லட்சியமா? குடும்பமா?

வாழ்க்கையில் லட்சியம் முக்கியமா அல்லது குடும்பம் முக்கியமா என்று சிலவேளை யோசித்துப் பார்க்க வேண்டும். சில வேளை குடும்ப வாழ்விற்காக லட்சியத்தை தியாகம் செய்ய வேண்டும். சில வேளை குடும்பத்திற்காக லட்சியத்தை தியாகம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை ஆனால் குடும்ப வாழ்வு காக்கப்பட வேண்டும்.

திரைப்பட நட்சத்திரங்கள் பலர் லட்சியமே முக்கியம் என்று நினைத்து குடும்ப வாழ்க்கையை இழந்துப் போய்விடுகின்றனர். விவாகரத்து என்பது அவர்கள் வாழ்க்கையில் மிகவும் சாதாரணமானதாக மாறி விடுகிறது. வாழ் நாள் முழுவதும் இணை பிரியாமல் இருப்போம் என்ற நம்பிக்கை அற்றுப்போய் திருமண முறிவு தான் இறுதி தீர்வாக எடுத்து விடுகின்றனர். ஆனால் அவர்களையே பின்பற்றும் எண்ணற்ற இளைஞர்கள், இளம்பெண்கள் வாழ்க்கையிலும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர். 

ஏன் இப்படி ஆடம்பரமாய், செல்வ செழிப்பாய் வாழ்கின்றவர்கள் வாழ்க்கையில் புயல் வீசி வாழ்க்கைப் படகை கவிழ்த்து விடுகிறது? என்று யோசித்துப் பார்த்தால் கணவன் அல்லது மனைவி, பிள்ளைகள் குடும்பம் என்பதை எல்லாம் மறந்து இரவு பகலாக, வாரக்கணக்காக, மாதக் கணக்காக தவம் கிடக்கும் போது உறவுகள் செல்லறித்துப் போய் விடுகிறது. லட்சியம் என்பது முக்கியம் தான். அதற்காக வாழ்க்கையை பலி கொடுத்து என்ன பயன்? வேலை முக்கியம் அதற்காக குடும்பத்தை இழந்து வேலைப் பார்த்து யாருக்கு பயன்?

அதற்காக லட்சியத்தை எப்பொழுதும் காவு கொடுக்க வேண்டும் என்று அர்த்தமில்லை. இலட்சியமும் முக்கியம் தான். 1952 ம் ஆண்டு நீச்சல் வீராங்கனை பிளாரன்ஸ் கிளாட்விக் (Florence Gladwick) கலிபோர்னியா கடற்கரையிலிருந்து கத்தலீனா தீவுக்கு நீச்சல் அடித்து சாதனை படைக்க விரும்பினார். இதன் தூரம் 26 மைல். கடலில் நீச்சல் பயணத்தை ஏறக்குறைய 15 மணி நேரம் கடுமையாக நீந்தி விட்டார். இன்னும் கொஞ்சம் தூரம் தான் ஆனால் எதிர்பாராத பனி மூட்டம் கடல் மீது பரவியதால் தடுமாறினார். முயற்சியை விட்டு பின் திரும்பினார்.

நாட்கள் சில கழிந்தது. உள்ளத்தில் லட்சியத்தை நிறைவேற்றும் வேட்டுவம் பொங்கியது. சில மாதங்களிலேயே மீண்டும் கடலில் குதித்தார். லட்சியத்தை அடைந்தே தீருவேன் என நீந்த, மீண்டும் சாத்தான் போன்று எதிரில் வந்து நின்றது பனி மூட்டம். இந்த முறை அசைந்து கொடுக்கவில்லை பிளாரன்ஸ் கிளாட்விக் (Florence Gladwick). பனிமூட்டத்தினுடாக நீந்தி கத்தலீனா தீவை அடைந்தார்.

கிளாட்விக்கை நிருபர்கள் சூழ்ந்துக் கொண்டு எப்படி இந்த முறை நீங்கள் வெற்றியாய் நீந்தி கரை சேர்ந்தீர்கள்? என்றனர். அதற்கு கிளாட்விக் என் மன கண் முன்னால் கத்தலீனா தீவை நிறுத்தி நீந்தினேன். கரையை அடைந்தேன்  என்றார்.

இவ்வாறு லட்சியத்தை அடையும் வைராக்கியம் வேண்டும். சில வேளை குடும்ப வாழ்வில் ஒற்றுமை குலையாமல் இருக்க லட்சியத்தை விட்டுக் கொடுக்கவும் வேண்டும்.

"உன் கால் நடையை சீர்தூக்கிப் பார். உன் வழிகளெல்லாம் நிலைவரப்பட்டிருப்பதாக" (நீதிமொழிகள் 4:26). நாம் எந்த ஒரு செயலைச் செய்தாலும் நம் குடும்பத்தை பாதிக்குமா? பிரித்து விடும் தன்மை உண்டா? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். தான் செத்து மீன் பிடித்து என்ன பயன்? லட்சியத்திற்காக கர்த்தர் கொடுத்த வாழ்க்கை துணையை, பிள்ளைகளை இழந்து விடக் கூடாது. துவக்கத்திலே அவர்களின் மதிப்புத் தெரியாது. வயதான பின் தான் இப்படிப்பட்ட லட்சியத்திற்காக மதிப்புமிக்க குடும்ப வாழ்க்கையை இழந்து விட்டோமே என்று வருந்த வேண்டிய காலம் வரும்.

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

புத்தியுள்ள மனைவி

உண்மையை உரக்க சொல்வோம்