கடவுளின் செயலா?
இளைஞன் ஒருவன் எதிர்பாராதவிதமாக accident ஒன்றில் மாட்டிக் கொண்டான். அவன் அந்த குடும்பத்திற்கு ஒரே ஒரு பையன். அவனின் பெற்றோருக்கு வேறு பிள்ளைகள் கிடையாது. இந்த மகனை மிகவும் பாசத்துடன் வளர்த்தார்கள். ஆனால் எதிர்பாராத விதத்தில் பைக் accidentல் சிக்கி மரித்துப் போனான்.
பெற்றோர்களால் அவன் இழப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எப்பொழுதும் அவன் நினைவாகவே இருந்தனர். சரியான உணவு உண்பதுமில்லை. எதிலும் நாட்டமில்லாமல் கணவன், மனைவி இருவரும் கண்ணீரிலே வாழ்ந்தனர்.
வருடம் ஓன்று முடியும் நிலை வந்தது. அன்று மகனின் நினைவு நாள். இருவருக்கும் துக்கம் மேலோங்கியது. தன் மகன் இல்லாமல் இனி வாழ்வது வீண் என்று எண்ணி இருவரும் தற்கொலைச் செய்துக் கொண்டனர். காரணம் துக்கத்திலிருந்து மீள்வதற்கு வழி தெரியவில்லை.
தாங்கள் நேசித்து வளர்த்த ஒரே மகனை இழப்பது என்பது துயரத்தின் உச்ச நிலை. எதிர் காலமே தன் மகன் என்று வாழ்ந்த பெற்றோருக்கு கண் முன் இருண்டு போன எதிர்காலம் தோன்றியது.
இழப்பு என்பது உடலில் ஏற்படும் ஒரு காயத்திற்கு சமம். உடலில் காயம் இருந்தால் எப்படி வலி கொடுத்துக் கொண்டே இருக்குமோ அதைப் போல் இறந்தவர்களை நினைக்கும் போதெல்லாம் உள்ளம் வலிக்கும். கண்கள் குளமாகும்.
சிலர் இறந்து போனவர்கள் உயிரோடு இருப்பதைப் போல் உணருவர், சிலர் சொப்பனங்களிலும் தாங்கள் இறந்தவர்கள் உயிருடன் இருப்பது போல் உணருவர். எனவே எழுந்ததும் இறந்தவர்களை சுற்று முற்றிலும் தேட ஆரம்பிப்பர். சில வேளைகளில் இப்படிப்பட்டவர்களை நாம் காணும் போது மனநிலைப் பாதிக்கப்பட்டிருக்கிறார்களோ என்று சிந்திக்கத் தோன்றும்.
இறந்தவர்களைப் பற்றிய உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்புகள் இப்படிப்பட்டவர்களுக்கு வழங்கப்படுவது அவசியம். குறிப்பாக துக்க நிவிர்த்தி கூட்டங்கள் நடத்தி இறந்தவர்களைப் பற்றி பேசுவதற்கும், அழுவதற்கும் கூட இடங்கொடுக்க வேண்டும்.
பெற்றோரின் கண் முன் பிள்ளைகள் இறக்குமானால் அது துன்பத்தின் உச்சநிலை. இதனால் சரியான உணவு எடுக்காமல் தங்களைத் தாங்களே மாய்த்துக் கொள்ள விரும்புவர். ஆறு மாதங்களுக்கும் மேலாக அதிகமான துயரம் வாட்டி, தூங்காமல் இருந்தால் நிச்சயமாக மன நல மருத்துவரை அணுகி தூங்குவதற்கு மருந்துகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அதிலும் தற்கொலைச் செய்துக் கொள்ளும் மனம் இருக்குமானால் அவர்களை தனியாக இருக்க அனுமதிக்கக்கூடாது. அவர்களோடு தங்கியிருந்தால் இறந்தவர்களைப் பற்றி பேசி பேசி உணர்வுகளை வெளியாக்கி கொண்டே இருப்பர்.
இறந்தவர்களின் படங்கள், பரிசுப்பொருள்கள், பயன்படுத்தியப் பொருள்கள் போன்றவற்றை எடுத்துக் காட்டி அவர்களைப் பற்றி பேச அனுமதிக் கொடுக்க வேண்டும். அப்பொழுது தான் அதிர்ச்சியிலிருந்து அவர்கள் வெளிவரமுடியும்.
அதை விட்டு விட்டு இந்த accident கடவுளின் செயல், தமக்கு பிரியமானவனை எடுத்துக் கொண்டார் என்று கடவுள் மீது பழியைத் தூக்கிப் போட்டு ஆறுதல் சொல்லக் கூடாது. அப்படிச் சொல்வதால் ஆறுதல் அடைவார்கள் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அவர்கள் கடவுளை வெறுக்க ஆரம்பித்து விடுவர். யோபுவின் நண்பர்கள் இவ்வாறு தான் கடவுளுக்கே வக்காலத்து வாங்கி பேசினர். ஆனால் ஆண்டவர் பார்வையில் அது தேவையில்லாத செயல் (யோபு 42:7). துயரப்படுகிறவர்கள் துயரத்தினால் புலம்புவர். ஆனால் அமைதியுடன் இருந்து கேட்டுக் கொண்டிருந்தாலே அவர்களுக்கு ஆறுதல் தான். காலப்போக்கில் அவர்களிடம் அதிகமாக உறவை வைத்துக் கொண்டு அவர்கள் தங்கள் பணிகளுக்குச் செல்ல ஊக்கப்படுத்துவதே மேலானது. இவ்வாறு செய்யும் போது இழப்பை புரிந்துக் கொள்வது என்பது அவர்கள் வாழ்வில் கொஞ்சம் கொஞ்சமாக நிகழ ஆரம்பிக்கும். எதிர்காலத்தைப் பற்றிய திட்டமிடுதல் என்பது மெதுவாக ஆரம்பித்து வாழப் பழகிக் கொள்வர்.
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள்.
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Comments
Post a Comment