Concentration

மாணவ, மாணவியர்களுக்கு என்று ஆயத்தமாக்கப்பட்டிருந்த நிகழ்ச்சி ஒன்றிற்கு அழைக்கப்பட்டிருந்தேன். பள்ளிப்பருவத்தின் நிறைவு பகுதிக்குள்ளாக கடந்து வந்தவர்கள் அடுத்து என்னப்படிக்க வேண்டும் என்று முடிவெடுக்க வேண்டிய காலகட்டத்தில் இருந்தார்கள். அவர்களிடம் தனித்தனியாக எதிர்கால நோக்கத்தைக் குறித்துப் பேசிய போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

பல மாணவ மாணவியருக்கு தங்களது மதிப்பெண் எவ்வளவு வருமோ அதைப் பொருத்து படிப்பைத் தொடரலாம் என்று அசால்டாக, பதில் அளித்தனர்!

தங்களுக்கென்று வைத்திருந்த Ambitionயை அடைய முடியுமா என்று அவர்களுக்குள்ளே தடுமாற்றம். எனவே Ambition யை அடைய தீவிரம் காட்டுவதைக் காட்டிலும் ஏதாவது ஒரு courseயை தெர்ந்தெடுக்கலாம் என்ற மன நிலைக்கு வந்து விட்டனர். தங்களது விருப்பத்தை அடைவதற்கான தீவிர முயற்சியை எடுக்க விரும்பவில்லை என்பது ஆச்சரியத்தைக் கொடுத்தது.

சௌந்தர், tvயில் எப்பொழுதும் டேபிள் டென்னிஸ் பார்த்து மகிழுவான். ஒரு நாள் தந்தையிடம் போய் நானும் டேபிள் டென்னிஸ் வீரனாக வர வேண்டும். Coaching Centreல் சேர்த்து விடுங்கள் என்றான்.

மகனுடைய விருப்பத்தை நிறைவேற்ற விரும்பிய தந்தை மகனை ஒரு நல்ல பயிற்சி நிலையத்தில் கொண்டு போய் சேர்த்தார்.

முதல் நாள் மகிழ்ச்சியோடு நுழைந்தான். ஒரு பந்தை மட்டையில் கீழே விழாமல் தட்டிக் கொண்டே இருக்கச் சொன்னார் பயிற்சியாளர். தனிமையில் ஒரு அறையில் தட்டிக் கொண்டே இருந்தது அவனுக்கு போர் அடித்து விட்டது.

வீட்டிற்கு விரக்தியோடு வந்தான். ஏம்பா முகம் சோர்வோடு இருக்கிறாய்? என்று தந்தை கேட்ட போது அழாத குறையாக, "அப்பா அவர் என்னை game விளையாட விடவே இல்லை" என்றான்.

அப்படி என்றால் இவ்வளவு நேரமாய் தனியாகத் தான் விளையாடினாயா?, சரி நாளை நான் உன்னோடு வருகிறேன் என்று கூறினார்.

மறு நாள் மகனுடன் பயிற்சி நிலையத்திற்கு சென்றார். சௌந்தரை பார்த்த பயிற்சியாளர் தம்பி, "நேற்று எடுத்த பயிற்சியை இன்றும் எடுங்கள்" என்று கூறி அனுப்பி வைத்தார்.

பின்பு தந்தையிடம், sir, உங்கள் மகன் பெரிய 'டேபிள் டென்னிஸ்' வீரனாக மாறுவதற்கு நான் பயிற்சி கொடுக்கப் போகிறேன். ஆனால் அதற்கு முன் பந்தை கணித்து அடிக்க கவனகுவிப்பு (Concentration) யை வளர்த்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது அதற்கான பயிற்சியளித்து வருகிறேன். இது தான் டேபிள் டென்னிஸ்க்கு முக்கியமானது. இந்த பயிற்சி நன்றாக முடித்த உடன் எந்த விதத்தில் பந்து வந்தாலும் அதை எதிர் கொள்ளும் சக்தியை அவன் பெற்றுக் கொள்வான் என்று கூறி அனுப்பி வைத்தார்.

தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா போன்ற இளைஞர்கள் சாப்பிடுவதிலும், திராட்சரசம் அருந்துவதிலும் முக்கியத்தைக் கொடுத்து உடலை வளர்த்துக் கொள்ளாமல், கட்டுப்பாடான வாழ்க்கையிலும், ஞானம், புத்தியை வளர்த்துக் கொள்வதிலும், இறைவனுக்கு பயந்து நடப்பதிலும் கவனமாக இருந்தார்கள். அவர்கள் கவனமெல்லாம் சரியான பாதையில் செல்ல வேண்டும் என்ற concentration(கவன குவிப்பு) அவர்களிடம் காணப்பட்டது. எந்த விதத்திலும் தவறான வழிகளை பின்பற்றாமல் இறைவனுக்கு அஞ்சி நடக்க முற்பட்டதால் பாபிலோன் மாகாணம் முழுவதற்கும் அதிபதிகளாகவும், பிரதான அதிகாரிகளாகவும் விளங்க முடிந்தது. (தானியேல் 1,2 அதிகாரங்கள்). இன்றைய இளைஞர்கள், இளம்பெண்கள் வாழ்வில் முன்னேற வேண்டுமானால் நல்ல நோக்கம், அதை நோக்கிய பயிற்சி, கட்டுபாடுகள் போன்றவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி