தீர்வு உண்டா?
காலையிலே கடற்கரையில் மீன் வாங்குவதற்காக சென்றிருந்தேன். கடற்கரைக்குச் சென்ற பின் தான் தெரிந்தது அன்று புயல் வர வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் கடலுக்குள் போக வேண்டாம் என்று எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டு இருந்தது.
வந்தது வேஸ்டாய் போச்சோ என்று கடலை x-ray கண் கொண்டு வெறித்துப் பார்க்க…தூரத்தில் ஒரு படகு வருவது போல் இருந்தது. காத்திருந்துப் பார்த்தால் ஒரு படகு கடல் அலைகளுக்கு மத்தியில் போராடிக் கொண்டு கடற்கரையை நோக்கி வந்துக் கொண்டிருந்தது. காற்றும் கடலும் கொந்தளித்தாலும் மனிதர்கள் சிலர் வெற்றிக்கொண்டு கடமையைச் செய்கின்றனர். சிலர் இதில் பிரச்சனை வரும், அது சரிபட்டு வராது, இப்படிச் செய்தால் தோல்விதான் வரும், இந்த வீட்டில் இருந்து இந்த பிரச்சனைகளை எதிர்கொள்வதை விட, வீட்டை விட்டே ஓடி விடலாம் என்று பலர் குடும்பத்தை விட்டு ஓடி விடுகின்றனர். பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கின்றனர்.
அமெரிக்காவில் மியாமி என்ற கடற்கரையிலும் ஒரு பிரச்சனையை சரி பண்ண முடியாமல் தவித்தனர்.
எப்பொழுதுமே மக்கள் கடற்கரைக்குப் போனால் ஜாலியாக எதையாவது கொரித்துக்கொண்டும், ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டும் மகிழ்ச்சியாக இருக்க நினைப்பர். சாப்பிட்ட பொருளின் கவர், ஐஸ்கிரீம் கப் எல்லாவற்றையுமே அப்படி வீசி எறிந்து விட்டுச் செல்லுவர். அப்படித்தான் இந்த கடற்கரையில் ஐஸ்கிரீம் கப் ஒரு பெரிய பிரச்சனையாக இருந்தது.
இதனைச் சரி பண்ண துப்புரவு பணியாளர்களும் அதிகாரிகளும் சேர்ந்து யோசிக்க திட்டமிட்டனர். கூடுகையில் அவரவர் தங்களது கருத்துக்களை தாராளமாக முன் வைக்கலாம். எல்லாவற்றையும் பதிவு செய்துக் கொண்டு முடிவெடுப்போம் என்று தீர்மானித்தனர்.
கூட்டம் அதிகரித்தது. ஒவ்வொருவரும் தங்கள் கருத்தை கூறினர். சிலர் ஐஸ் சாப்பிட்டு விட்டு அந்த கப்பைப் போடுவதற்கு ஆங்காங்கே பெரிய dustbin வைப்போம். இதில் தான் போட வேண்டும் என்று எழுதி வைப்போம் என்றார் ஒருவர்.
மற்றவர் ஐஸ் சாப்பிட்டுவிட்டு அந்த cup யை திரும்ப அதே கடையில் கொடுத்தால் கொஞ்சம் பணம் திருப்பிக் கொடுக்கலாம் என்றார்.
இதெல்லாம் சரிவராது. அபராதம் போட்டால் தான் மக்கள் கீழ்படிவர் என்றார் இன்னொருவர்.
ஒருவர் எழுந்தார். இந்த ஐஸ்கிரீம் சாப்பிட்டுவிட்டு கீழேப் போட்டால் அந்த cupயை அவர்கள் வாயில் வைத்து சாப்பிடச் செய்ய வேண்டும் என்றார். இதைக் கேட்ட கூட்டம் விழுந்து விழுந்து சிரித்தது, இப்படி ஒரு ஆலோசனையா என!
எல்லாவற்றையும் எழுதிக் கொண்ட அதிகாரிகள் பின்பு உட்கார்ந்து யோசித்தனர். எந்த ஆலோசனை சிறப்பாக அமல்படுத்த முடியும் என்று பார்த்த போது cupயை சாப்பிட வைப்பது தான் சிறந்தது என்று முடிவு எடுத்தனர். இதன் விளைவாக தான் Wafer Cups உருவானது. இன்று உலகம் முழுவதும் கோன் ஐஸ் என்ற பெயரிலே cupயை waste பண்ணாமல் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்.
பிரச்சனையைக் கண்டு குடும்பத்தை, உறவை, நட்பை விட்டு ஓடுவது இன்று மட்டுமல்ல. 2000 வருடத்திற்கு முன்பு மாற்கு என்ற பெயருடைய யோவான் என்பவர் பிரச்சனை வந்ததும் பவுல், பர்னபாவை அம்போ என்று விட்டு விட்டு ஓடிவிட்டான். இப்படிப்பட்டவனை நம்முடைய கூட்டத்திலே வைக்கக்கூடாது என்று பவுல் அவன் மீது எரிச்சல்படுகிறார். (அப்போஸ்தலர் 15:37-40)
இன்றும் சிலர் பிரச்சனைகள் வரும் போது தற்கொலைச் செய்துக் கொள்வதும், சிலர் கணவன் அல்லது மனைவியை விட்டு பிரிந்துச் செல்வதும் நடக்கிறது. ஆனால் பிரச்சனைகளை எதிர்கொள்ள இறைவன் பெலன் அளிக்கிறார். குடும்பத்தை உங்களுக்கு அமைத்து கொடுத்தவர், உங்களை முற்றுமுடிய தாங்கி, வழிநடத்த வல்லவராய் இருக்கிறார் என்பதை மறந்து விடாதிருங்கள்.
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Comments
Post a Comment