அளவுமிஞ்சிய பாசம்
சிறு பிள்ளைகளாக இருக்கும் போதும் நடை பழகும் போதும் பெற்றோர் கொஞ்சம் கையைப் பிடித்து நடத்துவர், கொஞ்சம் விட்டுப் பிடிப்பர், கொஞ்சம் ஊக்கப்படுத்துவர். அப்படியே பிள்ளைகள் வளர்ந்து நடக்க பழகிவிடுவார்கள். அது போலத்தான் சைக்கிள் பழகும் போதும் தகப்பனார் பின்னால் பிடித்துக் கொண்டு ஒட்டு ஒட்டு என்று சொல்ல பிள்ளைகள் ஓட்ட ஆரம்பித்து விடுவார்கள். பின்னர் பிடிக்காமலே நான் பின்னால் இருக்கிறேன் Super ஆக ஒட்டுகிறாய் என்று encourage பண்ணியே ஓட்ட பழக்குவித்து விடுவார்கள்.
ஆனால் பெற்றோர்கள் பிள்ளைகள் விழுந்துவிடக்கூடாது என்பதற்காக இடுப்பிலே தூக்கி வைத்துக் கொண்டும், சைக்கிளே கொடுக்காமல் பழக்கினால் என்ன ஆகும்? வாலிப வயதானாலும் சைக்கிளை ஒட்டிக்கொள்ள மாட்டார்கள். இவைகளுக்கு பின்னணியில் இருப்பது பெற்றோரின் அளவுக்கு மிஞ்சிய பாசம்.
காந்தியடிகள் வீட்டிற்கு சாரதா தேவி வர்மா என்ற பெண் தன்னுடைய மகனுடன் அவரைப் பார்ப்பதற்காக வந்திருந்தார்கள். அச்சமயம் எழுத்துப்பணியில் ஈடுபட்டிருந்தார் காந்தியடிகள். ஆகவே அவரைச்சுற்றிலும் பேப்பராக ஆங்காங்கே சிதறிக் கிடந்தது. ஒரு பக்கத்திலே பனை ஓலையால் செய்த ஓலை விசிறியும் இருந்தது. இச்சூழலில் சாரதா தேவியும் மகனும் உள்ளே நுழைந்தனர்.
காந்தியடிகளுக்கு வியர்த்துக் கொண்டிருந்தது. ஒரு பக்கம் மிகவும் களைப்பாக இருந்தது. வந்த சிறுவனைப் பார்த்து அந்த ஓலை விசிறியை எடுத்து சற்று வீசுமாறு கூற, அவன் வீசிக் கொண்டிருந்தான். அந்த இதமான காற்றில் கண் சொக்கிப் போன காந்தியடிகள் சற்று சாய்ந்து கண்களை மூடி ஒரு மைக்ரோ தூக்கம் போட்டார்.
தூங்கிப் போனதைக் கண்ட சாரதா தேவி தன் மகனிடம் இருந்த விசிறியை வாங்கி அவர் வீச ஆரம்பித்தார். திடீரென்று கண்விழித்துப் பார்த்தால் சிறுவனிடம் இருந்த விசிறி, சாரதா தேவியிடம் இருப்பதைக் கண்ட காந்தியடிகள், "தாய் அன்பு, மகன் பணிவிடைச் செய்வதை தாங்க முடியவில்லையோ! என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.
அதை மறுத்த சாரதாதேவி, "இல்லை பாபுஜி, அவன் சிறுவனாயிருக்கிறதினால் விசிறியை தவறிப் போய் தூங்கிக் கொண்டிருக்கும் உங்கள் மேல் போட்டு விடக் கூடாது என்பதற்காகத்தான்' என்றார்.
அதை ஏற்காத காந்தியடிகள் சாரதா தேவியைப் பார்த்து, "அதிக தாயின் அன்பு குழந்தைக்கு தன்னம்பிக்கைத் தராது" என்று கூறி விவாதத்தை முடித்துக் கொண்டார்.
பல வேளைகளில் பெற்றோர் திருமணமான பின்பும் தங்கள் பிள்ளைகளுக்கு Personal Assistant போல் மாறிவிடுவது நல்லதல்ல. அவர்கள் சுயமாக முடிவெடுப்பதற்கு சற்று விட்டு விட வேண்டும். எனக்கு எல்லாம் தெரியும், என்னுடைய அனுபவம் தான் உன்னுடைய அனுபவம், எல்லா பிரச்சனைக்கும் என்னிடம் தீர்வு உண்டு. எனவே பிரச்சனை ஆரம்பிக்கும் முன்பே காரியத்தை என்னிடம் சொல்லிவிடு என்று பெற்றோர் தங்கள் பிள்ளைகளை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு அலைவது நல்லதல்ல.
திருமறையில் லாபான் தன் பிள்ளைகளையும், அவர்கள் குடும்பத்தையும் தன் கட்டுப்பாட்டிலேயே வைத்துக் கொள்ள விரும்பினான். ஆனால் ஆண்டவர் அதற்கு அனுமதிக்கவில்லை. என் பிள்ளை, என் பிள்ளை என்று பிள்ளைகளையும், பேரப்பிள்ளைகளையும் தன் கட்டுப்பாட்டிலே வைத்திருப்பது தேவ சித்தம் அல்ல என்பதை மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள். (ஆதியாகமம் 31:43). கர்த்தர் பிள்ளைகளுக்கென்று வைத்திருக்கிற குடும்ப வாழ்விற்குள் அவசியமின்றி மூக்கை நுழைக்காதிருங்கள். கர்த்தர் அவர்களை நித்தம் வழி நடத்த வல்லவராக இருக்கிறார்.
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Comments
Post a Comment