வேலையே வாழ்க்கையா?


நண்பர் ஒருவர் இல்லத்திற்கு சென்றிருந்தேன். அவர் ஒரு நாளும் ஓய்வு எடுக்காதவர். ஆலயத்தின் வாசற்படியை மிதித்து பல வருடங்கள் ஆகியிருந்தது. அன்று அவர்கள் திருமண நாள். எனவே வாழ்த்துக்கள் கூறினேன். பேசிக் கொண்டிருக்கும் போது அவரது அலைப் பேசியில் பல அழைப்புகள் வந்துக் கொண்டே இருந்தது. அவரது வாழ்க்கையில் வேலையை பிரிந்து ஒரு நாளும் அவர் இருக்கவே இல்லை. அலுவலகத்திற்கு போகா விட்டால் அவருக்கு மன நிலையே சரியில்லாமல் போய் விடும் போல் இறுக கட்டப்பட்டிருந்தார். இப்படிப்பட்டவர்களுடைய குடும்பம் என்பது பல வேளைகளில் சிக்கல்களுக்குள் மாட்டிக் கொள்ளும். மனைவி கணவனைப் பார்த்து வேலை, வேலை என்று அலுவலகத்தையே கட்டிக் கொண்டு குடும்பம் நடத்துகிற உங்களுக்கு மனைவி, பிள்ளை எதற்கு? என்று தான் கேட்பார்கள்.   

வாழ்க்கையில் சிறந்து விளங்கிய infosys நிறுவனத்தின் தலைவர் நாராயணமூர்த்தி அவர்கள் இப்படிப்பட்ட அலுவலக தியாகிகளுக்கு கூறுவது என்னவென்றால்இன்றைய தலைமுறை வேலைத்தான் தனது வாழ்க்கை என்று நினைத்து செயல்படுகின்றனர். வாழ்க்கை என்பது வேலைப் பார்ப்பது மட்டுமல்லஎன்கிறார்.

மேலும் அவர் பரபரப்பாக எப்பொழுதும் Onlineலேயே உலா வருபவர்களைப் பற்றி குறிப்பிடும் போதுஉங்கள் வேலை நேரத்திற்குள்ளாக உங்கள் பணிகளை நிறைவு செய்து விட்டு, பிற காரியங்களுக்காக, குறிப்பாக உங்களுக்காக என்று பிற நேரங்களை செலவு செய்யுங்கள் என்கிறார். புதிய காரியங்களுக்கும், குடும்பத்தோடும், பிள்ளைகளோடும் என நேரத்தை ஒதுக்கி பேசி, விளையாடி, ஊர் சுற்றி மகிழ்ச்சியை டெபாசிட் செய்துக் கொள்ள வேண்டும்” என்கிறார்.

பலவேளைகளில் பண்டிகைக்காலங்களில் கூட சொந்த ஊருக்குச் செல்வது கிடையாது. பெற்றோருக்கு Phone செய்தே நாட்கள் பல போய் விட்டது. பெற்ற தாய், தந்தையுடன் பேசுவதற்கு என்ன இருக்கிறது என்று மறந்துப் போனவர்கள் உறவை பலப்படுத்தி பழைய காரியங்களைப் பேசி மகிழ வேண்டும்.

ஒரு காலத்தில் தாயாரின் முந்தானையையே பிடித்துக் கொண்டு உலகமாக வாழ்ந்த நீங்கள் தாயின் முகத்தை நேரில் பார்த்தே பல நாட்கள் உருண்டு ஓடி விட்டது

வெளி நாட்டில், வெளி ஊரில் பெரிய உயர்ந்த நிலமையில் என் மகன், மகள் இருக்கிறாள் என்று ஊருக்கெல்லாம் சொல்லி மகிழும் பெற்றோரை பார்த்து பேசி மகிழாமல் போவது மட்டுமல்ல, தேட ஆட்களற்று கிராமத்திலே, அல்லது நகரத்திலே தனியாக வாழ்ந்து மூச்சை விட்டு விடுகின்றனர். நாற்றம் அடித்த பின்பு தான் தேட ஆரம்பிக்கும் அவல நிலை பரிதாபத்திற்குரியது தானே.

"ஈசாக்கு தன் மனைவியாகிய ரெபெக்காளோடே விளையாடிக் கொண்டிருக்கிறதை கண்டான்" (ஆதியாகமம் 26:8) என்று திருமறையில் வாசிக்கிறோம். குடும்பத்தோடு தன் நேரத்தை ஈசாக்கு செலவிட்டான். இன்று குடும்பத்தோடு நேரத்தை செலவிட நமக்கு முடியவில்லை. எனவே மனைவி அல்லது கணவன் அல்லது பிள்ளைகள் வேறு யாரோடோமோ தங்கள் நேரத்தை செலவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.   

தங்களது உணர்ச்சிகளைப் பகிர்ந்துக் கொள்ள கணவன் அல்லது மனைவி அல்லது பெற்றோர் தயாராகவில்லை. இதனால் தான் தன்னுடைய உணர்வுகளை புரிந்துக் கொள்ளும், ஆட்களைத் தேடி பலர் சென்று விடுகின்றனர். குடும்ப வாழ்வில் தடம் புரளுவதற்கு காரணமாகி விடுகிறோம் என்பதை உணர்ந்து மகிழ்ச்சியோடு குடும்பத்தில் நேரத்தை செலவிடுவோம். குடும்பம் குட்டி பரலோகமாக காட்சியளிக்கட்டும்.

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி