புதிய கதவை நோக்கி

இளைஞர்கள் பல வேளைகளில் தங்கள் திறமைகளை யாரும் கண்டுக்கொள்வதே இல்லையென்று வருத்தப்பட்டுக் கொள்வார்கள். நான் எல்லாரைக் காட்டிலும் எவ்வளவோ அதிகமாய் கற்று இருக்கிறேன். ஆனால் எல்லாரும் என்னை ஒரு பொருட்டாக எண்ணுவதே இல்லை என்று மனம் ஒடிந்து போய் விடுகின்றனர்.

இன்னும் சிலர் தங்கள் திறமைகளை பலருக்கு முன் எடுத்துக் கூறியும் எந்த Companyயும் புரிந்துக் கொள்ளாத போது இந்த உலகமே இப்படித்தான் என்று vex ஆகிவிடுகின்றனர். அப்படி இருக்கக் கூடாது என்பதற்கு தேசிய கீதத்தை எழுதிய ரவீந்திரநாத் தாகூரே நல்ல ஒரு உதாரணம். 

1913ம் ஆண்டு நோபல் பரிசை தட்டிச் சென்ற முதல் இந்தியராக இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி தான். இந்த நோபல் பரிசு கிடைத்த போது கொல்கத்தாவே விழாக் கோலம் பூண்டது. ஆனால் அவருடைய படைப்புகளை பெரிதாக இந்தியாவில் யாரும் கண்டுக்கொள்ளவே இல்லை! அவருடைய படைப்பான 'கீதாஞ்சலி'யை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததால் தான் உலக மக்கள் அவருடைய அறிவாற்றலைக் கண்டு வியக்க முடிந்தது.

இவ்வாறு உலக பொது மொழியாகிய ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததை சில இலக்கியவாதிகள் நக்கலும், நையாண்டியும் செய்தனர். தனக்கு கிடைக்காதது இந்த தாகூருக்கு கிடைத்ததை பொறுக்க முடியாமல் எப்படி கேவலமாக சித்தரிக்கலாம் என்று எண்ணிய இழிவான இலக்கியவாதிகள் ஆங்கில மொழியில் நமது இலக்கியத்தை மொழி பெயர்ப்பது நியாயமா? என்று அவரை குடைந்தெடுத்தனர்.

எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த தாகூர் அவர்களுக்கு பதிலளித்த போது "கீதாஞ்சலியை என் தாய் நாட்டு மக்கள் கண்டுக்கொள்ளவில்லை, அதை பெரிதாக யாரும் எடுத்துக்கொள்ளவும் இல்லை. எனக்கு மக்கள் கொடுக்க வேண்டிய மரியாதையை யாரும் அளிக்கவும் இல்லை. ஆனால் என் படைப்பின் ஆற்றலை மற்றவர்களாவது புரிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஆங்கில மொழியில் மொழி பெயர்த்தேன். பலமாக தட்டினால் தான் கதவு திறந்து கிடப்பதை அறிய முடியும் என்பதை உணர முடிந்தது" என்று பேசி எல்லாருடைய வாய்களையும் மூடினார்.

உலகத்தில் கோடிக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் ஒரே மாதிரியாகவே தட்டிக் கொண்டிருக்கின்றனர். தட்டப்படாத திறந்து கிடக்கும் வாசல்களை இளைஞர்கள் கண்டு பிடிக்க வேண்டும். இன்றைய உலகத்தின் போக்கைக் குறித்த சரியான கணிப்புகளை நன்றாக தெரிந்துக் கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் பொறியியல் கல்லூரிகள் திறக்கப்பட்டது ஒரு காலம். இப்பொழுது ஒவ்வொன்றாக அடைப்பட்டு வருகிறது இந்த காலம். காரணம் இளைஞர்கள் எல்லாரும் போகிற பாதையில் கஷ்டப்படாமல் போய் விட வேண்டும் என்ற எண்ணத்திலேயே இருந்தனர். புதிதாக தடம் பதிக்க வேண்டும் என்ற வேட்கை யாருக்கு வருகிறதோ அவர்கள் தான் வாழ்க்கையில் உயர்வடைய முடியும்.

"எண்ணமே செயலின் தொடக்கம். திட்டமிடல் எல்லா செயலாக்கத்திற்கும் முன் செல்கிறது" என்கிறது திருமறை (சீராக் 37:15). நல்ல எண்ணங்களும், முன்னேற வேண்டும் என்ற துடிப்பும், இளைஞர்களுக்கு தேவை. இறையச்சத்துடன், இறைவனின் பெயரில் வைக்கிற நம்பிக்கையுடன் புதியனச் செய்ய முற்பட வேண்டும். இறைவன் நல்ல ஞானத்தை உங்களுக்கு கொடுத்து புதியன படைத்தலில் உதவிச் செய்ய வல்லவராக இருக்கிறார்.   

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி