அறியாமல் அடி சறுக்குதல்

 

வாழ்க்கையில் தெரிந்து தான் மனிதன் எல்லா தவறும் செய்கிறான் என்று அல்ல, சிலவற்றை அறியாமையினாலும், சூழல் நிமித்தமாகவும், பிறர் வஞ்சகத்தினாலும் கூட தவறில் மாட்டிக் கொள்வர். ஒரு வேளை இயேசுவானவர் கூட மன்னிப்பு என்பது ஏழு எழுபது முறை என்று கூறியதற்கு ஒரு காரணம் மன்னிப்பு ஒரு முறை, இரண்டு முறை என்று வரையறுத்து வாழ்வை அடியோடு அறுத்து விடக் கூடாது என்பதும் கூட இருக்கலாம்.

குடும்ப வாழ்க்கையைப் பொருத்த வரையில் நானும் எத்தனை முறையோ சொல்லி பார்த்து விட்டேன், இனி வாழ்வதற்கான வாய்ப்பே கிடையாது என்று ஒருவர் சொல்லும் போது, மற்றவர்கள் இல்லை! இல்லை!! இது பிறரின் நய வஞ்சகத்தால், ஏமாற்றினால் நடந்த தவறு என்று கூறுவர். திறமை உடையவர்கள், அறிவாளிகள் கூட பிறரின் நய வஞ்சகத்தை புரிந்துக் கொள்ளாமல் வலையில் தள்ளப்பட்டு விடுகின்றனர். அப்படி ஒரு சம்பவம் அறிவாளியாக அறியப்பட்ட அமைச்சர் தெனாலிராமன் வாழ்க்கையில் கூட நடந்துள்ளது. இவர் மிகவும் தந்திரமும், புத்திசாலியுமானவர். ஆனால் அவரை கூட ஒரு ஒற்றன் அழகாக கவிழ்த்தி விட்டான்.

அரசன் கிருஷ்ண தேவராயரை நேரடியாக வென்று முடிசூட்ட முடியாத அண்டை நாட்டு மன்னன் தன்னுடைய ஒற்றன் வழியாக தந்திரமாக அவரை கொன்று விட முடிவு செய்தான்.

அதற்கு பலிகடா ஆனது தான் அமைச்சர் தெனாலி. அமைச்சரின் உறவுகள் அனைத்தையும் நன்றாக தெரிந்துக் கொண்டு தானும் அமைச்சரின் உறவினர் என்று கூறி நம்ப வைத்து நாடகம் ஆடி வீட்டில் தங்கி விட்டான்.

அமைச்சரின் உறவினர் வீட்டில் திருமணம் ஓன்று நடைப்பெற்ற போது ஒற்றனை வீட்டினை பார்த்துக் கொள்ள சொல்லி விட்டு கிளம்பினர்.

வாய்ப்பை பயன்படுத்திய ஒற்றன் மன்னருக்கு அமைச்சரின் கையெழுத்தைப் போன்று எழுதி "நீங்கள் எமது வீட்டிற்கு வந்தால் ஒரு அதிசயத்தைக் காணலாம்" என்று எழுதி அனுப்பினான்.

அரசருக்கு அமைச்சரின் கடிதத்தைப் பார்த்த உடன் அவருடைய வீட்டிற்குப் போய் அதிசயத்தை காண வேண்டும் என்ற ஆவலில் வீட்டிற்கு வந்தார்.

நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள முயன்ற ஒற்றன் வாளை உருவினான், ஆனால் மின்னல் வேகத்தில் ஒற்றனின் தலையை வாங்கினார் அரசர். 

எதிர்பாராத குற்றச்சாட்டு அமைச்சர் பெயரில் விழுந்தது, “மன்னரைக் கொல்ல சதி திட்டத்தை வகுத்தார் அமைச்சர் என”.

சிக்கிக் கொண்ட அமைச்சருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இறுதியில் மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு முன் கடைசி ஆசை என்ன? என மன்னர் கேட்டார்.  

கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல்,"மன்னா, நான் கிழவனாகி சாக வேண்டும் என்பது என் விருப்பம்" என்றார்.

இதைக் கேட்ட மன்னர் விழுந்து விழுந்து சிரித்தார். இறுதியில் விடுதலைச் செய்யப்பட்டார்.

விவேகம், நீதி, நியாயம், நிதானம் என்பவைகளைக் குறித்து அறிந்துக் கொள்ள நீதிமொழிகள் புத்தகம் நமக்கு உதவியாக இருக்கும் (நீதிமொழிகள் 1:3) என்று திருமறை கூறுகிறது. குடும்ப வாழ்வில் நிதானத்தை நாம் எப்பொழுது இழக்கிறோமோ அப்பொழுது குடும்பம்  சிதைய ஆரம்பிக்கிறது. ஒரு காரியம் தவறுதலாக நடக்குமானால் பொறுமையோடு சிந்தித்து சரிச் செய்ய கால அவகாசத்தை நாம் கொடுக்க வேண்டும். சில பிரச்சனைகளுக்கு காலம் தான் மருந்து. பிரச்சனைகள் என்பது காலப் போக்கில் சரிச் செய்யப்படும்.

பிரச்சனைக்கு உடனே முடிவெடுக்க வேண்டும் என்று முந்தியடித்துக் கொண்டு நீதிமன்ற வாசலை அணுகினால் பிரச்சனை சரியாக்கப்படுவதை விட, பெரிதாகி விடும். “குடும்பத்தில் பொறுமை உள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர் குடும்ப வாழ்வை காத்துக் கொள்வார்கள்"

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி