தூக்கிப்பிடிக்கும் துணை

கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் விட்டுக்கொடுக்காமல் பேச வேண்டும் என்று எதிர்பார்ப்பது உண்டு. சில வேளையில் கணவனின் வீட்டார் மனைவியை குறைத்துப் பேசினால் உடனடியாக கணவர் தலையிட்டு மனைவிக்கு support பண்ண வேண்டும் என்று எதிர்பார்ப்பர். அப்படி நடக்கவில்லையென்றால் மனைவி வீட்டில் வந்து கணவரோடு சண்டைப் பிடிப்பாள். உண்மையில் கணவன் மனைவி இருவரும் பிறரை தூக்கிப்பிடிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது இயற்கை தான்.

போலந்து நாட்டைச் சார்ந்த மேரியும், பிரெஞ்சு மருத்துவரான பியேர் கியூரியும் திருமணம் செய்துக் கொண்டனர். பெண்களை புகழின் உச்சிக்கு கொண்டு செல்ல முடியாத நாட்களிலேயே, தன் மனைவி மேரிக்கு மதிப்புக் கொடுத்து உயர்த்தியவர் தான் பியேர் கியூரி.

ஆராய்ச்சி பணியிலே இருவரும் சேர்ந்து திருமணத்திற்கு பின்பும் பணியாற்றினார்கள். ஆனால் கதிரியக்கம் தொடர்பான ஆராய்ச்சியில் மேரி அதிகமாக ஈடுபடுவதை கண்ட பியேர் தன் மனைவியின் ஆராய்ச்சி வழியிலேயே தன்னை இணைத்து கதிரியக்கம் பற்றிய காரியத்தில் மும்முரமாக இறங்கினார்.

யுரேனியம் போல் 400 மடங்கு அதிகமாக கதிரியக்கம் உடைய ஒரு தாதுப் பொருளை கண்டுப்பிடித்தனர். அதற்கு என்னப் பெயர் வைக்கலாம் என்று யோசித்தப் போது பியேர் கியூரி தன் மனைவியை முக்கியப்படுத்த, மகிழ்ச்சிப்படுத்த எண்ணி போலோனியம் என்று பெயர் வைப்போமா என்று மேரியிடம் கேட்டார். காரணம் மேரி போலந்து நாட்டைச் சார்ந்தவராக இருந்த படியால் புகழ் தன் மனைவிக்குச் செல்லட்டும் என்று எண்ணினார். தொடர்ந்து இருவரும் கதிரியக்க சோதனையின் ஆழத்திற்கு சென்று முத்துக்குளித்தப் போது தான் ரேடியம் என்ற தனிமத்தையும் உலகிற்கு வெளிக்காட்டினர்.

உலகத்தை வியக்க வைத்த இந்த கண்டுபிடிப்புகளுக்காக பியேர் கியூரிக்கு நோபல் பரிசு கிடைக்கும் வாய்ப்பு கிட்டிய போது, தன் மனைவியின் பங்கு மிக அதிகம் என்பதை அழுத்தம் திருத்தமாக மேலிடத்திற்கு தெரிவித்த போது நோபல் பரிசை இருவரும் இணைந்துப் பெற்றுக் கொண்டனர்.

நோபல் பரிசை பெற்ற உடன் போதும் போதும் என்று உட்கார்ந்து விடாமல் தொடர்ந்து உழைப்பில் ஈடுபட்டதால் இரண்டாவது முறையும் கதவைத் தட்டியது நோபல் பரிசு.   இப்பொழுது மேரியின் பெயர் முன்னிலையில் இருந்தது. காரணம் பியேர் கியூரி விபத்தில் எதிர்பாராமல் மரித்து விட்டார். இருப்பினும் தன்னுடைய உழைப்பினால் மட்டும் தான் இந்த உன்னத நிலையை தான் அடையவில்லை. இதன் பின்னணியில் எனது கணவர் பியேரின் பங்கு அளப்பெரியது என்று மேலிடத்திற்கு தெரிவித்தார். வாழ்க்கையில் மேரியும், பியேர் கியூரியும் குடும்ப வாழ்க்கையில் ஒவ்வொரு முறையும் பிறரை உயர்த்துவதிலும், பிறரின் உழைப்பு தான் தன் வாழ்க்கையின் மேன்மைக்கு காரணம் என்பதையும் உணர்ந்தனர்.

ஒவ்வொருவரும் மற்றவர்களை தங்களிலும் மேலானவர்களாக கருதக்கடவர்கள் என்று திருமறை கட்டளையிடுகிறது. நீதிமொழிகள் 31:29ல் கணவன் தன் மனைவியைப் பார்த்து, அனேகப் பெண்கள் குணசாலிகளாயிருந்ததுண்டு; நீயோ அவர்கள் எல்லாருக்கும் மேற்பட்டவள் என்று அவளை புகழுகிறான். மனைவியினுடைய திறமைகளைக் கண்டபோது அவளுடைய நற்குணத்தைப் பாராட்டும் பண்பு அவனுக்குள் வந்துவிடுகிறது. இன்று சில கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் தன்னிலும் குறைவானவர்களாக, மதிப்பு குறைந்தவர்களாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். ஒருவருடைய திறமைகளை மற்றவர்கள் புகழுவது இல்லை.

போட்டி மனப்பான்மையுடையவர்களாகக் காணப்படுவதால் இருவரும் இணைந்து வாழ்க்கையில் உயர வேண்டும் என்ற எண்ணம் குன்றி விடுகிறது. போட்டியாளர்களாக எதிரிகளாக பாவித்து ஒருவரை ஒருவர் வார்த்தையினால் தாக்கி கொள்கிறோம். எனவே சிந்தனையை மாற்றி கியூரி தம்பதியினரைப் போல் துணைகளை தூக்கிப் பிடிப்போம்.

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி