சந்தோஷமாயிருங்க

"கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்" (பிலிப்பியர் 4:4) என்ற வார்த்தையை அடிக்கடி திருமண ஆராதனைகளில் கேட்கலாம். ஏனென்றால் குடும்ப வாழ்க்கையில் கணவன், மனைவி, மாமியார், மாமனார், கொழுந்தன், கொழுந்தி, மைத்துனர் என்று புதிய உறவுக்குள்ளாக நுழையும் போது புரிதல்கள் இல்லாமல் புண்படும்விதமாக பேசி விடுவர்.

ஒரு புறத்தில் புதிதாக வருகிற மருமகளை தன் கைக்குள் வைக்க வேண்டும் என்று திட்டம் போடும் மாமியார். மறுபுறத்தில் computer உலகத்தில் வாழ்கிற நம்மை கற்கால மாமியார் control பண்ணுவதா? என்று எகிறி குதிக்கும் மருமகள்கள். எல்லாம் தெரிந்த என்னை மக்கு மாமியார் மாமனார் control பண்ணுவதா? என்று எரிந்து விழுகிறீர்களா?  

எடுத்தோம் கவிழ்த்தோம் என்று மருமகளோ மாமியாரோ உடனே போர்களத்தில் குதிக்க வேண்டாம். கொஞ்சம் நாள் பொறுமையோடு இருங்கள். உங்களைப் பற்றி நாளடைவில் மற்றவர்கள் புரிந்துக் கொள்வார்கள்.

முதியவர் ஒருவர் டிராமில் பயணம் செய்துக் கொண்டிருந்தார். நடத்துனர் டிக்கெட் கொடுத்து விட்டு மீதி சில்லரையையும் அந்த முதியவருக்குக் கொடுத்தார்.

எண்ணிப் பார்த்த போது சில்லரை குறைவாக இருப்பதை கண்ட அவர், நடத்துனரிடம் sir, சில்லரை குறைவாக இருக்கிறதே என்றார்.

நடத்துனருக்கு சற்று எரிச்சல் வந்தது. அவர் அந்த முதியவரைப் பார்த்து, "உங்களுக்கு சரியாக எண்ணத் தெரியாது என்று நினைக்கிறேன், ஒழுங்காக எண்ணுங்கள்". என்று சொல்லி விட்டு போய் விட்டார்.

நடத்துனர் இந்த வார்த்தையைச் சொன்ன உடன் முதியவருக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. வெளியேயும் காட்டிக் கொள்ளாமல் மனதுக்குள்ளே சிரித்துக் கொண்டார். அந்த முதியவர் வேறு யாருமல்ல அறிவியல் மேதை என்று உலகமே கொண்டாடும் ஐன்ஸ்டின் தான்.

பல வேளை ஒருவருக்குள் இருக்கும் திறமைகளையும், அளப்பெரிய ஆற்றலையும் உணராமல் மட்டமாக நாம் நினைத்து நடத்தி விடுவோம். ஆனால் காலப்போக்கில் தான் ஒருவர் எவ்வளவு சிறந்தவர் என்று மற்றவர்கள் புரிந்துக் கொள்வார்கள்.

புதிதாக வந்த மருமகளை "ஒன்றும் தெரியாதவள்" போல் நடத்தும் மாமியார்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். தங்களது ஆட்சி தான் வீட்டில் நடக்க வேண்டும் என்று வந்த உடன் செங்கோலைப் பிடித்து மருமகளை அடிமையாக, அடி முட்டாளாக எண்ணி பேசவோ, நடத்தவோ கூடாது. உங்கள் மருமகளுக்குள்ளும் சிறந்த நற்பண்புகள், திறமைகள் மறைந்து கிடக்கும். அதைப் பாராட்டி, சந்தோஷப்படுத்துங்கள். பிறகு பாருங்கள், என் மாமியாரைப் போல் உலகில் யாருமில்லை என்று கொண்டாடுவதை! 

"..ஏழு குமாரரைப் பார்க்கிலும் உனக்கு அருமையாயிருக்கிற உன் மருமகள்..." என்று பெண்கள் மாமியாராக விளங்கிய நகோமியைப் பார்த்து கூறுகிறார்கள். மருமகளை அந்த அளவிற்கு நேசித்தவள் நகோமி. அதைப் போல் மாமியாரை அதிகம் நேசித்தவள் ரூத். இருவரும் மற்றவர்கள் நலனில் அக்கரைக் கொண்டவர்களாக காணப்பட்டார்கள். எப்படியாகிலும் மற்றவர்களுக்கு உதவிச் செய்ய வேண்டும் என்ற ஆவல் இருந்தது. இருவரும் பிறரைப் பற்றி எந்த விதத்திலும் குறைக் கூறவில்லை. இக்கட்டான சூழல்களிலும் நாம் அவர்களை விட்டு விடக் கூடாது என்ற நல்ல மன நிலை இருவர்களுக்குள்ளும் வலுவாக இருந்தது. இதன் விளைவு இவருடைய வாழ்க்கையும் மகிழ்ச்சி நிறைந்ததாக மாறியது. கசப்பான வாழ்வு மதுரமாக மாறியது. பட்டுப் போன வாழ்வு, இருவர் வாழ்விலும் துளிர் விட்டு மகிழ்ச்சி ததும்ப ஆரம்பித்தது. குறை கூறுவதிலும் பாராட்டுவதே சிறந்த நற்குணமாக வாழ்க்கையில் வெளிப்பட வேண்டும். (ரூத் 4) 

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

புத்தியுள்ள மனைவி

உண்மையை உரக்க சொல்வோம்