புரியா புதிர்

 


குடும்பங்களில் சண்டை ஏன் வருகிறது?   எதற்கு வருகிறது?   என்று பலவேளைகளில் பலருக்கு புரியாமல் இருக்கும். மனைவி ஏன் பாத்திரங்களை சுத்தம் செய்யும் போது வேகமாக டமார் டமார் என்று வைக்கிறாள். ஏன் மெதுவாக வேலைச் செய்யாமல் இப்படிச் செயல்படுகிறாள்? ஏன் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுடன் அளவளாமல் இருக்கிறாள்?   இப்படி கணவனுக்கு கேள்விகள் மனைவிப் பற்றி எழும்பலாம்.

சில பிரச்சனைகளுக்கு நேரடியான காரணங்கள் இல்லாமல் மறைமுகமாக வேறு ஒரு காரணம் இருக்கலாம். அதனைப் புரிந்துக் கொள்வதில் சிலர் தான் கில்லாடிகளாக இருப்பர்.

பேரரசன் போசராஜன் மக்களின் மனநிலையை பார்வையில் வாசித்து விடும் திறமை உடையவர். பிரச்சனையின் அடிவேரை கண்டுபிடித்து treatment கொடுப்பதில் அவருக்கு அவர்தான் இணை.  

அன்று ஒரு புலவர் அவரைச் சந்திக்க வந்தார்.

புலவருக்கு என்ன வேண்டும் என்று கேட்டார் பேரரசர். மன்னரே எனக்கு வீட்டில் பிரச்சனையாக உள்ளது. என் தாய் என்னையும், என் மனைவியையும் காரணமே இல்லாமல் கோபம் கொண்டு எரிந்து விழுகிறாள்.

அதோடு நின்றால் பரவாயில்லை. என் மனைவி என் தாய்க்கு சளைத்தவள் அல்ல என்று காட்டும் அளவிற்கு என் மீது அளவுக்கு அதிகமாக கோபமும் எரிச்சலையும் உமிழுகிறாள். என்னால் மகிழ்ச்சியாய் குடும்பம் நடத்த முடியவில்லை. எனவே தாங்கள் தான் இதற்கு நல்ல தீர்வைக் கூறி, கோபக்காரிகளிடம் இருந்து என்னை காப்பாற்ற வேண்டும் என்று கூறி கூனி குறுகி நின்றார்.

இந்த பிரச்சனையைக் கேட்ட உடன் அரசவையில் இருந்தவர்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டனர். நாட்டின் பிரச்சனையே தலைக்கு மேல் இருக்கும் போது குடும்ப பிரச்சனையை மன்னரிடம் கொண்டு வந்து நிற்கிறாரே புலவர். இதற்கு மன்னர் என்னச் செய்ய முடியும் என்று தன் கண்களால் பேசிக்கொண்டனர்.

யாரும் எதிர்பாராத விதமாக பேரரசர் தன் பொக்கிஷதாரரிடம் ஒரு பொற்காசுப் பையைக் கொண்டு வரச் சொன்னார்.

அதனை புலவரிடம் வழங்கிவிட்டு பேரரசர் புலவரைப் பார்த்து, "புலவரே தங்கள் குடும்பம் வறுமையில் வாடுகிறது. நீங்கள் பணம் சம்பாதித்து குடும்பத்தை தாங்கிப் பிடிக்க முடியாததால் உங்கள் தாயும், மனைவியும் இவ்வாறு கோபத்துடன் நடந்துக் கொள்ள்ளுகின்றனர். இந்த பொற்காசுகளைக் கொண்டு போய் உங்கள் குடும்பத்திற்கு வேண்டிய பொருட்களை வாங்கிக் கொடுத்து குறைவில்லாமல் நடத்துங்கள்" என்று அனுப்பி வைத்தார்.

புலவரின் குடும்பம் பொன் சிரிப்பால் மிதந்தது

இன்று பல ஆண்கள் சரியான வேலையின்றி, வேலைப் பார்க்க மனமின்றி, பெற்றோரின் பென்சன் பணத்தில் வாழ்க்கையை நடத்திக் கொண்டுச் செல்லும் போது குடும்பத்தில் மனைவியிடம் ஏச்சும் பேச்சும் வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டு விடுகிறது. ஆண் தேனீ போன்று வாழ விரும்புகிற ஆண்கள் குடும்பத்தில் மதிக்கப்பட மாட்டார்கள்

சோம்பலின் அப்பத்தை புசிக்க நினைக்கக் கூடாது. சுறு சுறுப்புள்ள கையாக ஆண்கள் கைகள் இருக்க வேண்டும். தேவைப்பட்டால் எறும்பினிடம் போய் உட்கார்ந்து உழைப்பின் இரகசியத்தை அறிந்துக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் நீதிமொழிகள் புத்தகம் நமக்கு கற்றுத் தருகிறது. "ஜாக்கிரதையுள்ளவர்களுடைய கை ஆளுகைசெய்யும்; சோம்பேறியோ பகுதிகட்டுவான்" (நீதிமொழிகள் 12:24) கூறுகிறது. நான் குடும்பத்தின் தலைவன் என்னை யாரும் மதிப்பதில்லை என்று வீணாக சண்டையிடாதிருங்கள். உங்கள் மதிப்பை நீங்கள் தான் கெடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். உழைக்காமல் ஊர் சுற்றிக் கொண்டு அலைபவர்களை பெண்கள் ஒரு பொருட்டாக கருதுவதில்லை என்பதை புரிந்துக் கொண்டு பொறுப்பான ஆண்களாக விளங்குங்கள். உங்கள் மனைவி, தாய், பிள்ளைகள் ஏன் கோப்படுகிறார்கள் என்பது புரிகிறதா! புறப்படுங்கள் உழைப்பதற்கு!! 

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி