கை வீசி நடங்கள்!

 

கொரோனா தொற்று காரணத்தினால் பிள்ளைகள் படிப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. சில பிள்ளைகள் வருட துவக்கத்திலேயே இந்த வருடம் நமக்கு all pass தான். வீணாக மூளைக்கு வேலைக் கொடுத்து இடத்தை வேஸ்ட் பண்ண வேண்டாம் என்று படிப்பதை நிறுத்தி விடுகின்றனர். Online Class எல்லாம் அரட்டையாக நினைத்துக் கொள்ளுகின்றனர்.

சில மாணவர்கள் Online Class யையும் sincereஆக attend பண்ணி அன்றாடம் படித்து விடுகின்றனர். ஒரு வேளை Exam எழுத வேண்டிய சூழல் வந்தால் எளிதாக இருக்கும் என்று நினைக்கின்றனர்.

அன்றன்று உள்ள பாடத்தை படிப்பதினால் Exam வைத்தாலும் வைக்காவிட்டாலும் பயம் இல்லை. அதே வேளையில் அடுத்த வகுப்புக்கு போகும் போது தொடர்ச்சியான பாடங்கள் மிகவும் உதவியாக இருக்கும். இப்பொழுது படிப்பதற்கு டிமிக்கி கொடுப்பார்கள், மேல் வகுப்புக்குப் போகும் போது கண்களை உருட்டிக் கொண்டு இருக்க வேண்டிய சூழல் ஏற்படும்.  

ஒரு நாள் முதலாளி ஒருவர் நீண்ட பயணம் ஒன்றை மேற்கொண்டார். தன்னுடன் பொருட்களை எடுத்து வர சில ஆட்களையும் கூட்டிக் கொண்டுப் போனார். அதில் ஒருவர் பெயர் ஈசாப்பு.

பயணத்தைத் தொடங்கும் போது ஆளுக்கொரு பொருளை தூக்கிச் செல்ல கூறினார் முதலாளி. எல்லாரும் எது weight குறைவோ அதை தூக்கிச் செல்ல ஆர்வமாக இருந்தனர்.

ஆனால் சாப்பாட்டை தூக்கிப் பார்த்தால் அதிக சுமையாக இருந்தது. அதனை யாரும் தூக்க முன்வரவில்லை. ஆனால் ஈசாப்பு அதை மகிழ்ச்சியோடு தலையில் தூக்கிக் கொண்டு நடக்க ஆரம்பித்தார். அவரோடு வந்த மற்ற வேலையாட்கள் ஈசாப்பை நையாண்டி பண்ணினர்.

பயணம் வெகு தூரமாக இருந்ததால் ஆங்காங்கே உட்கார்ந்து உணவை சாப்பிட்டுக் கொண்டே போனார்கள். போகப் போக சாப்பாட்டை முழுவதும் சாப்பிட்டு முடித்தார்கள். ஈசாப்பு தூக்கிக் கொண்டு வந்த கூடை free ஆனது. ஈசாப்பு பிய்ந்த அந்த கூடையை தூக்கி வீசி விட்டு கை வீசிக்கொண்டு ஜாலியாக பேசியபடியே முதலாளியோடு நடக்க ஆரம்பித்தான். மற்ற வேலைக்காரர்களுக்கு இப்பொழுது தான் ஈசாப்பின் புத்திசாலித்தனம் தெரிந்தது.

மாணவர்கள் இன்று படிப்பதை நாளை படிக்கலாம் என்றும், இந்த வருடத்தில் படிப்பத்தை அடுத்த வருடத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்றும், Online ல் Exam நடக்கும் போது பேசாமல் bookயை தூக்கி வைத்து அசத்திடலாம் என்றும் கணக்குப் போட்டீர்களானால் வேலை வாய்ப்புகள் தேடிப் போகும் போது fundamentalலே தெரியாமல் தலையை சுரண்டிக் கொண்டு, திருதிருவென்று முழிக்கும் நாட்கள் வந்து விடும் என்பதை மறந்து விடாதிருங்கள்.

பெற்றோர்கள், ஆசிரியர்கள் படியுங்கள் என்று கூறுவது கேட்பதற்கு கஷ்டமாக, கசப்பாக இப்பொழுது தோன்றலாம். ஆனால் நாளடைவில் அது இனிப்பாக இருக்கும்.

அன்றன்று படிக்க வேண்டியதைப் படித்தால் புத்தியானது கூர்மையாகிக் கொண்டே போகும். அறிவு வளர்ந்துக் கொண்டே போகும். "குதிரை யுத்த நாளுக்கு ஆயத்தப்படும்.   ஜெயமோ கர்த்தரால் வரும்" என்று நீதிமொழிகள் புத்தகம் கூறுகிறது. குதிரை யுத்த நாளுக்கென்று ஆயத்தப்படவில்லை என்றால் யுத்தத்தில் தோல்வி தான் வரும். இறைவன் மாணவர்களை சோம்பலாக இருக்கக் கூறவில்லை. கண்டதையும் கற்றால் தான் பண்டிதனாக முடியும். மணிக்கணக்காக Whatsapp யையும், facebook யையும் பார்த்துக் கொண்டு காலத்தைக் கடத்தி விட்டு, ஆண்டவரே எனக்கு NEETல் வெற்றித் தரவில்லையே, IITயில் இடம் கிடைக்கவில்லையே, நினைத்த கல்லூரி கிடைக்கவில்லையே என்று கடவுள் மீது வருத்தப்பட்டால் கடவுள் என்னச் சொல்லுவார்?

சோம்பேறியே காலத்தை பிரயோஜனப்படுத்திக் கொள்ளாமல் வீணாக புலம்புகிறாயா? சின்ன ஜந்துவாகிய எறும்பினிடம் இருக்கும் உழைப்பும், எதிர்காலத்தைக் குறித்த அக்கறையும் 6 அறிவு படைத்த உன்னிடம் இல்லையே என்று வருந்துவார். காலத்தை கருத்தாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி