும் போதே அவர்களுடைய தாயார் அவர்களுக்கும்,அவர்களுடன் உடன் பிறந்த சகோதரிக்கும் இடையே “வருங்காலத்தில் நீங்கள் என்ன ஆகப் போகிறிர்கள்? என்ன செய்ய விரும்புகிறிர்கள்?” என்ற தலைப்பில் அடிக்கடி பேச்சுப் போட்டி நடத்தி, வெற்றி பெற்ற மகளுக்கு சாக்லேட் கொடுப்பார்களாம். இதன் வழியாக நல்ல தகவல்கள் மின்சாரம் போன்று உள்ளத்தில் பரவி உயர்ந்த நோக்கு, அசைக்க முடியாத தன்னம்பிக்கைப் போன்றவை வாழ்வில் மிளிர வழிவகுத்ததாம்.

இன்றைய அம்மாக்கள் சிலர் பிள்ளைகளுக்கு ஒரு செல்போனைக் கொடுத்து விட்டு, என்னைத் தொந்தரவுச் செய்யாதே, என் போனை மட்டும் கேட்காதே என்று கூறுகிறவர்களாக இருக்கிறார்கள். இதனால் பிள்ளைகளின் எதிர்காலம் என்பது கேள்வி குறியாக மாறி விடுகிறது. பிள்ளைகளுக்கென்று எந்த ambitionம் இல்லாமல், பார்ப்போம்!   எதையாவது படிக்க வேண்டும்!! இப்பொழுது friends இடம் chatting பண்ணிக் கொண்டிருக்கிறேன், என்னை disturb பண்ணாதிருங்கள் என்று இருட்டறைக்குள் முடங்கி விடுகின்றனர்.

பத்சேபாள் என்ற பெண்மணி தாவீதுக்கு மனைவியாக மாறுகிறாள். ஆனால் மிகவும் ஞானமாக காயை நகட்டி தன் மகன் சாலமோனுக்கு அரச பதவியை தாவீதிடம் இருந்து வாங்கி ஆளாக்கி விடுகிறாள். ராஜாவாகிய லேமுவேலுக்கு அவன் தாய் புத்திச் சொல்லுகிறாள். ராஜா எப்படி நடந்துக் கொள்ள வேண்டும், எப்படி நடக்கக் கூடாது என்று ஆலோசனை வழங்கும் அளவிற்கு அவன் வாழ்வில் முக்கியத்துவம் பெறுகிறாள். நகோமி தன் மகளைப் போல் ரூத்தை நேசித்து அவள் நல் வாழ்வுக்கு plan போட்டு, போவாசை கிளின் போல்டு பண்ணி விடுகிறாள்.

"அவள் பிள்ளைகள் எழும்பி, அவளை பாக்கியவதி என்கிறார்கள்" அந்த அளவிற்கு பிள்ளைகள் தன் தாயினால் நன்மையைப் பெற்றுள்ளார்கள்.

அன்பு சகோதரிகளே “ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது” என்ற பழமொழியை மனதில் கொண்டு இளமையில் பிள்ளைகளுக்கு நல்ல தகவல்களைக் கொடுத்து வளர்த்தால் அது வாழ்க்கை முழுவதும் பலன் தரும் என்பதை மறந்து, இருந்தும் விடாதிருங்கள். 

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி